ஊருக்கு போகிறொம்

ஹலோ தோழிகளெ
என் 2 வயது குழந்தைக்கு மொட்டை போட மதுரைக்கு போகிறொம் அங்கு என் சித்தி வீட்டில் 1 நாள், பாட்டி வீட்டில் 1 நாள் என 3 நாட்கள் இருக்க‌ போகிறோம். நான் குழந்தைக்கு காலையில் சத்துமாவு கஞ்சி ஊட்டுவேன். மாட்டுபால் கொடுப்பேன். ஆனால் ஊருக்கு சென்று கஞ்சி, பால் இதெல்லாம் கொடுக்க‌ முடியுமா என‌ தெரியவில்லை. இதற்க்கு பதில் வேறு என்ன‌ கொடுக்கலாம் குழந்தைக்கு எளிதாக‌ செய்ய‌ கூடிய‌ உணவுகள் இருந்தால் சொல்லுங்கள்

//ஊருக்கு சென்று கஞ்சி, பால் இதெல்லாம் கொடுக்க‌ முடியுமா என‌ தெரியவில்லை.// கொடுக்கலாம் கீதா. 2 நாட்கள்தானே! தேவையான உலர் பொருட்களை எடுத்துப் போங்க. //இதற்க்கு பதில்// ஏதாவது கொடுக்கிறதானாலும் நீங்க எடுத்துப் போகத்தானே வேணும். பால்... போகிற இடத்தில் கிடைக்காமலிருக்காது. சந்தோஷமா போய்ட்டு வாங்க.

‍- இமா க்றிஸ்

பிள்ளைக்கு இரண்டு வயது ஆகுதே. சாப்பாடே தரலாம். பால் பாக்கட் பயன்படுத்தலாம் மாட்டு பால் கிடைக்காட்டா. 2 நாள் தானே... கவலையே வேண்டாம். இமா சொன்னாப்பல கஞ்சி மாவு கொண்டு போய் செய்துக்கங்க, உங்க வீடு தானே. காலையில் இட்லி கொடுக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்