10 மாத குழந்தை

தோழிகள் எல்லோருக்கும் வணக்கம். ஒரு குழப்பம் பொதுவாக 10 மாத குழந்தை என்னவெல்லாம் செய்யும்.தயவுசெய்து சொல்லுங்க.plz...

ஒவ்வொரு குழந்தை ஒவ்வொரு மாதிரி. 'பொதுவாக' என்று போட்டிருக்கிறீர்கள்தான் இருந்தாலும் இப்படிக் கேட்டு, யாராவது சொல்வதை வைத்து நீங்கள் குழம்பிக் கொள்ளக் கூடாது.

இதை விட உங்கள் உண்மையான சந்தேகம் என்னவென்று கேட்டுப் பதில் பெறுவதுதான் நல்லது என்று நினைக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

Imma அம்மா என் பையன் பிறந்து 9 மாதம் 3 வாரங்கள் ஆகிறது.அவனிடம் டாடா சொல் என்றால் கையை ஆட்டுகிறான்.கை தட்டு என்றால் தட்டுகிறான்.தவழுகிறான்.எதையேனும் பிடித்தகொண்டு எழுந்து நின்று சில வினாடிகள் பிடிக்காமலும் நிற்கிறான்.சாப்பாட்டினை பார்த்தால் மம்மம் என்கிறான்.ரொம்பவோ ஒல்லியாக இருக்கான்.ஆனால் வேறு ஒன்றும் பேசுவதில்லை. பாபாபா...என்று சொல்கிறான்.ஆனால் எல்லோரும் உன் பையன் என்ன இப்படி அமைதியாக(சோனியாக)இருக்கான்னு கேக்கிறாங்க.அதனால் தான் கேட்டேன் 10 மாத குழந்தை என்னவெல்லாம் செய்யும் என்று.சொல்லுங்க plz..என் பையன் நல்லா இருக்கானாணு எனக்கே புரியல.அதான் குழப்பமாக உள்ளது.

//எல்லோரும் உன் பையன் என்ன இப்படி அமைதியாக(சோனியாக)இருக்கான்னு கேக்கிறாங்க.// எல்லோரும் என்ன வேணுமானாலும் சொல்லுவாங்க. உங்கள் குழந்தை சரியாகத்தான் இருக்கிறார்.

குழப்பம் வேண்டாம். பிடிக்காம நிற்கிறார் என்கிறீங்க. பல குழந்தைகள் ஒரு வயதின் பின் தான் பிடிக்காமல் நிற்பார்கள்.

எடை கூடுவதற்கு ஆரோக்கியமான உணவாகக் கொடுங்கள். குழந்தைகள் விளையாடும் இடங்களுக்குக் கூட்டிப் போங்க. பார்க்கும் போது இவருக்கும் விளையாடும் ஆசை வரும்.

//எல்லோரும் உன் பையன் என்ன இப்படி அமைதியாக(சோனியாக)இருக்கான்னு கேக்கிறாங்க.// துருதுருன்னு இருந்தா... இதையே மாற்றி என்ன இப்படி துடியாட்டம் போடுறார்! என்பாங்க. யோசிக்காதீங்க.

‍- இமா க்றிஸ்

Imma அம்மா உடனே பதில் அளித்ததற்குநன்றி. என் பையன் எப்போ அம்மான்னுசொல்வான்.கேட்பதற்கு ரொம்பவே ஆவலாக இருக்கேன். என் அண்ணன் பொன்னு 11மாதங்களிலேயே அம்மா,டாடா,காகா,மாமா,அக்கான்னுலாம் பேசினால்.ஆனால் இவன் பாபாபாபா...ன்னு மட்டும்தான் சொல்றான்.கவலையாக இருக்கு.

ஒவ்வொரு குழந்தைகள் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள்.
//என் அண்ணன் பொன்னு 11மாதங்களிலேயே அம்மா,டாடா,காகா,மாமா,அக்கான்னுலாம் பேசினால்.ஆனால் இவன் பாபாபாபா...ன்னு மட்டும்தான் சொல்றான்.கவலையாக இருக்கு.//

ஒப்பிட்டு பேசுவது ,கவலை படுவது ரெம்ப தவறு முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் நிறைய மகிழச்சியான தருணங்கள் கைவிட்டு போகும்.

உங்கள் பங்குக்கு நீங்கள் சொல்லி குடுங்கள் அவர் அதை கிரஹித்து எப்போது வெளிப்படுத்துகிறாரோ அப்போது கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
11 மாசத்தில் கட்டாயம் அம்மா சொல்ல வேண்டும் என்பதில்லை அண்ட் 11 மாசத்தில் அம்மா ,ஆடு,இலை,ஈட்டி எல்லாம் சொல்லும் குழந்தைதான் பின்னாளில் இண்டர்வியூவில் டாண் டாண் என்று பதில் சொல்லும் என்றில்லை.

அவர் ஸ்டைலுக்கு சுதந்திரமா வாயில் வருவதை சொல்லட்டும்.பாபாபா கூட இனிமையா தான் இருக்கு.

ஒத்துழைப்பு குடுத்து பாருங்கள்.சொல்லுவார் .இப்போ சொல்லாவிட்டாலும் நோ கவலை.

பட் சொல்லவில்லை என்பத்ற்காக ஒரு நாளும் கடும் தொனியை உபயோகிக்க கூடாது வெளிப்படுத்தும் ஆசை விட்டுப்போய் இன்னும் அதிகமான நாட்களை எடுத்துக்கொள்வார்கள்.

மேலும் சில பதிவுகள்