Please Help me

I am new to this website, already oru baby iruku normal than conceive agi normal delivery than apram oru vati abortion panniten, athuku apram enaku irregular period problem vandhu du chu, doc kita consell panniten, again baby kaga wait panrom, theriyama panna thappula ivlo prob, last time mulaikatiya pasi payaru sapta nallathunu potu irundhinga last month athai sapten correct ah period ayiduchu, so please help me to regularize period and to conceive, please tell me the solution for my problem dear sister,

//last time mulaikatiya pasi payaru ... sapten correct ah period ayiduchu,// இது உங்களுக்கு ஒத்து வருது என்றால் திரும்பவும் அதையே ட்ரை பண்ணுங்க. உணவுதானே! இதனால் சிக்கல் எதுவுமே வராது. நான்கைந்து மாதங்கள் சரியான தேதிக்கு வர வைத்தால் பிறகு உடம்பு பழகிரும். தேதிக்கு சரியா வரும்.

நடந்து முடிஞ்சதை இனி நினைக்காதீங்க. அதை மறந்துட்டு சந்தோஷமா இருக்கப் பாருங்க. ஆரோக்கியமா சாப்பிடுங்க.

‍- இமா க்றிஸ்

Thank you sister. again conceive aga mudiyatho nu oru kavalai iruku.

ம்.. அந்தப் பயம் இல்லாம இருக்காது. என்ன பண்ணப் போறீங்க!

யோசிக்காம இருங்க. சரியோ தப்போ, தெரிஞ்சோ தெரியாமலோ... ஏதோ ஒரு காரணத்தால பண்ணீட்டீங்க. இனி அதையெல்லாம் நினைச்சுப் பார்க்கிறதால வலியும் பயமும்தான் மிஞ்சும். விட்டுருங்க. எனக்குத் தெரிஞ்சு கலியாணம் ஆகும் முன்னால் அடுத்தடுத்து குறைஞ்சது இரண்டு குழந்தைகளையாவது இப்படிக் கலைச்ச தம்பதிகள் கலியாணத்தின் பின் எந்தப் பிரச்சினையும் இல்லாம ஆரோக்கியமான 3 குழந்தைகளைப் பெற்றெடுத்தாங்க. (இப்படி சொல்றதை வைச்சு, நான் கருக்கலைப்பை ஆமோதிக்கிறதா நினைக்கப் படாது இதைப் படிக்கிற யாரும். ஏற்கனவே நொந்து போயிருக்கிறவங்க மனசை நானும் நோகடிக்கப்படாது இல்லையா!)

ஆனது ஆகியாச்சு. இனிப் பயந்து ஆகப் போற நல்லது எதுவும் இல்லை. நம்பிக்கையோட இருங்க சுனிதா.

‍- இமா க்றிஸ்

Romba thanks pa.

வணக்கம்
எனக்கு ஒரு சந்தேகம்
என்னோட கடைசி மாதவிலக்கு 2 மாசி மாதம்.
இந்த மாதம் எனக்கு இன்னும் வரவில்லை.
நான் நிறைய தடவை home pregnancy test (urine test)
செய்து பார்த்தேன். நேற்றும் பார்த்தேன் negative என்று வருகிறது.
நான் கர்ப்பமாக இருக்கிறேனா இல்லையா என்று எப்படி
தெரிந்துகொள்ள?
என்னோட மாதவிலக்கு 28-30 நாட்கள் சீரான மாதவிலக்கு தான்.
பதில் சொல்லுங்கள் தோழி.

நல்லவருக்கும் தங்கத்திற்கும் சோதனை அதிகம்

திருமனத்தில் மனமகள் கட்டும் மஞ்சள் நிற புடவைக்கு முந்தி அடிக்கரனுமா? சீக்கிரம் பதில் சொல்லுங்கள் தோழிகளே.

Pls yaravathu answer pannunga.

நல்லவருக்கும் தங்கத்திற்கும் சோதனை அதிகம்

// நான் கர்ப்பமாக இருக்கிறேனா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்ள ??// பக்கத்தில உள்ள டாக்டரிடம் அல்லது லாப் க்கு போய் பிளட் செக் பண்ணி பாருங்கோ .வே று எதுவும் செய்ய முடியாது .திரும்ப திரும்ப வீட்டில் டெஸ்ட் பண்ணுவது வேஸ்ட் .

உதவி தேவைப்படும் சகோதரிகள், உதவுங்கள் / அவசரம் / ஹெல்ப் ப்ளீஸ் என்று தலைப்புப் போடாமல் இழைத் தலைப்பு & இங்கு கமண்ட்டுக்குக் கொடுக்கும் தலைப்பு இரண்டு இடத்திலும் இடுகையுடன் தொடர்பான வார்த்தையைக் கொடுத்தால் பார்க்கிறவங்களுக்கு சுலபம். பதிலும் கிடைக்கும்.

அல்லாவிட்டால் உள்ளே என்ன கேள்வி இருக்கும் என்று ஊகிக்க முடிவது இல்லை. பல சமயம் இது ஏற்கனவே பதில் சொன்ன கேள்வியாகத்தான் இருக்கும் என்று திறந்து பார்க்கத் தோன்றுவதில்லை.

‍- இமா க்றிஸ்

நன்றி surejini
நான் திங்கள் கிழமை Doctor கிட்ட appointment எடுத்திருக்கிறேன்.

நல்லவருக்கும் தங்கத்திற்கும் சோதனை அதிகம்

மேலும் சில பதிவுகள்