
தேதி: April 6, 2016
பரிமாறும் அளவு: 4 நபர்கள்
ஆயத்த நேரம்: 15 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 45 நிமிடங்கள்
மைதா - 4 தேக்கரண்டி
கோகோ பவுடர் - 1 தேக்கரண்டி
பொடித்த சீனி - 3 தேக்கரண்டி
வெஜிடபிள் ஆயில் - 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
பால் - அரை கப்
ப்ரூட் ஜாம் - 2 தேக்கரண்டி
தேவையானவற்றை எடுத்து கொள்ளவும்.

மைக்ரோவேவ் பவுலில் மைதா, கோக்கோ பவுடர், சீனி பேக்கிங் பவுடர் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்.

அதனுடன் பால் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும். மேலே ஆயில் சேர்த்து கலக்கவும்.

கலவையை மைக்ரோவேவில் 1 நிமிடம் வைத்து எடுக்கவும்.

1 நிமிடத்தில் எடுத்து மேலே ப்ரூட் ஜாம் வைத்து மேலும் 30 செகண்ட் வைத்து எடுக்கவும்.

சுவையான ப்ரூட் ஜாம் கேக் ரெடி..

Comments
அபிராஜசேகர்.
ரொம்ப நல்லா இருக்கு தோழி . வாழ்த்துக்கள்.,
அஸ்மா
மிக்க நன்றிப்பா...
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
ஜாம் கேக்
ஈஸியா இருக்கே! யாராவது விசிட்டர்ஸ் வரும்போதுதான் ட்ரை பண்ணணும். :-) ட்ரை பண்ணீட்டு சொல்றேன்.
- இமா க்றிஸ்
ஜாம் கேக்..
ட்ரை பண்ணிட்டு சொல்லுங்கம்மா.. என் மகளுக்கு ஜாம் ரொம்ப பிடிக்கும்.. அதனால் ஜாம் வைத்து பண்ணேன்.. :) :) :)
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
abirajasekar
intha seimuraiyai microwave ilamal eppadi seivathu? athavathu microwave ilathavarkal epadi seivathu? pls sollunga nangalum try panrom
மணிமலர்
இது ரொம்ப சிம்பிள்.. குறைந்த அளவிலான கேக்.. விருப்பப் பட்டால் குக்கரில் செய்யலாம்.. குக்கரில் உப்பு போட்டு ஸ்டாண்ட் வைத்து கேக் கலவைபாத்திரத்தை வைத்து பண்ணலாம்..
அல்லது கேக் கிண்ணத்தை பாயில் பேப்பர் வைத்து மூடி இட்லி போலவே க வைக்கலாம்.. இது அப்சரா அக்காவின் குக்கர் கேக் ரெசிப்பி விளக்கப் படங்களுடன் இருக்கு.. பாருங்கள் :) :) நன்றிப் பா.. ட்ரை பண்ணி சொல்லுங்க..
29502 இந்த நம்பரை சர்ச் பாக்லில் போடுங்க.. ரிச் கேக் (குக்கர் முறை) வரும்.. லிங்க்பேஸ்ட் ஆகலைப்பா எனக்கு.. :)
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
அபிராஜசேகர்
நீங்க சொன்னதை சர்ச் செய்து பாத்தேன். தெளிவான விளக்கம் படங்களுடன் இருந்தது. குக்கர் முறையில் உங்கள் ஈஸி ப்ரூட் கேக் செய்முறையை செய்து பார்க்கிறேன்... உங்கள் கேக் முறை ரொம்ப ரொம்ப ஈஸியா இருக்கு பா.. ரொம்ப தேங்க்ஸ் பா.