.

.

மற்ற தளங்களில் இருப்பதை இங்கே பேஸ்ட் பண்ண அனுமதி இல்லை.. இது எங்கே இருந்து காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கிறீர்கள் என்பது தெரியும்.. தயவு செய்து காப்பி பேஸ்ட் செய்து அறுசுவையின் தரத்தை கெடுக்காதீர்கள்.. நன்றி

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நீங்கள் புதியவர். அறுசுவை நிபந்தனைகள் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஒரு தடவை படிச்சுப் பார்க்க வேணும். இப்போதைக்கு... இந்த போஸ்ட்டில் உள்ள தகவலை டிலீட் பண்ணுங்க. உங்க சொந்த வார்த்தைல எழுதிப் போஸ்ட் பண்ணுங்க. த்ரெட் ஆரம்பிச்சவங்களுக்கு மாற்றும் ஆப்ஷன் இருக்கும்.

செந்தில்... வதந்திகளை நம்பாதீர். :-)

//சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் மரபணுக்கள் சார்ந்த நிறைய குறைபாடுகள் ஏற்படுகின்றன// புரியல. 'மரபணுக்கள்' இயல்பாக பெற்றோரிடமிருந்து வந்தவை இல்லையா! சிசேரியனால் அதை எப்படி மாற்ற முடியும் என்கிறீர்கள்!! குழந்தை உலகைப் பார்க்கும் அந்தக் கடைசி நிமிடத்தில் அதன் மரபணுக்களை எதனாலும் மாற்ற இயலாது. அவை நிர்ணயிக்கப்படுவது கரு வளர்ச்சியின் ஆரம்பக் காலத்தில்.

//உலகின் அதிபயங்கர கிரிமினல் குற்றவாளிகள் சிசேரியன் மூலம் பிறந்தவர்கள்// கர்ர்ர்... நம்பும் கூட்டத்தில் மத்தியில் பிரபலமாக, அதற்கேற்ப எதையாவது யாரோ சொல்லி வைத்திருக்கிறார்கள். சிந்திக்காமல் நீங்களும் அதை இங்கே போட்டு வைத்திருக்கிறீர்கள். ;( இங்க இருக்கிற சின்னவங்க தேவைக்கு மேலயே பயந்து போய் இருக்கிறவங்களா இருக்கிறாங்க. நீங்களும் பயமுறுத்தி வைக்காதீங்க. ;-) உலகத்திற்கு சிசேரியன் முறை வர முன்னால இருந்த மக்கள் மத்தியில் கூட நீங்க சொல்ற 'அதி பயங்கர கிரிமினல்கள்' இருந்துதான் இருக்கிறாங்க.

சிசேரியன் மூலம் பிறந்த நல்லவர்கள் இல்லையென்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு... இல்லையில்லை... அந்த போஸ்ட்டைத் தட்டிய ஆளுக்கு நல்லதாகச் சொல்லக் கூடிய உதாரணங்கள் கிடைக்கவில்லை.

குழந்தைகள் தீயவர்களாக வளர்வதற்கான காரணங்கள் வேறு.

//உலகின் அதிபயங்கர கிரிமினல் குற்றவாளிகள் சிசேரியன் மூலம் பிறந்தவர்கள் என்பதை இங்கு கவனத்தில் கொண்டு மரபுவழி சுக பிரசவத்திற்கு முயலுங்கள்// ;)) சுகப் பிரசவம் என்றால் என்ன!! சத்திரசிகிச்சை வழியிலோ, இயற்கை முறையிலோ எப்படிக் குழந்தை பிறந்தாலும் சுகப் பிரசவமும் ஆகலாம்; பிரச்சினையான பிரசவமும் ஆகலாம்.

‍- இமா க்றிஸ்

//மற்ற தளங்களில் இருப்பதை இங்கே பேஸ்ட் பண்ண அனுமதி இல்லை//: மன்னிக்கவும் எனக்கு இதை பற்றி எதுவும் தெரியாது உங்களால் முடிஞ்சா delete பண்ணிடுங்க

//சொந்த வார்த்தைல எழுதிப் போஸ்ட் பண்ணுங்க//: சொந்தமா எழுத முயற்சி பண்றேன் நன்றி

நானே முழுசா அழிச்சிட்டேன்

மேலும் சில பதிவுகள்