நோர்வேயில் பெர்டிலிட்டி ட்ரீட்மென்ட்

நான் 8 மாதங்களாக நோர்வேயில் (oslo) வசித்து வருகிறேன். என்னவரின் வேலை காரணமாக இன்னும் ஒரு வருடம் இங்கு தான் இருப்போம். எனக்கு திருமணம் முடிந்து 2 1/2 வருடம் முடிந்தது. நான் கர்ப்பம் ஆவதற்கு முயற்சிக்கிறேன். ஆனால் கருத்தரிக்கவில்லை. எனவே நோர்வேயில் ட்ரீட்மென்ட் எடுக்கலாம்னு நினைகிறேன். இங்கே யாரிடம் ஆலோசனை கேட்பது என்று தெரியவில்லை. நோர்வேயில் வசிக்கும் நிறைய தமிழர்கள் அறுசுவையில் உறுப்பினர்களாக இருப்பது பார்த்து ஒரு நம்பிக்கை வந்தது, என் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று. அதனால் இங்க பதிவிடுறேன்.

நோர்வேயில் பெர்டிலிட்டி ட்ரீட்மென்ட் சென்டரை எப்படி தொடர்பு கொள்வது?
இங்கு appointment வாங்கி தான் டாக்டரை பார்க்க முடியுமா ?
இந்தியாவில் எடுத்த report இங்க காமிச்ச accept பண்ணுவாங்களா ?

ஒஸ்லோ வில் இருப்பவர்கள் வந்து பதிலளிப்பார்கள்.அதன் முன் எனக்கு தெரிந்த பொதுவான விடயங்களை சொல்லி வைக்கிறேன்.ஒஸ்லோ பெர்டிலிட்டி செண்டர் அல்லது ஒஸ்லோ ஐ வி எவ் செண்டர் ஐ கூகிளில் டைப் பண்ணி பாருங்கள்.அவர்கள் என்ன செய்ய வேண்டும் எப்படி அணுக வேண்டும் எவ்வளவு பணம் கட்ட வேண்டும் எவ்வகையான இன்சூரன்ஸ் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தங்கள் பக்கங்களில் விபரம் கொடுத்திருப்பார்கள்.ஈமெயில் ல் விபரம் கேட்கும் வசதியும் செய்திருப்பார்கள்.
ஆனால் நீங்கள் டாக்டரை பாத்து இது பற்றி எனக்கு எந்த விபரமும் தெரியவில்லை என்று சொன்னாலே மேலோட்டமாக கொஞ்ச அறிவுரைகள் கொடுப்பார்.சில ஆரம்ப கட்ட பரிசோதனைகளையும் செய்து அந்த ரிப்போட் படி நீங்கள் பெர்டிலிட்டி செண்டர் ல் அல்லது ஹாஸ்பிட்டலில் ட்ரீட்மண்ட் தொடரலாம் என்று நினைக்கிறேன்.

இந்தியாவில் காண்பித்த ரிப்போட்ஸ் சிலதை ஏற்றுக்கொண்டாலும் பெரும்பாலும் மறுபடி பரிசோதித்து அந்த றிப்போட் படிதான் ட்ரீட்மண்ட் ஆரம்பிப்பார்கள்.அண்ட் பொதுவாகவே பெர்ட்டிலிட்டி ட்ரீட்மண்ட் க்கு அந்த மாச ரிப்போட்ஸ் தான் தேவைப்படும். 8 மாசத்துக்கு முன் எடுத்தது தேவைப்படாது.

எனது கேள்விகளுக்கு பொதுவான விஷயங்களை சொன்னதற்கு நன்றி surejini mam. நீங்கள் சொன்னது போல் google இல் தேடி பார்கிறேன். மேலும் ஒஸ்லோவில் உள்ளவர்கள் தகவல்கள் சொன்னால் சுலபமாக இருக்கும்.

What is not happened today will happen tomorrow :-)

//மேலும் ஒஸ்லோவில் உள்ளவர்கள் தகவல்கள் சொன்னால் சுலபமாக இருக்கும்.//

மேலே தலைப்பில் போட்டால் யாராவது எட்டிப் பார்ப்பார்கள் கவிதா. உங்கள் லக் எப்படி என்று பார்க்கலாம். :-)

1 வருடம்தான் இருக்கப் போறீங்க. காத்திருக்காமல் நீங்களே ஒரு நம்பரைத் தேடி ஃபோன் பண்ணுங்க. ஒரு ஆரம்பமாக இருக்கும். தொடர்ந்து எங்கே போக வேண்டும் என்னும் தகவல் கிடைக்கலாம். அங்கே அருகில் தமிழ் கம்யூனிட்டி க்ரூப் ஏதாவது இருந்தால் அவர்களிடமும் விசாரிக்கலாம்.

‍- இமா க்றிஸ்

எனக்கு லக் இருக்கானு பாக்கலாம். தமிழ் community இருக்கானு பாக்குறேன் mam.

நான் இங்கே தனியாக இருப்பதால் ரொம்ப கஷ்டமா இருக்கு. அடுத்த மாதம் இந்திய போகலாம் ட்ரீட்மென்ட் அங்கே எடுத்துக்கலாம் னு சந்தோசமா இருந்தேன். ஆனால் இன்னும் ஒரு வருஷம் இங்க தான் இருக்கணும்னு சொல்லிட்டாங்க. அதை நினைக்கிறப ரொம்ப கஷ்டமா இருக்கு. இன்னும் conceive ஆகலன்னு தோணிட்டே இருக்கு. அது நினைக்க கூடாதுனு தெரியும் ஆனாலும் நினைக்காமல் இருக்க முடியல. இங்க வேறு எந்த‌ பொழுதுபோக்கு கிடையாது. மனதை வேறு பக்கம் திசை திருப்பவும் முடியல.

நோர்வேயில் இருக்கறவங்க தயவுசெய்து உதவி பண்ணுங்க.

What is not happened today will happen tomorrow :-)

மேலும் சில பதிவுகள்