karu Muttai

க௫முட்டை நன்கு வளரவும் நிறைய க௫முட்டை உற்பத்தியாகக்கூடிய இயற்கையான உணவுகள் எவை?

//க௫முட்டை நன்கு வளர// இதைக் கேட்பது ஏன் என்று புரிகிறது.

//நிறைய க௫முட்டை உற்பத்தியாகக்கூடிய இயற்கையான உணவுகள் எவை?// உண்மையில்... பெண் குழந்தைகள் பிறக்கும் போதே கருமுட்டைகளோடு (1 முதல் 2 மில்லியன் கருமுட்டைகள்)தான் பிறக்கிறோமாம். கலியாணத்திற்குப் பிறகு சாப்பிடும் உணவுகளாலோ மருந்துகளாலே கருமுட்டைகள் 'உற்பத்தியாகுவது' இல்லை.

‍- இமா க்றிஸ்

Enaku karu nirkavum karu muttai neraya uruvaga dan ketan. Intha agum endra nambikkai iruku.

கருமுட்டை வளர என்று மேலே சர்ச்பாக்ஸ்ல போட்டு தேடுங்க. 5 பக்கம் காட்டுது. எப்படியும் 10 த்ரெட்டிலாவது பதில் இருக்கும்.

‍- இமா க்றிஸ்

//க௫முட்டை நன்கு வளரவும் நிறைய க௫முட்டை உற்பத்தியாகக்கூடிய இயற்கையான உணவுகள் எவை?//

அறுசுவையில் தேடியதில் பாசிப்பயறு என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள். தேவையுள்ளவர் தேடும்போது தான் இன்னும் பலன்.தேடிப்பாருங்கள்.

யெஸ்ஸ்ஸ் அதையே தான் நானும் சொல்வேன் கருமுட்டை பற்றிய அடிப்படை விளக்கத்தின்படி இம்ஸ் சொன்னதுபோல் கருமுட்டைகள் பிறப்பிலேயே வரும்.
சிலர் கருமுட்டை இல்லாமல் பிறப்பதுண்டு நானே இதுவரை 5 பேர் வரை சந்தித்து இருக்கிறேன்.
மிக மிக சிலருக்கே இப்படி நடக்கும் .ஆனால் அப்படி இல்லாதவர்களுக்கு தானத்தை தவிர எந்த உணவோ மருந்தோ உற்பத்தி பண்ணவைக்க முடியாது என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இருப்பினும் எத்தனை ஆயிரக்கணக்கான கருமுட்டைகள் இருந்தாலும் மாசம் ஒன்றுப்படி 28 அல்லது 31 நாட்கள் வளர்ந்து வெளியேறும் ஒரு கருமுட்டைதான் கரு உற்பத்திக்கு உதவுகிறது.

ஹார்மோன் இஞ்ஞக்‌ஷன் குடுத்து டாப்லட்ஸ் எல்லாம் குடுத்து கருமுட்டைகளை வளரச்செய்யும்போது ( கவனிக்கவும் வளர ,உற்பத்தியாக்க என்று சொல்லவில்லை} நீங்கள் கேட்பதுபோல் நிறைய கருமுட்டைகள் ஒரே நேரத்தில் இயல்புக்கு மாறாக வளர்ந்தால் உதாரணமாக 20 வரை கூட வளரும் ஊசி மாத்திரைகளால், அதில் ஒரு கருமுட்டை கூட கருத்தரிக்கும் அளவுக்கு ஆரோக்கியமாக இருக்காது.அதைவிட வயிற்று வலி வரும் .வயிரு உப்பலாகும்.அதனால் டாக்டர்களே நிறைய வளர விடாமல் ஸ்கான் பண்ணி மாத்திரை ஊசிகளை கம்மி பண்ணி நிறுத்தி கன்ரோல் பண்ணுவார்கள்.

ஐ வி எவ் ட்ரீட்மண்ட் க்கு கூட 2.0 அல்லது2.1 மில்லி மீட்டர் சைஸ் கருமுட்டைகள் 5 ற்குள் வளர்ந்தால் போதுமானது.

ஆகவே நீங்கள் நிறைய கருமுட்டை எதிர்பார்ப்பது தப்பு என்று சொல்கிறேன்.

வழக்கம் போல ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்.தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள்.மனதை ரிலாக்ஸ் ஆ வைத்திருங்கள். டாக்டர் சொல்படி கேளுங்கள் அதுவே போதுமானதாக இருக்கும்

மேலும் சில பதிவுகள்