IUI & IVF அடுத்து என்ன?

எங்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றது, IUI & IVF அனைத்தும் செய்தும் எங்களுகு நெகடிவ், குழந்தை பாக்கியம் கிடைக்க நாங்கள் அடுதது என்ன செய்வது, மிகுந்த மனவருத்துடன் உள்ளோம்,

உங்க பேர் என்னவென்று தெரிஞ்சுக்கலாமா? எழுத்து எழுத்தாக் கூப்பிட சங்கடமா இருக்கு. முதலில்... தமிழில் தட்டியதற்கு நன்றி.

//அடுதது என்ன செய்வது// என்ன காரணத்திற்காக சிகிச்சைக்குப் போனீர்கள் என்பதைச் சொல்லவில்லை நீங்கள். பதில் சொல்வதற்கு நீங்கள் கொடுத்த தகவல் போதாது சகோதரரே!

வருடங்கள் கடந்து போகிறது என்பதற்காக மட்டும் சிகிச்சையை நீங்கள் தெரிவு செய்திருந்தீர்களானால், இனியும் கூட உங்கள் மனைவி இயல்பாக கருத்தரிக்கும் சாத்தியம் இருக்கிறது. செய்ய வேண்டியதெல்லாம் மனம்தளராமல் இருப்பதுவும் இதையிட்டு கவலை கொள்ளாமல் இருப்பதுவும்தான். இன்னொரு விஷயம்... நீங்கள் இதைப் பெரிதாகப் பேசிக் கொண்டிருந்தால் உங்கள் மனைவிக்கு இரட்டிப்புக் கவலை இல்லையா! அதுவே எல்லாவற்றையும் தாமதமாக்கும்.

எப்போ அவங்களை இங்க மெம்பராக்கப் போறீங்க?

‍- இமா க்றிஸ்

iui ,ivf எல்லாம் ஒரு இரண்டு தடவைகளில் சரிவரும் என்றில்லை . அதனாலேயே பல டாக்டர்ஸ் 6 இலிருந்து 8 தடவைகள் iui செய்தபின்னர்தான் ivf க்கு பரிந்துரைப்பார்கள் . உங்களுடைய பிரச்சனையை பொறுத்து ivf ம் ரிப்பீட் பண்ண வேண்டி வரலாம் .தவிர இக்சி (icsi ) செய்யலாம் . வெளியே எடுக்கப்பட்ட கருமுட்டைகளை கருக்கூட வைத்து மறுபடி உள்ளே செலுத்துவது ivf என்றால் ,கருமுட்டைக்குள் ஊடுருவ செய்து உட்செலுத்தி கருகொள்ள வைப்பது இக்சி. அடுத்து என்ன செய்யலாம் என்பது உங்கள் உடல்நிலையை பொறுத்து நல்ல டாக்டரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேணும் .

நன்றி ஒரு முறைதான் இரண்டும் செய்யப்பட்டது

மேலும் சில பதிவுகள்