
தேதி: March 9, 2016
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 20 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 10 நிமிடங்கள்
மொத்த நேரம்: 30 நிமிடங்கள்
பருப்புக் கீரை - 1 கட்டு
பாசிப்பருப்பு - 1/4 கப்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 4 பல்
தக்காளி - 1 (பெரியது)
மிளகாய் வற்றல் - 4
கடுகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும். கீரையை (கூட்டு செய்யக் கூடிய ஏதாவது ஒரு கீரை) சுத்தம் செய்து கொள்ளவும். பாதி தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக வெட்டவும்.

குக்கரில் பருப்பை வேக வைத்து கொள்ளவும். அடுத்து கீரை, பாதி தக்காளி, பாதி வெங்காயம், பூண்டு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு எடுத்து ஆறியதும், மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய் தாளிக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.

மிளகாய் தூள் வாசம் மாறியதும், பருப்பையும், கீரையையும் சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

சுவையான பருப்புக் கீரை கடையல் தயார். சாதத்தில் பிசைந்தும், பக்க உணவாகவும் சாப்பிடலாம்.

பருப்பு அதிகம் சேர்த்து கீரையை மிக்சியில் போடாமல் கையில் மசித்தும் இதே முறையில் செய்யலாம்.
Comments
பருப்பு கீரை
வித்யாசமான செய்முறையா இருக்கு அபி! நல்ல குறிப்பு!
அன்புடன்,
மகி
பருப்புக்கீரை
பருப்புக்கீரயில் என்ன செய்யலாம் என கூகுளில் தேடிக்கொண்டிருக்கும்பொழுது அருமையான பருப்புக்கீரை கடையல் கண்ணில் பட்டது இன்று சமைத்ததும் அருசுவை ஃபேஸ்புக்கில் படம் போடுகிறென்
மகி அக்கா
தேங்க்ஸ் அக்கா.. கருத்து சொல்லிட்டு எனக்கும் இன்பார்ம் பண்ணதற்கு மிக்க நன்றி...
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
சங்கீதா
நன்றிங்க.. செய்து பார்த்திட்டு சொல்லுங்க..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
பருப்புக்கீரை கடைசல்
அருமையான ஈஸியான ரெசிபி செம டேஸ்டி்Thanks abi sister
jaibunnisha
செய்து பார்த்திட்டு சொன்னதற்கு மிக்க நன்றி...
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
வணக்கம். பருப்புக்கீரை
வணக்கம். பருப்புக்கீரை என்றால் என்ன?
VANAKAM
அபி
எனக்கும் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது.படத்தைப் பார்க்க... கங்குன் கீரை போல இருக்கிறது. அதுதானா?
- இமா க்றிஸ்