சிறு சந்தேகம்

முதல் கர்பத்தின் போதுஇருக்குர அறிகுறிகள் ஏதும் இரண்டாவது கர்பத்தில் இல்லாமல் இருந்து முதலில் பெண் குழந்தை பிறந்தால் அப்போ இது ஆண் குழந்தையாக இருக்குமா??? இது சந்தேகம் மட்டுமே,.. எனக்கு எந்த குழந்தைனாலும் சரி தான். வீட்டில் உள்ள பெரியவங்க எனக்கு முதல் குழந்தைக்கு இருந்த எந்த மசக்கையும் இல்லைன்றதால இது ஆண் குழந்தை தான்னு சொன்னாங்க அதான் கேட்டேன்.

உண்மையில் இந்த அறிகுறிகளுக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

//முதல் கர்பத்தின் போதுஇருக்குர அறிகுறிகள் ஏதும் இரண்டாவது கர்பத்தில் இல்லாமல் இருந்து முதலில் // ஆண் குழந்தை பிறந்து பிறகும் ஆண் குழந்தையேதான் பிறந்துச்சு எனக்கு. :-)

அவையெவையும் எதற்கும் அறிகுறிகள் அல்ல. கர்ப்பகாலத்தின் உடல் மாற்றங்கள் மட்டும்தான்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி எனக்கு யாரும் பதிளிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் பதிலளித்தமைக்கு நன்றி பா. எனக்கு முதல் குழந்தைக்கு வாமிட்டிங் இருந்துச்சு தயிர் சாதம் தவிர வேறு ஏதும் எடுக்க முடியாது ஆனால் இந்த குழந்தைக்கு எந்த இடைஞ்சலும் இல்லை நல்லா பசிக்கும் எல்லாம் சாப்பிடுவேன். அதான் வீட்டுல எல்லாரும் ஆண் குழந்தை தான்னு சொல்லுறாங்க அதான் உங்களிடம் கேட்டேன்

4மாத கர்பமாக இருக்கும் போது நேராக படுக்கலாமா.??? எனக்கு அதான் சவுகரியமாக உள்ளது ஆனால் இவ்வாறு படுக்கலாமா சொல்லுங்க,....

Hi tholi
நேரா௧ படுக்௧ கூடாது என்பது தான் சரி
வலது புறமா௧வோ அல்லது இடது புறமா௧வோ சாய்ந்து படுப்பதே நலன்

பரவாயில்ல ரெம்ப முடியாவிட்டால் ஒரு 5 நிமிசம் நிமிந்து படுக்கலாம்.ஆனால் தொடந்து படுக்க கூடாது உணவும் செருக்காது.தாய்க்கும் சேய்க்குமான இரத்தோட்டமும் சீராக இருக்காது அதுக்காக தான் மல்லாக்க படுக்க கூடாது.எனக்கு டாக்டர் சொன்னதை ஆப்படியே எழுதியிருக்கேன்.

படுக்க கூடாது என்பதை தெரிந்தவர்களுக்கு அப்படித்தான் படுக்க சொல்லும் .முடிந்தளவு தவிர்க்கவும்.

திவ்யா என்ன்னா சாபுடுறிங்க... அதிகமா புளிப்பு காரம் உப்பு சாப்பிட்டால் ஆண் குழந்தை என்றும் இனிப்பு விரும்பி சாபிட்டால் பெண் குழந்தை என்றும் கூறுவார்கள். உங்களுக்கு வாந்தி மயக்கம் குமட்டல் எதும் இல்லையா எப்போது ஆரம்பித்து எப்போது முடிந்தது. இல்லை வரவே இல்லைய ? அபனா நிங்க குண்டா ஆயிடிங்களா ? முதல் குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தால் அடுத்த குழந்தை opposite gender எதிர்பார்ப்பது சகஜமே.. வாழ்த்துக்கள்.

கல்யானி மற்றும் Surejini உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி பா,. நான் கொஞ்ச நேரம் தான் நேரா படுப்பேன் பா.

எனக்கு முதலில் ஒரு குட்டி தேவதை பா... இரண்டாதும் பெண் வேணும் என்று தான் தோன்றுகிறது. ஆண் குழந்தை மீது ஆவல் இல்லை
கிடைத்தாலும் கஷ்டம் பட மாட்டேன்... எங்கள் வீட்டு ஆண்கள் பெற்றவர்களை அவமதிப்பதை பாத்து ஆண் குழந்தை மீது ஆசை வரவில்லை.. எனக்கு வாந்தி சுத்தமா இல்லை பா. முதல் பாப்பாக்கு 5மாதம் வரை வாந்தி பன்னினேன்.ஏதும் விரும்பி சாப்பிட மாட்டேன். 5மாதத்திற்கு அப்பறம் கொஞ்சம் காரம் சேர்த்தாலும் அன்று நாள் முழுதும் நெஞ்சு எரிச்சல் இருக்கும் அதனால் என் கர்ப காலம் முழுதும் தயிர் தான் சாப்பிட்டேன். இப்போ அப்படி இல்லை நல்லா பசிக்கும் காரமா புளிப்பா சாப்பிட மனம் ஏங்குது. முதல் குழந்தைக்கு மாங்காய் சாப்பிட்டது இல்லை ஆனால் இப்போ மாங்காய் மிளகாய் தூள் சேர்த்து சாப்பிடுகிறேன்.

//எங்கள் வீட்டு ஆண்கள் பெற்றவர்களை அவமதிப்பதை பாத்து ஆண் குழந்தை மீது ஆசை வரவில்லை.// எல்லா ஆண்களும் இப்படி இல்லை. உங்கள் குழந்தை அப்படி இருக்கும் என்றும் நினைக்க வேண்டாம். வளர்ப்பில் நிறைய இருக்கிறது. உங்களால் நிச்சயம் நல்ல விதத்தில் சொல்லிக் கொடுத்து வளர்க்க முடியும். தவிர... இது வேறு காலம். சொல்லாமலே குழந்தைகள் நிறைய நல்ல விடயங்களைப் புரிந்துகொள்ளுகிறார்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்