கூட்டாஞ்சோறு பகுதியில் இணைவது எப்படி?

கூட்டாஞ்சோறு பகுதியில் இணைவது எப்படி?

அறுசுவை நேயர்கள் பலரும் மின்னஞ்சல் மூலமாக கேட்கும் கேள்வி இது. எப்படி என்பதை மற்றொரு பக்கத்தில் விளக்கி, அதற்கான இணைப்பினை நீங்களும் பிரபலம் அடைய வேண்டுமா என்றத் தலைப்பில் அறுசுவையின் முதல் பக்கத்திலேயே கொடுத்துள்ளோம் ( <a href="node/1769" target="_blank"> எப்படி இணைவது </a> ). இருப்பினும் இந்த கேள்வி மீண்டும் மீண்டும் வருவதால், இங்கே விளக்கமான பதிலை கேள்வி-பதில் பாணியில் கொடுக்க விரும்புகின்றேன்.

1. கூட்டாஞ்சோறு பகுதியில் யார் இணையலாம்?

அறுசுவையில் பெயர்ப்பதிவு செய்துள்ள ஆண், பெண் யார் வேண்டுமானாலும் கூட்டாஞ்சோறு பகுதியில் இணையலாம். பெயர்ப்பதிவு அவசியம்.

----------------------------------------

2. என்ன தகுதிகள் இருக்கவேண்டும்?

உங்களுக்கு சமையலில் நல்ல அனுபவம் இருக்க வேண்டும். குறிப்புகளை சொந்தமாக கொடுக்கும் திறன் இருக்கவேண்டும். முக்கியமாக, தமிழில் குறிப்புகள் கொடுக்கத் தெரிந்திருக்கவேண்டும். இங்கே தமிழில் என்பதை கொஞ்சம் அழுத்தி சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த தளம் முழுமையும் தமிழில் இருப்பதால், தமிழில் மட்டுமே குறிப்புகளை வெளியிட அனுமதி. குறிப்புகளை எழுத்துப் பிழை இல்லாமல், சற்று விளக்கமாக கொடுக்கவேண்டும்.

----------------------------------------

3. எனக்கு தமிழில் டைப் செய்ய தெரியவில்லை. ஆங்கிலத்தில் அனுப்பினால் நீங்கள் அதனை மொழிப்பெயர்த்து வெளியிடுவீர்களா?

மன்னிக்கவும். தற்போதைய சூழலில் அது இயலாத காரியம். அறுசுவை ஆரம்ப காலத்தில் இதனை நாங்கள் செய்தாலும், வேலைப்பளு அதிகமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் மொழிப்பெயர்ப்பு செய்தல் இயலாத காரியம் ஆகிவிட்டது. பொருளாதார ரீதியில் அறுசுவை வெற்றி பெறும்போது மொழிப்பெயர்க்க தனி ஆட்களை நியமிக்கவியலும். தற்போது மிகவும் கடினம். அப்படி தமிழில் டைப் செய்ய இயலாதவர்கள் சிறிது காலம் பொறுத்திருங்கள். விரைவில் (எத்தனை விரைவில் என்று கேட்காதீர்கள்:-)) அறுசுவை ஆங்கிலப் பதிப்பு வெளிவர உள்ளது. நீங்கள் அதில் நிச்சயம் பங்கேற்கலாம்.

----------------------------------------

4. தமிழில் டைப் செய்வது எப்படி? எனக்கு தமிழ் டைப்பிங் தெரியாதே?

கவலை வேண்டாம். அது மிகவும் எளிதானது. இந்த அறுசுவை தளத்திற்காக ஆயிரக்கணக்கானப் பக்கங்கள் டைப் செய்துள்ள எனக்கும் தமிழ் டைப்பிங் தெரியாது. தற்போது கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுத்துவரும் பலருக்கும் தமிழ் டைப்பிங் தெரியாது. ஆனால், phonetic method typing ஐ பழக்கத்தில் மிக எளிதாக கற்றுக் கொள்ளலாம். அதற்கென ஒரு உதவிப் பக்கம் ஏற்கனவே அறுசுவையில் உள்ளது. <a href="http://www.arusuvai.com/tamil_help.html" target="_blank"> எழுத்துதவி </a> . அந்தப் பக்கத்திற்கு சென்று மிக எளிதாக டைப் செய்யக் கற்றுக்கொள்ளலாம். ஆரம்பத்தில் சற்று பொறுமையாக இரண்டு மூன்று பக்கங்களை டைப் செய்து பழகிக் கொண்டால் எழுத்துக்கள் பரிச்சயம் ஆகிவிடும். பிறகு விரைவாக டைப் செய்யலாம். அதன்பின்னர் எகலப்பை போன்ற மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் நீங்கள் நேரிடையாகவே இணையப்பக்கங்களில் டைப் செய்யலாம். எகலப்பை நிறுவுவது குறித்த உதவியை இங்கே பெறலாம். ( <a href="http://ta.wikipedia.org/wiki/Wikipedia:Font_help" target="_blank"> விக்கிபீடியா தமிழ் எழுத்துதவி </a> )

----------------------------------------

5. சரி. குறிப்புகளை தமிழில் அனுப்ப என்னால் இயலும். இப்போது என்ன செய்வது?

ஒரு மாதிரி குறிப்பு ஒன்றை எங்களுக்கு feedback @ arusuvai.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அல்லது கீழே <a href="feedback" target="_blank"> தொடர்புக்கு </a> என்று உள்ள லிங்கை கிளிக் செய்து, அந்த பக்கத்திற்கு சென்று அதன் மூலம் அனுப்புங்கள். உங்கள் குறிப்புகள் பிழையின்றி இருக்கின்றன, விளக்கமாக இருக்கின்றன என்பதை உறுதி செய்தவுடன் உங்கள் பெயரை கூட்டாஞ்சோறு பகுதியில் நாங்கள் இணைத்துவிடுவோம்.

----------------------------------------

6. கூட்டாஞ்சோறு பகுதியில் பெயர் இணைக்கப்பட்டதை அறிவது எப்படி? அதன்பிறகு எப்படி குறிப்புகள் கொடுப்பது?

உங்கள் பெயரை கூட்டாஞ்சோறு பகுதியில் இணைத்தவுடன் உங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்துவிடுவோம்.

கூட்டாஞ்சோறு பகுதியில் உங்கள் பெயர் இணைக்கப்பட்டவுடன், உங்களின் உறுப்பினர் பெட்டியில் (அதாவது நீங்கள் login செய்தவுடன் உங்கள் பெயரில் வரும் இடப்பக்க முதல் பெட்டி) "குறிப்பு சேர்க்க" என்ற ஒரு link கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்து, அதற்கான பக்கத்திற்குச் சென்று குறிப்புகள் கொடுக்கலாம்.

----------------------------------------

7. அப்படி கொடுக்கும் குறிப்புகள் எப்போது அறுசுவையில் வெளியாகும்?

அடுத்த நொடியே வெளியாகும். நீங்கள் கொடுக்கும் குறிப்புகள் அனைத்தும் எந்தவித சோதனைக்கும் ஆட்படுத்தப்படாமல் நேரடியாக அறுசுவையில் வெளியாகும். முதல் குறிப்பு கொடுத்தவுடன் உங்களுக்கென ஒரு பக்கம் கூட்டாஞ்சோறுப் பகுதியில் உருவாகிவிடும். அதன்பிறகு நீங்கள் சேர்க்கும் குறிப்புகள் அனைத்தின் பெயர்களும் அந்தப் பக்கத்தில் பட்டியலிடப்படும்.

----------------------------------------

8. எனது குறிப்பில் பிழைகள் இருந்தால் என்ன செய்வது? நீங்கள் பிழைத்திருத்தம் செய்து பிறகு குறிப்பினை வெளியிடலாமே?

நான் முன்பே குறிப்பிட்டதுப்போல் ஆட்கள் பற்றாக்குறை, நேரமின்மை காரணமாக குறிப்புகளை பிழை சரிபார்த்து மாற்றியமைத்தல் எங்களுக்கு இயலாத காரியமாக இருக்கின்றது. எனவேதான், உங்கள் குறிப்பு கொடுக்கும் திறனை நாங்கள் மாதிரிக் குறிப்பின் மூலம் பரிசோதிக்கின்றோம். உங்களால் தமிழில் பிழை இன்றி டைப் செய்ய இயலும் என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே உங்கள் பெயரை கூட்டாஞ்சோறு பகுதியில் இணைக்கின்றோம். சமையல் குறிப்பில் பிழை இருந்தால் நேயர்கள் கேள்விக் கணைகள் எழுப்பி உங்களைத் தொலைத்துவிடுவார்கள். எனவே குறிப்புகளை பிழையின்றிக் கொடுப்பதிலும் நீங்கள்தான் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் வெளியிடும் குறிப்பினை எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கும் வசதி உங்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, தவறுகளை நீங்கள் எளிதில் திருத்திக் கொள்ளலாம். இருப்பினும் குறிப்புகள் உடனே வெளியாகிவிடுவதால், நீங்கள் பிழைத்திருத்தம் செய்யும் நேரத்திற்குள் அது ஆயிரக்கணக்கானவர்களை சென்றடைந்து இருக்கும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே குறிப்பு சேர்ப்பதற்கு முன்பே நன்கு பரிசீலித்துவிட்டு பின்னர் சேர்க்கவும்.

----------------------------------------

9. எத்தனைக் குறிப்புகள் நான் கொடுக்கவேண்டும்?

இத்தனைக் குறிப்புகள் கொடுக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது. ஆனால், ஒன்று இரண்டு குறிப்புகள் மட்டும் கொடுத்துவிட்டு நிறுத்திவிடக்கூடாது. தொடர்ச்சியாக உங்கள் பங்களிப்பு இருக்கவேண்டும். அப்போதுதான் உங்களுக்கென ஒரு தனிப்பக்கம் கொடுக்கப்பட்டதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். உங்கள் பக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு குறிப்புகள் மட்டுமே இருந்தால் அது நன்றாக இருக்காது. அப்படி உள்ளவர்கள் பெயர்கள் சில கால காத்திருப்பிற்கு பின்பு நீக்கப்பட்டுவிடும். உங்கள் பங்களிப்பு அதிகமாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கென ஒரு நேயர் வட்டம் உருவாகிவிடும்.

----------------------------------------

10. என்னால் தொடர்ச்சியாக குறிப்புகள் கொடுக்க இயலாது. ஆனால், ஒன்று இரண்டு முக்கியமான
குறிப்புகளை கொடுக்க விரும்புகின்றேன். எப்படி கொடுப்பது?

அதற்கு கூட்டாஞ்சோறு பகுதியில் இணையவேண்டியதில்லை. ஒன்றிரண்டு குறிப்புகள் மட்டும் கொடுக்க விரும்புவோர் அவற்றை எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம். அதே feedback முகவரிக்கு அனுப்பவும். கீழே உள்ள தொடர்பு பக்கத்தையும் பயன்படுத்தி குறிப்புகள் அனுப்பலாம். அப்படி நீங்கள் அனுப்பும் குறிப்புகளை உங்கள் பெயரிட்டு வெளியிடுகின்றோம். ஆனால், அவை கூட்டாஞ்சோறு பகுதியில் இடம்பெறாது.

----------------------------------------

11. ஏற்கனவே அறுசுவையில் வெளியாகி உள்ள குறிப்புகளை கொடுக்கலாமா?

ஏற்கனவே உள்ள குறிப்பினை மீண்டும் கொடுப்பதினால் என்ன பயன்? ஏற்கனவே உள்ள குறிப்பிற்கும் உங்கள் குறிப்பிற்கு ஏதேனும் வித்தியாசம் இருக்கும்பட்சத்தில் கொடுக்கலாம். இரண்டும் ஒன்றேதான் என்றால் கொடுக்காமல் இருத்தல் நலம். அப்படி குறிப்புகள் மீண்டும் மீண்டும் வெளியானால், பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். உங்களையும் குறைத்து மதிப்பிட்டுவிடுவார்கள்.

----------------------------------------

12. நான் கொடுக்கவிருக்கும் குறிப்பு ஏற்கனவே வெளியாகி உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது எப்படி?

கொஞ்சம் கடினமான வேலைதான். நீங்கள் கொடுக்க விரும்பும் குறிப்பின் பெயரை மேலே தேடுக என்று உள்ளப் பெட்டியில் டைப் செய்து, தேடிப்பாருங்கள். அந்தப் பெயரில் ஏதேனும் குறிப்புகள் இருந்தால் அவை காண்பிக்கப்படும். அவைகளைப் பார்வையிட்டு, உங்கள் குறிப்பு அதில் இருந்து
வித்தியாசப்படுகின்றது என்பதை உறுதி செய்துகொண்டு, பின்னர் குறிப்பினை வெளியிடுங்கள். இரண்டு குறிப்புகளின் பெயர்களும் ஒரே மாதிரி இருக்கும்பட்சத்தில் தேடுதல் மூலம் அறிந்துகொள்ளலாம். குறிப்பின் பெயர்கள் வேறாக இருந்து, செய்முறை இரண்டும் ஒன்றாக இருந்தால், தேடுதல் முறையில் கண்டறிதல் கடினம்.

----------------------------------------

13. கூட்டாஞ்சோறு பகுதியில் இணைவதால் எனக்கு என்ன லாபம்? ஏதேனும் சன்மானம் கிட்டுமா?

இல்லை. குறிப்புகள் கொடுக்கும் யாருக்கும் எந்த சன்மானமும் இதுவரை வழங்கப்படவில்லை. எங்களது நன்றியையும் அன்பையும்தான் கொடுத்து வருகின்றோம். அறுசுவை வருவாய் ஈட்டும் தளமாக இன்னமும் மாற்றப்படவில்லை. அப்படி மாறும் காலக்கட்டத்தில் எங்களால் இயன்றதை கண்டிப்பாய் செய்வோம்.

மற்றபடி, இதில் இணைவதால் நீங்கள் கீழ்க்கண்டவற்றைப் பெறலாம்.
1. உலகம் முழுவதும் உங்களுக்கென ஒரு நேயர் பட்டாளம்
2. நீங்கள் அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட ஒரு மனத்திருப்தி
3. இதேத் துறையில் உள்ள பலரின் அறிமுகம்
4. பிறத் தளங்கள், பிற ஊடகங்களில் இருந்து உங்களுக்கு எதிர்பாராத வாய்ப்பு (சன் டிவி, விஜய் டிவி சமையல் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்தாலும் ஆச்சரியத்திற்கில்லை.)
5. அனைவரின் வாழ்த்தும் பாராட்டுகளும்.
----------------------------------------

இந்த விளக்கங்கள் போதுமானவையாக இருக்கும் என்று எண்ணுகின்றேன். இவை தவிர்த்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் இதன் கீழ் பதிவு செய்யவும். மேலும் விளக்கம் தருகின்றேன்.

அன்புடன்
பாபு

கூட்டாஞ்சோறு பகுதியைத் தொடர்ந்து, யாரும் சமைக்கலாம் பகுதிக்கு படங்களுடன் குறிப்புகள் அனுப்புவது குறித்தும் உறுப்பினர்கள் அவ்வபோது கேள்விகள் எழுப்புகின்றனர். இந்தப் பதிவின் மூலம் அவர்களுடைய சந்தேகங்களுக்கு விளக்கம்தர விரும்புகின்றேன்.

1. கூட்டாஞ்சோறு பகுதியில் குறிப்புகள் கொடுப்பது போல், யாரும் சமைக்கலாம் பகுதியில் நேரிடையாக குறிப்புகள் சேர்க்க முடியுமா?

இயலாது. யாரும் சமைக்கலாம் பகுதியில் சேர்க்கப்படும் குறிப்புகள் அனைத்தும் எங்கள் மூலமாகத்தான் சேர்க்கப்படும். பாதுகாப்பு, படம் சேர்க்கும் உரிமை, பட அளவு, தர நிர்ணயம் என்று பல காரணங்களினால் உறுப்பினர்கள் படங்கள் சேர்க்க அனுமதிக்கப்படுவதில்லை.

---------------------------

2. பின்னர் யாரும் சமைக்கலாம் பகுதிக்கு நான் எப்படி படங்களுடன் குறிப்புகள் கொடுப்பது?

உங்கள் குறிப்பையும், நீங்கள் எடுத்துள்ள படங்களையும் எங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். அவற்றை தேவையான அளவிற்கு மாற்றி, நாங்கள் வெளியிடுகின்றோம்.

---------------------------

3. எத்தனைப் படங்கள் அனுப்ப வேண்டும்?

ஒரு குறிப்புக்கு அதிகப் பட்சம் 12 படங்கள் வரை வெளியிடலாம். நீங்கள் அதற்கு தகுந்தார்போல் அனுப்பவும். படங்கள் அதிகம் இருப்பின் முக்கியமான படங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றவற்றை விட்டுவிடுவோம்.

---------------------------

4. படங்களின் அளவு எப்படி இருக்க வேண்டும்?

பொதுவாக நாங்கள் வலியுறுத்துவது 640x480 என்ற அளவு(web resolution). உங்கள் கேமராவில் இதற்கு வசதி இல்லையெனில், அதில் உள்ள குறைந்த resolutionல் படங்கள் எடுத்து எங்களுக்கு அனுப்பவும்.

---------------------------

5. படத்தின் அளவை அறுசுவையில் உள்ள அளவிற்கு சுருக்கி அனுப்ப வேண்டுமா?

வேண்டாம். நீங்கள் 200x150 pixels என்ற அளவிற்கு சுருக்க வேண்டாம். எந்த அளவில் படங்கள் எடுத்தீர்களோ அதே அளவில் அனுப்பவும். அவற்றை நாங்கள் தேவைக்கேற்றார்போல் மாற்றி கொள்கின்றோம்.

---------------------------

6. படங்கள் என்ன file format ல் இருக்கவேண்டும்?

jpeg (jpg) format

---------------------------

7. படங்கள் எடுக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய விசயங்கள் ஏதேனும் உண்டா?

நிறைய உள்ளது. படங்கள் எடுக்கும்போது கேமராவை எப்போதும் கிடைமட்டமாக வைத்தே எடுக்கவும். நேர்மட்டத்தில் படங்கள் எடுக்கக் கூடாது. அதாவது 640x480 என்ற அளவு சரியானது. 480x640 ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

படங்கள் தெளிவாக இருக்க வேண்டும். தெளிவற்றை படங்களை வெளியிடுவதில் பயன் எதுவும் கிடையாது. வெளிச்சம் சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.

flash உபயோகிக்கும்போது மிகவும் கவனமாக இருக்கவும். சமையல் பாத்திரங்கள் பளபளப்பாக இருப்பதால், flash reflect ஆகும் வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல் எண்ணெய்யில் வறுப்பது, வேகவைப்பது போன்றவற்றை எடுக்கும்போதும் flash வெளிச்சம் பிரதிபலிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதில் கவனம் கொள்ளவும்.

கூடுமானவரை flash உபயோகிப்பதை தவிர்க்கவும். அப்படி அவசியம் எனில், பொருட்களை மிகவும் close-up ல் flash பயன்படுத்தி படம் எடுப்பதை தவிர்த்து, கேமராவை சற்று உயரத்தில் பிடித்து, zoom செய்து flash பயன்படுத்தவும்.

ஒரு பாத்திரத்தில் வெந்து கொண்டிருக்கும் பொருளை படம் எடுக்கும்போது பாத்திரத்துடன் சேர்த்து படம் எடுக்கவும். உள்ளே இருக்கும் பொருளை மட்டும் close-up ல் படம் எடுத்தால் அது என்னவென்றே தெரியாமல் போய்விடும்.

கேமராவை பொருட்களின் நேர் மேலே (அதாவது 90 டிகிரியில்) வைத்து படங்கள் எடுப்பதை தவிர்க்கவும். சற்று இறக்கி 70 டிகிரி கோணத்தில் வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும். பொருளின் முப்பரிமாணமும் கிடைக்கும்.

கேமரா பயன்படுத்துவது குறித்து இணையத்தில் ஏராளமான தளங்களில் எண்ணற்ற தகவல்கள் குவிந்து கிடக்கின்றன. நேரம் கிடைக்கும்போது அவற்றைப் பார்வையிட்டு படம் எடுக்கும் நுட்பங்களை தெரிந்து கொள்ளுங்கள். உதவியாய் இருக்கும்.

---------------------------

8. சரி, படங்கள் அனுப்பி எத்தனை நாட்களில் குறிப்பு வெளியாகும்?

இதற்கு சரியான கால அளவு சொல்லுதல் கடினம். யாரும் சமைக்கலாமில் இடம் பெறும் குறிப்புகளை தினமும் சேர்ப்பது கிடையாது. முன்பே சேர்த்து வைத்து, குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட உணவுக்குறிப்பு வருமாறு program செய்து வைத்துவிடுவோம். அந்த வரிசையில்தான் குறிப்புகள் வெளியாகும். file names எல்லாம் அதற்கு தகுந்தார்போல் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதால், இடையில் அந்த வரிசையை மாற்றி, உங்களின் குறிப்பை சேர்ப்பது சிரமத்தைக் கொடுக்கும். நீங்கள் கொடுக்கும் குறிப்பை எப்படியும் ஒரு வாரத்திற்குள் வெளியிட்டுவிடுவோம்.

---------------------------

9. படங்களுக்கும் குறிப்பிற்கும் வேறுபாடுகள் இருக்கலாமா?

கூடாது. இதில்தான் நிறையப்பேர் தவறு செய்கின்றனர். ஒன்று குறிப்பிற்கு தகுந்தார்போல் படங்கள் எடுக்கவேண்டும். அல்லது படங்களுக்கு ஏற்றார்போல் குறிப்பினை எழுதவேண்டும். இரண்டாவது முறைதான் எளிதானது. படம் எடுக்கும்போது ஒவ்வொரு முக்கிய கட்டத்தையும் படமாக்குங்கள். தேவைக்கு அதிகமான படங்கள்கூட எடுத்துக்கொள்ளலாம். தவறில்லை. பின்னர் முக்கியமான 12 படங்களை மட்டும் எடுத்து அவற்றிற்கான விளக்கத்தை எழுதவும். உங்களுடைய குறிப்பு, ஒவ்வொரு படத்தையும் விளக்குவதாக இருக்கவேண்டும்.

---------------------------

10. மொபைல் கேமராவில் படங்கள் எடுத்து அவற்றை மின்னஞ்சல் மூலம் அனுப்பலாமா?

அனுப்பலாம். ஆனால், தரம் சிறப்பாக இருக்கவேண்டும். படத்தின் தரம் உங்கள் மொபைலில் உள்ள கேமராவின் திறனைப் பொறுத்து இருக்கும். முக்கியமான ஒரு விசயம், மொபைல் கேமராவில் படம் எடுக்கும் போது, மொபைலை கிடைமட்டமாக வைத்துப் படம் எடுக்கவும். நமக்கு தேவையான படங்கள் அனைத்தும் நீளம் அதிகமாகவும், உயரம் குறைவாகவும் (அதாவது நீளவாட்டில்) இருத்தல் வேண்டும்.

---------------------------

11. வேறு தளங்களூக்கு அல்லது பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய படங்களை அறுசுவையில் கொடுக்கலாமா?

கண்டிப்பாக கூடாது. யாரும் சமைக்கலாம் பகுதிக்கு நீங்கள் எடுத்து அனுப்பும் படங்கள் வேறு எந்த ஊடகங்களிலும் ஏற்கனவே வெளியாகி இருத்தல் கூடாது. அதேபோல் இங்கு வெளியிட்ட குறிப்பு மற்றும் படங்களை வேறு ஊடகங்களுக்கு அனுப்புதல் என்பதும் கூடாது. ஒருமுறை அறுசுவையில் வெளியாகும் குறிப்புகள், படங்கள் அனைத்தும் அறுசுவை நிபந்தனைகள்படி அறுசுவை காப்பிரைட் உரிமத்திற்குள் அடங்கியதாகிவிடும். இதனை வேறு ஊடகங்களில் வெளியிட குறிப்பு கொடுத்தவர்களுக்கு அனுமதி இல்லை. இதற்கு ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் மட்டும் குறிப்புகள் கொடுக்கவும்.

மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் உங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யவும்.

யாரும் சமைக்கலாம் பகுதிக்கு படங்கள் இல்லாமல் சமையல் குறிப்பு மட்டும் அனுப்பலாமா

யாரும் சமைக்கலாம் பகுதியின் சிறப்பே அதில் இடம்பெறும் ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள்தான். அந்த பகுதியில் கண்டிப்பாக படங்களுடன்தான் குறிப்புகள் வெளியிடவேண்டும்.

படங்கள் இல்லாத குறிப்புகள் யாரும் சமைக்கலாம் பகுதியில் இடம்பெற வேண்டும் என்று தாங்கள் விரும்புவதற்கு காரணங்கள் எதுவும் உள்ளனவா? படங்கள் இல்லாத குறிப்புகளை கூட்டாஞ்சோறு பகுதியில் வெளியிடலாமே. தலைப்பு மட்டும்தானே மாறுகின்றது.

உங்களை கூட்டாஞ்சோறு உறுப்பினராக்கி, எப்படி குறிப்புகள் சேர்ப்பது என்பது குறித்த விளக்கங்களையும் ஏற்கனவே தங்களுக்கு அனுப்பியுள்ளேன். கிடைக்கப் பெற்றீர்களா?

அன்புடன் அட்மினுக்கு,
யாரும் சமைக்கலாம் பகுதியில் குறிப்புகள் படங்கள் எல்லாம் உங்கள் ஈ . மெயிலுக்கு அனுப்புகிறபோது, நாம் கூட்டாஞ்சோறில் எப்படி குறிப்புகளை எழுதுகிறோமோ அப்படியே எழுதினால் சரியா?. இன்னுமொன்று, நான் குறிப்பு அனுப்பினால் அதை உங்கள் வசதிப்படி வெளியிடுங்கள்... ஆனால் கிடைத்தது என்று மட்டும் எனக்கொரு பதில் தர முடியுமா? எல்லாம் தயாராக இருக்கிறது.. படத்தை மாற்றத்தான் தெரியவில்லை இன்று எப்படியும் முயற்சிக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு சகோதரிக்கு,

கூட்டாஞ்சோறு குறிப்புகள் போலவே அனுப்பினால் போதுமானது. தேவையானப் பொருட்களை சரியான அளவுகளுடன் குறிப்பிடுங்கள். உப்போ, மஞ்சளோ.. எதுவாயினும் துல்லியமான அளவு (நீங்கள் எவ்வளவு எடுத்துக்கொண்டுள்ளீர்களோ அதை) குறிப்பிடுங்கள்.

செய்முறை விளக்கம் நீங்கள் அனுப்பும் படங்களை விவரிப்பதாக இருக்க வேண்டும். செய்முறையில் ஒன்று சொல்லியிருப்பார்கள். அதற்கு பொருத்தமான படம் இருக்காது. அப்படியெல்லாம் இருக்கக்கூடாது. 10 படங்கள் அனுப்புகின்றீர்கள் என்றால், உங்கள் செய்முறையில் பத்து படங்களையும் விளக்கியிருக்க வேண்டும். எப்படி என்பதற்கு யாரும் சமைக்கலாமில் இடம்பெற்றுள்ள குறிப்புகள் சிலவற்றை பார்வையிடவும்.

மற்றபடி படங்கள் தரமானதாக இருக்க வேண்டும். File size அதிகமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு படமும் 1 MB க்கு அதிகமாக சிலர் அனுப்பிவிடுவர். எனக்கு அதை டவுன்லோடு செய்யவே மிகவும் நேரம் எடுக்கும். படங்கள் எடுக்கும்போது நிறைய எடுத்து, அதில் இருந்து முக்கியமானதை, நன்றாக உள்ளதை மட்டும் அனுப்பவும்.

நான் படங்கள், குறிப்புகள் கிடைத்ததும் பதில் கொடுக்கின்றேன். :-)

மிகவும் நன்றி அட்மின் நான் அப்படியே செய்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அட்மினுக்கு வணக்கம்,
யாரும் சமைக்கலாம் பகுதியில் படங்கள் அனுப்புவதை பற்றி தெளிவாக சொல்லி இருந்தீர்கள் நன்றி!
ஆனால் படங்களுடன் குறிப்புகளை தங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப சொல்லி இருந்தீர்கள் உங்கள் முகவரிக்கு எப்படி அனுப்புவது கொஞ்சம் தெளிவாக சொல்லுஙளேன் .
நான் போன முறை ஒரு ரெசிபி படங்களுடன் அனுப்பி இருந்தேன் ஆனால் அது வெளியாகவில்லை. அதனால் எப்படி அனுப்புவது எந்த மின்னஞ்சள் முகவரிக்கு அனுப்புவது என்று சொல்லுங்கள் please

சகோதரிக்கு,

இதற்கு முன்பு படங்களுடன் குறிப்பு ஒன்று அனுப்பியதாக குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். நான் அதை கிடைக்கப் பெற்றிருக்கவில்லை என்று நம்புகின்றேன். கிடைத்திருக்கும் பட்சத்தில் அதனை வெளியிட்டு இருப்பேன். எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இருக்கின்றீர்கள் என்பது தெரியவில்லை. படங்களின் தரம் குறைவாக இருந்திருந்தால் ஒருவேளை வெளியிடாமல் இருந்திருக்கலாம். அப்படி நிராகரித்து இருந்தால் அதற்கான காரணத்தை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்து இருப்பேன்.

படங்களின் தரம், அளவு பற்றி ஏற்கனவே (மேலே) குறிப்பிடப்பட்டுள்ளது. உங்கள் குறிப்பு மற்றும் படங்களை arusuvaiadmin at gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும். (at gmail.com என்பதை @gmail.com என்று குறிப்பிடவும். பாதுகாப்பு காரணங்களுக்காக அப்படி குறிப்பிட்டுள்ளேன்.)

மேலே feedback முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு குறிப்பிட்டுள்ளேன். அந்த முகவரிக்கும் அனுப்பலாம். ஜிமெயிலுக்கு அனுப்பி வைத்தீர்கள் என்றால் இன்னமும் வசதியாக இருக்கும்.

படங்களின் filesize குறைவாக இருக்குமாறு optimize செய்து அனுப்புங்கள். படத்தின் நீள அகலத்தை குறைத்துவிடாதீர்கள். அவற்றை நீங்கள் எடுத்த அளவிலேயே வைத்துக்கொள்ளுங்கள். filesize மட்டும் குறைக்க வேண்டும். இதற்கு ஏதேனும் ஒரு image editing tool பயன்படுத்தவேண்டும். Photoshop மிகவும் வசதியானது.

அண்ணா,
நான் உங்களுடைய mailidக்கு என்னுடைய receipe ஈஸி கோபி மஞ்சுரியன் mail செய்தேன். அது இன்னும் வெளிவரவில்லை. Please help me anna.
with regards,
Geethaachal

அன்புடன் அட்மினுக்கு,
எனக்கு கொஞ்சநாளாக ஒரு ஆவல் (ஆசை), இன்றுதான் கேட்கிறேன், சரியோ தவறோ தயவுசெய்து எனக்குப் பதில் தரமுடியுமா?

இப்பொழுது இங்கே, தினம் ஒரு புதிய உணவு.... இன்றைய ஸ்பெஷல் என்று, மிக அழகாக தினமும், குறிப்பிட்ட நேரத்திற்கு மாறி, எம்மை அசத்திக்கொண்டிருக்கிறது. எனக்குள் ஒரு எண்ணம், அது என்னவென்றால், இப்படி முகப்பில் போடும் குறிப்பை, கடைசி இரு நாட்களுக்காவது வைத்துவிட்டு பின் அடுத்த குறிப்பை இணைத்தால் என்ன? சிலநேரம் நாம் பார்ப்பதற்கிடையில் அது உள்ளே போய் விடுகிறது. அது வேறு எங்கும் போகவில்லை இங்கேயே தான் இருக்கிறது, இருப்பினும் உள்ளே இருப்பதற்கும் முகப்பில் இருப்பதற்கும் வித்தியாசம் அதிகம் தானே. என்னைப்போல், இங்கே அறுசுவை உரையாடல்களிலும் கலந்துகொண்டு குறிப்பும் அனுப்புகிறவர்களுக்கு, அதிக நேரம் குறிப்பு முகப்பில் இருக்கும்போது சந்தோசம் அதிகமாக இருக்கிறது.

இது எனது வேண்டுகோள் அல்ல, ஆனால் அப்படிச் செய்தால் என்ன என்ற எனது எண்ணத்தைக் கூறியுள்ளேன். இதுபற்றி ஏதாவது கூறமுடியுமாயின் சொல்லுங்கள்.

இடையிடையே அறுசுவையில் கலந்துகொண்டிருந்தீங்கள், இப்போ காணவே முடியவில்லையே..., எழுதியதில் ஏதும் தவறிருப்பின் மன்னிக்கவும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்