நீங்கள் கேட்டது தெளிவாகப் புரியவில்லை. பொதுவாக விடியற்காலை
நேரத்தில் வீட்டு வாசலைப் பெருக்கிக் கூட்டி தண்ணீர் தெளித்துப் பின்
(மண் தரையானால் தண்ணீர் தெளித்துப் பின்னர் பெருக்கிக் கூட்டுவார்கள், காரணம் மண் பறந்து மேலே அப்பிக் கொள்ளாமல்
இருப்பதற்காக) கோலம் போடுவார்கள். சிலர் மாலையிலும் இதை
செய்வார்கள், ஒரு நாளைக்கு இரண்டு முறை.
வீட்டில் உள்ளவர்கள் வெளியே எதற்காக வேண்டுமாலும் செல்வதற்கு
முன் இதைச் செய்வார்கள். அவர்கள் போன பின் செய்வது தப்பான
செயலாகும். இங்கே விவரிக்க முடியாது.
பொதுவாக காலையில் எழுந்து காலைக்கடனை முடித்து பல்தேய்த்து
முகம் கழுவிய பின்னரே வாசல் பெருக்க வேண்டும் என்பது எழுதப்
படாத வழக்கம். தூங்கி எழுந்த பின்னர் நாம் எப்படி இருப்போம்
கண்ணாடியில் நம்மைப் பார்த்தாலே தெரியும்.
காலையில் நம்மைத் தூய்மை செய்து கொண்ட பின் குனிந்துகுனிந்து
கையை வலமும் இடமுமாக வீசி வீசிப் பெருக்குதல், வாளியில் இருந்து
நீரை மேலும் கீழுமாக வாரி வாரித் தெளித்தல், பிறகு முடிந்தால்
அழகழாய்க் கோலம் போடுதல் இவை எல்லாமே நாம் காலையில்
செய்து கொள்ளும் தூய்மை, அதன் பின் உடல் முழுவதற்குமான உடல்பயிற்சி, மனதை நிலைப் படுத்தி கணக்கிட்டுப் போடும் கோலம்
இவை எல்லாமமே அன்றைய நாளின் அழகான ஆரம்பம் என்பதை
உணரலாம். (பாரதி தாசனாரின் குடும்பவிளக்கு 5 பகுதிகளையும்
படித்துப் பாருங்கள் பிறகு புரியும் பெண் என்பவள் யார் என்று.
(தஞ்சையில் பிறந்த உங்களுக்கு நாங்கள் சொல்லவே வேண்டாம்.)
அன்புடன் பூங்கோதை கண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
அன்புள்ள சங்கீதா