கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

Crispy Chilli Chicken

தேதி: April 11, 2016

பரிமாறும் அளவு: 4 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 40 நிமிடங்கள்

மொத்த நேரம்: 50 நிமிடங்கள்

4
Average: 3.8 (23 votes)

 

சிக்கன் - 1 கிலோ
மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 4
எலுமிச்சை - அரை மூடி
கலர்பொடி - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
கருவேப்பிலை - 2 ஆர்க்கு
உப்பு - தேவைக்கேற்ப


 

காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக இடித்து கொள்ளவும்.
சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசறி பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.
2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் வைக்கவும்.
வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்..

காரம் அதிகமானால் சிறிது எலுமிச்சை பழச்சாற்றினை பிழிந்துவிடவும்.
நன்கு மொறு மொறு என்று வேண்டுமென்றால் மிதமான தீயில் சற்று அதிக நேரம் வேகவிடவும். தீ அதிகமாக இருந்தால் சிக்கன் கருகிவிடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்க அழகா இருக்கு. :-)

‍- இமா க்றிஸ்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா.. பார்க்க அழகா இருக்கு// :) :) :) :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

சிக்கன் சூப்பர் கண்டிப்பா ட்ரை பன்னுவேன் அபி தோழி..

பெயரை மட்டும் பார்த்திருந்தால் உள்ளே வந்திருக்க மாட்டேன் அபி. அந்த கடைசி படம்... புராதன காலத்து, தோலில் செய்த டைவிங் ஃபேஸ் மாஸ்க் போல இருக்கவும்தான் உள்ளே எட்டிப் பார்த்தேன். :-))

‍- இமா க்றிஸ்

நன்றிப்பா... ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க எப்படி இருந்தது என்று..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

எனக்கும் அப்படித்தான் மா தெரிந்தது.. கடைசி படம் எடுக்க அதிக வெளிச்சத்தினால் ரொம்ப கஷ்டப்பட்டேன். வேறு ஒரு படமும் அனுப்பினேன்.. டீம் இதே போட்டுட்டாங்க..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

Fantastic receipies..i want how to make mutton kulambu madam