Viral suppuvathil irunthu matra

En kulanthaikku 11 mathangal ahirathu viral suupukiral gloves pottal alugiral intha palakkathil irunthu maatra vazhi koorungal sisters.

பத்து மாதங்களில் பல் முளைப்பது காரணமாக‌ பல்லில் ஊரல்
இருக்கும், அதனால் வேறுஎதையாவது பல்லில் வைத்து கடிப்பதை விட‌
விரலைச் சூப்புவது பரவாயில்லை.
புழுங்கல் அரிசியில் உளுந்து மாவு வறுத்தது ஓமம் பெருங்காயம்
தேவையான‌ அளவு உப்பு சேர்த்து முறுக்கு மாவு போல் பிசைந்து,
(மாவு கெட்டியாக‌ இருந்தால் நல்லது) கையாலேயே தடியான‌ பென்சில்
போல‌ குறைந்தது 5 அங்குல‌ நீளத்திற்கு உருட்டி எண்ணையில்
பொரித்து குழந்தைகையில் கொடுத்து விட‌ அதைச் சப்பும் போது
விரல் சூப்புவதை விட்டுவிடும். மொழுக்கையாக‌ உருட்ட‌ வேண்டும்.
இல்லையானால் சொரசொரப்பாக‌ இருந்தால் குழந்தையின் ஈறுகளைக்
கிழித்து விடும். கவனம் தேவை, ருசியை மாற்றி மாற்றித் தரலாம்.
மைதாவைத் தவிர்த்து சிறு தானியங்களில் செய்தால் சத்தானதும் ஆகும்..
விரல் சூப்புவதை நிறுத்துவதற்காக‌ செய்வது நல்லதா கெட்டதா
என்று அறியாத‌ இன்னும் எதையும் பேசத் தெரியாத‌ சின்னக் குழந்தையை கண்டிப்பது மிக‌ மிகத் தவறான‌ செயல். உங்களுடைய‌
கண்டிப்பு நாளடைவில் குழந்தைக்கு உங்களிடம் வெறுப்பை ஏற்படுத்தும், அதோடு மட்டுமல்ல‌ தனக்குப் பிடித்ததை செய்யக் கூடாது யார் தடுத்தாலும் அவர்களை எதிர்க்கும் மனப்பான்மையை வளர்த்து விடும். பிற்காலத்தில் அவர்களிடம் முரட்டுத்தனத்தை வளர்த்து விடும். மெது மெதுவாகத் தான் இதை நிறுத்த‌ வேண்டும். இந்த‌ வயதில் இந்த‌ செயல் அவர்களுக்கு ஒரு துணையைப் போல‌ (சப்போர்ட் ஆக‌ இருக்கும்) மனதளவில் உதவும். பிடித்தமான‌
வேறு செயல்களை செய்ய‌ வைத்தல் இரண்டு கைகளையும்
பயன்படுத்தும் செயல்களில் ஈடு படுத்த‌ வேண்டும். நிதானம் தேவை.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்