Tholi enaku 2girl babys
1st baby l.k.g patikiral, 2nd babyku 2 years old.
Enka unti enaku 2nd delivery la aarampitha problems ennum
mudiyala
Enka kuta marage aanavanka ellarukum paien poranthi ku
enkaluku mattum 2 பெண்குழந்தை௧ள் nu manam kasta patura mathiri
Peasuranka
Avanka mattum Ella ma unti relatives sila per 2 பெண்குழந்தை௧ள்
la na ketkuranka
periya vankala ennala athirthu peasa mudiyala
athavathu pesina problems vanthiru entru peasama vanthiru vaen
home la vanthu aluvaen yaen nu theriyala tholi
rompa kastama eruku
கல்யாணி
//unti// என்னவென்று புரியல. இருந்தாலும் அது தெரியாமலே நீங்க என்ன சொல்ல வர்றீங்க என்று புரியுது. கஷ்டம் போக வழி - பொறுமையா இருக்கிறதுதான். யோசிக்காதீங்க. இது கொஞ்சம் சிக்கலான விஷயம். நீங்க சரிசெய்ய பெரிதாக எதுவும் செய்ய முடியாது. இன்னொரு குழந்தைக்கு முயற்சித்தாலும்... அதுவும் பெண்ணாகப் பிறக்கலாம். யார் என்ன சொன்னாலும், காதில் போட்டுக் கொள்ள வேண்டாம்; கண்டுக்காதீங்க. இதெல்லாம் எங்க கைல இல்லாத விஷயம். சொல்றவங்க சொல்லிட்டுப் போகட்டும். விடுங்க. எதிர்த்துப் பேச வேண்டாம். ஆனால் அழவும் தேவையில்லை. அவங்க புரியாமப் பேசுறாங்க. தைரியமா இருங்க. பொண்ணுங்க என்றால் குறைச்சலா என்ன! பசங்களுக்கு எந்த வைகையிலும் சளைத்தவர்களல்ல இந்தக் காலத்துக் குழந்தைகள்.
உங்க குழந்தைகள் உங்கள் மேல் பாசமா இருப்பாங்க. உங்களை அவங்களும் உங்கள் கணவரும் புரிந்துகொண்டால் போதும். மற்றவர்கள் பேச்சைப் பற்றி நினைத்து மனம் நொந்து போக வேண்டாம்.
- இமா க்றிஸ்
Pen kulandhaigal kadavulin
Pen kulandhaigal kadavulin aasirvadham. Adhu ungalukku nirayave kidaithirukku. Periayavangalai edhirthu pesamal iruppadhu nalla palakkamdhan. But unga manasula enna nenaikaringalo adha amaidhiya sollalam. don't worry.
கல்யாணி
Unti means மாமியார் என்று நினைக்கேன் சரிதானே... இம்மா அவங்க சொன்ன மாறி பெண் குழந்தைகள் எதற்கும் யாருக்கு குறைந்தவர்கள் அல்ல,. பேசுற வாய பேச தான் செய்யும்னு சொல்லுவாங்க. அதற்காக நீங்கள் கவலை படாதிங்க. இப்படி வருத்தம் படுவது உங்களோடு அல்லாமல் குழந்தைகளையும் பாதிக்கும் பா. அடுத்தவர் பேச்சுக்கு நாம் பயந்தால் நாம் வாழ முடியாது பா... எதையும் ரொம்ப யோசிக்காதிங்க. குழந்தைகளை நன்றாக வளர்த்து காட்டுங்கள்.. அதுவே வாய் பேசுறவங்களுக்கு போதும் பா.. உங்கள் பதிவை படித்ததும் உங்கள் உறவினர் மேல் கோபமா வருது
கல்யாணி
உங்கள் இழையை பார்த்து என்னால் பதிவிடாமல் போக முடியவில்லை காரணம் நாங்கள் எங்கள் வீட்டில் 4 பெண்கள்.எல்லோரும் என் அம்மாவை பார்த்து எப்படிதான் வளர்க போகிராயோ?எப்படிதான் படிக்க வைக்கபோகிராயோ எப்படிதான் கல்யாணம் செய்யபோகிராயோ? என்றார்கள்.எங்க அம்மா யார் பேச்சையும் காதில் போட்டு கொள்ள வில்லை எங்களை நல்ல படியாக வளர்த்தார்கள்.படிக்க வைத்தார்கள். நல்ல இடத்தில் திருமனம் முடித்தார்கள்.எங்களுக்கு அப்பா இல்லை நான் 7வது படிக்கும் பொதே இறந்து விட்டார். நினைத்து பாருங்கள் என் அம்மா பட்டிருக்கும் கஷ்டங்களை,எங்கள் 4பேருக்கும் ஆண் பிள்ளைகள் தான்.எனவெ மனதை தைரியமாக வைத்து கொள்ளுங்கள் மா.பெண் ஆண் இரண்டு குழந்தைகளும் சமமானவரே/
இந்த உலகமே இப்படிதான்.உங்கள் முழு கவனத்தையும் உங்கள் குழந்தைகள் மேல் வையுங்கள் எல்லாம் சரியாகி விடும்.
ஏமாறாதே|ஏமாற்றாதே
imma amma
Hi amma epti erukinka?
Answer pannathuku thanks ma
mamiyar enpathai than unti entru sonnaen ma
enaku pasanka ellanu oru nalum kasta pattathae ellama
Enaku amma kitaiyathu frist baby pirantha pothu en amma
enaku kitaitha mathiri feeling
2nd ponnu pirantha pothu Santhosam than
Mamiyar, Relatives, peasum Pothu Mattum kavala patuvaen
en life far en ponnum, en kanavarum than
amma ellatha kuraiyai en kanavar parthu kondar
Evanka epti peasum pothu mattumae feeling aakituvaen
Ma
neenka soltrathu sari than ma
priya
Nantri tholi
tholi
Dhivya, karpakam
answer pannathuku nantri tholi
ethuku nu oru group erukuma tholi
கண்டிப்பா, குழந்தை
கண்டிப்பா, குழந்தை இல்லைனாலும் பேசுவாங்க, பெண் குழந்தை பிறந்தாலும் பேசுவாங்க, அவங்களுக்கு எதாச்சும் சொல்லனும்,
கல்யாணி
//Enka kuta marage aanavanka ellarukum paien poranthi ku
enkaluku mattum 2 பெண்குழந்தை௧ள் nu manam kasta patura mathiri
Peasuranka //
உங்கள் பிரச்சனைக்கு காரணம் 2 பெண்குழந்தைகள் பிறந்தது கிடையாது நீங்கள் தான். உண்மையில் உங்களுக்கு 2 பெண்குழந்தைகள் கிடைத்திருப்பது அளவு கடந்த மகிழ்ச்சியாக இருப்பின் அதை சம்மந்தப்பட்டவர்களிடம் வெளிக்காட்டுங்கள்.
குறிப்பிட்ட விசயத்தால் உங்களை நோகடிக்க முடியாது ,அது நீங்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட விசயம் ,ஏதாவது சொன்னாலும் அதை நீங்கள் எடுத்துக்கொள்ளப்போவதில்லை உங்கள் பாட்டுக்கு மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியும் பட்சத்தில் எதுவும் பேச மாட்டார்கள்.வருடக்கணக்காக பேசுகிறார்கள் என்றால் நீங்கள் அதற்கு ரியாக்ட் பண்ணி அவர்கள் பேச்சுக்கு வெற்றியளித்து இருக்கிறீர்கள்.
//home la vanthu aluvaen yaen nu theriyala tholi //
நீங்கள் சொன்ன இந்த விசயத்தை வைத்து தான் சொன்னேன். ஏன் நீங்கள் அழ வேண்டும்.இதில் உங்கள் தப்பு என்ன.
ஒரு உதாரணம் சொல்கிறேன்.
உண்மையிலேயே எனக்கு 2 தேவதைகள்.ஆனால் சொந்த பந்தம் நட்புகளிடம் இருந்து கேட்கும் வார்த்தைகள் எனக்கு இன்னும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாவே இருக்கு.நாங்கள் சகோதரிகள் வளர்ந்த முறை தெரிந்த எல்லாரும் சொல்வார்கள், என்ன 2 பெண் குழந்தைகளா ???கடவுள் உனக்கு அள்ளிக்குடுத்திருக்கிறார் பார்.உங்களை மாதிரி கை கோத்து கொண்டு பிரண்ட்ஸ் ஆ இருப்பினம் என்பது போன்ற வார்த்தைகள்.என் மாமியார் சொல்வார் 2 மகாராணிகள் ,மகா
லட்சுமிகள் என்று.
இதிலிருந்து என்ன தெரியுது உங்களுக்கு??அவர்கள் நல்ல பார்வையில் நோக்குகிறார்கள்.ரெஸ்பக்ட் குடுக்கிறார்கள்.இல்லையோ?
அப்போ உங்களுக்கு கேலி பண்ணுபவர்கள் நல்ல கோணத்தில் நோக்கவில்லை .தவறாக சிந்திக்கிறார்கள் என்று தானே அர்த்தம்.
அவர்கள் தப்பாக இருப்பதற்கு நீங்கள் ஏன் அழவேண்டும்.
அவர்கள் இப்படி ரெஸ்பக்ட் இல்லாமல் நடந்து கொள்வதற்கு வீட்டுக்கு வந்து தனிமையில் அழவேண்டாம் . தனிமையில் அவர்களை கேலி பண்ணி சிரித்து விடுங்கள்.
உண்மையில் எதிர் பாலின பிள்ளைகளை விட ஒத்த பாலின சகோதரர் சகோதரிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
இனிமேல் ஒரு நிமிடம் கூட கவலைப்பட கூடாது.குட்டிகளுடன் ஆடி பாடி சந்தோசமாக இருங்கோ.கவலைப்பட்டு அடுத்தவர்களின் தேவையற்ற பேச்சுக்களுக்கு உங்கள் சந்தோசங்களை மட்டுமல்ல சில நொடிகளை கூட விரயம் பண்ணக்கூடாது இந்த மாதிரி கேலி பேசும் தகுதி அற்றவர்களுக்காக.
கவலையை விடுங்க தோழி
கவலையை விடுங்க தோழி உங்களுக்கு இரண்டு தேவதைகள் கிடைத்துள்ளனர் அவர்கள் வளர்ந்து பெரிய நல்ல நிலையில் இருக்கும் போது இப்படி கதைத்தவர்கள் யோசிப்பார்கள் கவலை வேண்டாம். உங்களை பற்றி கதைப்பவர்கள் தாங்கள் பெண் என்பதை மறந்துவிட்டார்கள் போல