குழந்தை பாக்கியம் ஹெல்ப் pannunga friends... please

தோழிகள் அனைவருக்கும் வணக்கம்,

ரொம்ப மனவருத்ததுடன் உங்களிடம் பேசுகிறேன்.... எங்களுக்கு திருமணம் ஆகி 7 வருடம் ஆகப்போகிறது.. ஆனால் இன்னும் குழந்தை இல்லை. 2013 இல் எனக்கு ETOPIC PREGNANCY ஏற்பட்டு அதில் என்னுடைய LEFTSIDE FALLOPIAN TUBE REMOVE பண்ணிட்டாங்க... ரைட் சைடு tube நல்ல இருக்குனு டாக்டர் சொல்றாங்க.. அதற்கு பிறகு நாங்கள் நிறைய மெடிக்கல் treatment எடுத்துட்டோம்.. ஆனாலும் positive ரிசல்ட வரவில்லை... .. 4 டைம்ஸ் IUI பண்ணோம்.. but positive நியூஸ் கடைகல... இரண்டு தடவை கர்பரஷ்ஷபிகை கோவில் சென்று நெய் சாப்பிட்டோம்... ஆனாலும் அந்த அம்மன் எங்களுக்கு கருணை கட்ட வில்லை ரொம்ப வருத்தமா இருக்கு friends
முன்னாடி எனக்கு PCOS இருந்துச்சி அப்புறம் medicine எடுத்ததுக்கு அப்பறமா எங்க ரெண்டு பேருக்கும் உடம்பு ல பிரச்னை இல்லை டாக்டர் சொல்லிட்டாங்க.....
ஒரு சில பேர் பேசுறத கேட்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு....... கடைசியா IVF பண்ணலாம்னு முடிவு எடுத்து இருக்கோம்.. அதனால தான் இங்க வந்து உங்களோட suggestion கேக்குறேன்....
நாங்க இன்னும் சில மாதம் வெயிட் பண்ணலாமா ?? இல்ல treatment ஸ்டார்ட் செய்யலாமா ?? தயவு செய்து எனக்கு அட்வைஸ் பண்ணுங்க.. என்னோட வயது 27.... என்னுடையா கணவன் வயது 31.

நன்றி

ஹேமா ரமேஷ்

IVF செய்வதற்கு முடிவு எடுத்திருக்கிறீர்கள் என்றால் காத்திருக்காமல் போகலாம் என்பது என் அபிப்பிராயம்.

//நாங்க இன்னும் சில மாதம் வெயிட் பண்ணலாமா ?? // பண்ணலாம். உங்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினை... இரண்டாவது பலோப்பியன் குழாய் நீக்கப்பட்டிருப்பதால், நீங்கள் மூன்று மாதங்கள் காத்திருந்தால், கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் 2 மாதங்கள் அல்லது 1 மாதம் மட்டும்தான் இல்லையா! பீரியட்ஸ் ஒழுங்காக வந்தாலும், ஒன்று விட்டு ஒரு மாதம்தான் நீங்கள் இயற்கை முறையில் கருத்தரிக்கலாம்.

கணவரின் வயது பிரச்சினை இல்லை எப்பொழுதும். உங்கள் வயது கூட அதிகம் இல்லை. ஆனால் உங்களுக்கு வருடத்தில் 6 மாதங்கள்தான் கருத்தரிக்கும் சாத்தியம் இருக்கும். ஒரு குழந்தை மட்டும் போதாது இல்லையா! அதனால் இப்பொழுதே சிகிச்சைக்குப் போகலாம். சிகிச்சையில் காத்திருப்பு அதிகம் இருக்கும். அதைப் பற்றி யோசிக்காமல் தொடருங்கள். இதைப் பற்றி உங்கள் டாக்டரிடமும் ஒரு முறை பேசிப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

//ரொம்ப மனவருத்ததுடன் உங்களிடம் பேசுகிறேன்// வருத்தமான விஷயம்தான் ஆனாலும் கவலை படாதீங்கோ .மனதை முடிஞ்ச அளவு திசைதிருப்புற மாதிரி பிஸியா வச்சிருங்கோ.இந்த பிரச்சனைக்கு மனதை வருத்துறது நல்லதில்ல.தாமதத்துக்கான காரணத்தில் இதுவும் சேர்ந்து விடக்கூடும்

// 4 டைம்ஸ் IUI பண்ணோம்.. but positive நியூஸ் கடைகல...//

ஐ யூ ஐ சக்ஸஸ் ரேட் குறைந்த ஒரு ட்ரீட்மண்ட்தான் கவலை வேண்டாம்.சாதாரண கருத்தரித்தலுக்கும் ஐ யூ ஐ க்கும் மிகப்பெரிய வித்தியாசம் கிடையாது.

சாதரண கருத்தரித்தலில் ஒரு ஸ்பேம் தானாக செலக்ட் ஆகி நீந்தி சென்று தன்னை சுத்தம் செய்து கருமுட்டைக்குள் ஊடுருவும்.

ஐ யூ ஐ ல் ஸ்பேம் லாப் ல் செலக்ட் பண்ணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு மெல்லிய குழாய் மூலம் நீந்திச்செல்வதற்கு ஏதுவாக சிறிது காற்றுடன் உள்தள்ளப்படுகிறது.

அதற்குமேல் அது கருமுட்டையை சேர்வதும் வளர்வதும் சாதாரண கர்ப்பம் போன்ற செயல்பாடுதான்.

ஸ்பேம் ல் பிரச்சனை உள்ளவர்களுக்கு பலனளிக்க கூடியது.பட் நீங்கள்தான் 2 பேருக்கும் பிரச்சனை இல்லை என்று சொல்லி இருக்கிறீர்களே.

அதுவே மிகப்பெரிய ஆறுதல்தான்.மனதை வருத்த வேண்டாம்.

//நாங்க இன்னும் சில மாதம் வெயிட் பண்ணலாமா ?? இல்ல treatment ஸ்டார்ட் செய்யலாமா ?? //
முதல்ல மனசை நல்ல ரிலாக்ஸ் ஆ வையுங்கோ.மனசுக்கு பிடிச்ச இடங்களுக்கு தனிய 2 பேரும் போய் வரலாம்.நீங்கள்தான் உங்கள் வாழ்க்கை அடுத்தவர்கள் பேச்சும் கருத்தும் கிடையாது.தினமும் அரை மணி நேரம் நல்லா மூச்சை இழுத்து விட்டு சுத்தமான காத்து பிடிக்க கூடியதா வாக்கிங் போய் வாங்கோ.
உடம்பும் மனசும் ரெடியானதும் ஐ வி எவ் ஸ்டாட் பண்ணுவது நல்லது.அது ஒரே மாதத்தில் கூட சாத்தியம்.

மற்றும்படி மேல மிகச்சிறந்த விளக்கம் கிடைத்திருக்கிறது

அக்கா,கவலைபடதிங்க,7வருசம் வெயிட் பண்ணிட்டிங்க இன்னும் சில மாதம் வெயிட் பண்ணுங்க,கண்டிப்ப அந்த கர்ப்பரக்ஷம்பிகை அருளால் நல்ல செய்தி சொல்லுவிங்க,சொல்லுரப்ப சுவிட் கொடுக்க மறக்கதீங்க

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

நன்றி பாரதி, அம்மனின் அருளுக்குகாக காத்துஇருக்கேன். Sweet கண்டிப்பா நேர்ல வந்து தருகிறேன்

Change the way you look at women's success

மிக்க நன்றி தோழி, நான் ஒரு 3 மாதம் வெயிட் பண்ணலாம் னு நனைகுற.. கண்டிப்பா மனசு நிம்மதியா இருந்தாலும் யாரவது குழந்தையா பத்தி கேட்டு பீல் பண்ண வச்டுரங்க.. இந்த மன்றத்துக்கு வந்த அப்பறம் கொஞ்சம் ரிலாக்ஸ் அஹ பீல் பண்ற. என்னை போல நிறைய தோழிகள் இருகாங்க

Change the way you look at women's success

அன்பிற்குரிய இமா,

உங்களுடைய கருத்துக்கு நன்றி. நான் சென்னை ல இருக்கேன்.. 3 மாதம் கழித்து IVF ட்ரை பண்ணலாம்னு இருக்கேன். எனக்கு நல்ல டாக்டர் refer பண்ண முடியுமா?? (ஆகாஷ் தவிர்த்து) உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருகங்கள??

நன்றி ( வெறும் வார்த்தை அல்ல...

Change the way you look at women's success

அக்கா,நீங்க சென்னையில் எங்கு இருக்கிங்க?,நான் பர்க்கும் டாக்டர் கைரசி அனவங்க,வென அவங்கலா ஒரு தடவ பருங்கலென்

கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி

பாரதி நான் சென்னை மதுரவாயல் ல இருக்கேன்..

Change the way you look at women's success

அன்புள்ள‌ ஹேமாவிற்கு நீங்கள் மாதவிலக்கிற்கு முன்னால் 10 நாள்களும், பின்னால் 10 நாள்களும் கொடிப்பசலைக் கீரையை
(சிவப்புக் கொடிப் பசலைக் கீரை கொம்பு மரம் என்று எதிலும் ஏறிப்
படர்ந்து வளரும் இது 30 ஆண்டுகள் வரை வாழும் தன்மையுடையது.
நல்ல‌ பராமரிப்பு இருந்தால் நன்கு வளரும், வீடுகளில் மட்டுமே
வளரும். சந்தையில் கிடைக்காது.) அதிகக் காரம் போடாமல்
கூடுமானவரை பாசிப் பருப்பு சேர்த்து சாம்பார், கூட்டு, பொரியல்,
கடைசல், சூப் என்று ஏதோ வகையில் சாப்பிட்டு வாருங்கள்.
குறைந்தது ஒரு மாதமாவது உண்ண‌ வேண்டும், அப்படி உண்டால்
குறைகள் நீங்கி கட்டாயம் குழந்தைப் பேறு கிடைக்கும் என்று சித்த‌
மருத்துவக் குறிப்பில் (நெட்டில்) பார்த்தேன். முயன்று பாருங்கள்.
ஊதா நிறத்தில் பழங்களையும் உள்ளே மிளகு சைசில் விதைகளயும்
உடையது. விதைகள் ஏறக் குறைய‌ 10 நாள்களிலேயே முளைக்கும். மலை வேம்புச் சாறு குடித்துப் பாருங்கள். அறுசுவைத் தோழிகள் பலருக்கு நல்ல‌ பலன் கிடைத்துள்ளதாக‌ கூறியுள்ளனர்.ஈசன் அருளால் விரைவில் தாயாக‌ வாழ்த்துக்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

ரொம்ப நன்றி அம்மா... கொடிபசலை கீரை கடைகளில் கிடைக்காதுன்னு சொல்ரிங்கம்மா. நர்செரி ல போய் கேட்கலாமா? நாட்டு மருந்து கடைகளில் மலைவேம்பு பொடி கிடைக்கறது.. அதை குடிக்கலாமா?? தயவு செய்து சொல்லுங்கம்மா.... நன்றி

Change the way you look at women's success

மேலும் சில பதிவுகள்