கர்ப்பம்

Period Diary, Fertility Friend, Menstrual Calender இவற்றில் எது க௫த்தரிக்கும் நாட்களை துல்லியமாக அறிந்து கொள்ளமுடியும்?

unga kelvikana pathil namma arusuvai home pagelaye "karutharika ugantha natkalai kanakidal" nu oru page varum atha click pani unga last period date kudunga varum...

ஆங்கிலத்துல தேடினா வராது. மணிமலர் சொன்ன த்ரெட் லிங்க் எடுத்துக் கொடுக்கிறேன். http://www.arusuvai.com/tamil/node/27790 முகப்புலயே இருக்கு.

‍- இமா க்றிஸ்

Enakku January matham 1 thethium, February matham 1 thethium Period vanthathu. Aanal enakku march matham 18 thethi period vanthathu. Eppa enakku sollunga karumottai veliyil varum nallai arinthu kolvathu eppadi.karutharkka etta nal ethu endru sollunga. Enathu udambu Heat Body. Enathu udamba kulirchia vaithu kolvathu eppadi Pls help me.

எனக்கு இப்போது 22 வாரம் ஆகிறது. 19 வது வார தொடக்கத்திலேயே எனக்கு அசைவு தெரிய ஆரம்பித்தது. ஆனால் எப்பவாவது தான் அசைவு தெரிகிறது. இப்படித்தான் இருக்குமா? Frequent movement எப்போதிலிருந்து இருக்கும். தெளிவுபடுத்துங்க தோழிகளே

//ஆனால் எப்பவாவது தான் அசைவு தெரிகிறது. இப்படித்தான் இருக்குமா?// ஆமாம். இது பிரச்சினை இல்லை.

//Frequent movement// என்பது எது என்று நீங்கள் நினைத்து வைத்திருப்பது எதுவென்று தெரியவில்லை. இத்தனை மணித்தியாலத்திற்கு ஒரு முறை / இத்தனை நிமிடங்களுக்கு ஒரு முறை... இப்படிக் கணக்குச் சொல்ல முடியாது.

குழந்தை பிறந்த பின்னால் ஆரம்பத்தில் அதிக நேரம் தூங்குவாங்க. மெதுவாக தூங்கும் நேரம் குறையும். இது எப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசமோ அது போலதான் உள்ளே இருக்கும் போது அசைவதும்.

இப்போ உங்கள் குழந்தை நன்றாக இருப்பதாகத் தான் தெரிகிறது. யோசிக்க வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

நான் கொடுத்த லிங்கில் போய்ப் பாருங்க. மார்ச் 18, 2016 என்று தேதி கொடுத்தால் தானாகத் தேதிகள் சொல்லும்.

//Enathu udambu Heat Body.// இது பற்றிய என் அபிப்பிராயம்... மனிதர் எல்லோருக்கும் உடல்வெப்பநிலை ஒன்றுதான். அதற்கு மேல் போனால் அதைத்தான் காய்ச்சல் / ஜுரம் என்கிறோம். உடல் வெப்பநிலை அதிகரித்து இருக்கும் இன்னொரு நிலை - ஹைப்பர்தேமியா. நீங்கள் சொல்வது இது இல்லை.

நீங்கள் வெப்பமாக உணரும் சமயம் குளிப்பது, நீர்த்தன்மை அதிகம் கொண்ட பழங்களைச் சாப்பிடுவது, பழரசங்கள் அருந்துவது உங்கள் சங்கடத்தைக் குறைக்கும். சில க்ரீம்கள் சருமத்திற்குக் குளிர்ச்சியை உண்டுபண்ணும்.

‍- இமா க்றிஸ்

நன்றி அம்மா. உங்கள் பதிலை பார்த்து தெளிவாக உள்ளது. எனக்கு diabetic உள்ளதால்,அதனால இப்படி இருக்குமோ என்று குழப்பத்தில் இருந்தேன்.diabetic control ல் தான் உள்ளது,இருந்தாலும் பயம். ஐந்தாம் மாத ஸ்கேனில் நார்மல்தான். அடுத்து 20 ம் தேதி செல்ல வேண்டும். Abnormal என்றால் உடனே செல்லலாம் என்றுதான் பதிவிட்டேன்.

சொன்ன தேதிக்கு போங்க. டாக்டர் சொல்ற மாதிரி நடந்துக்கங்க. யோசிக்காம சந்தோஷமா இருங்க. எல்லாம் சரியா இருக்கும். :-)

‍- இமா க்றிஸ்

mathavidai sularchi natkal ethannai endru koduppathu enakku kulappamaga irrukudu.

//January matham 1 thethium, February matham 1 thethium Period vanthathu.// அப்படியானால் உங்கள் வழமையான சுழற்சி 30 நாட்கள். முன்பும் இது போல தான் இருந்திருக்கும் இல்லையா!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்