Vanakam Friends,
Naan Meena from Malaysia.
Naan ippoluthu 3 maatham karpemage ullen. Ithu muthal karpam. Enekku vayathu 34. Netru, rathe parisothanaiyil sarkarai alevu satru kuduthelaga irunthathu. Eneku insulin poduvathai thavirpathatku, Sarkaraiyai Kattupadutum unavugal yaavai enru kurungalen..
Thank you
Meena
மீனா உங்களுக்கு இன்சுலின் எடுக்குமளவு சுகர் அதிகமாக இருந்தால் குழந்தை வயிற்றில் இருக்கும்போது டயட் பண்ணுவதுடன் இன்சுலின் ம் எடுப்பதுதான் சிறந்தது .இன்சுலின் நாளாந்தம் நீங்கள் சாப்பிடும் உணவிற்கு முன் எடுப்பதால் குழந்தைக்கும் உங்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் . பிரக்னன்சியில் வரும் டயபிட்டிக் அனேகமாக டெலிவரியின் பின் காணாமல் போய்விடும் .நேரடியான சுகர் ஐ அறவே தவிர்க்க வேண்டும் .கடையில் வாங்கும் யூஸ்களை தவிர்த்து நீங்களே சுகர் சேர்க்காமல் செய்து குடிக்க வேண்டும். சாதத்தை குறைத்து புரத சத்துள்ள தானியங்களை சேர்க்கலாம் .
சர்க்கரை
சுரேஜினி தெளிவாக பதில் சொல்லியிருக்கிறாங்க. ஒரே ஒரு பதில் இருப்பதை விட இன்னொரு ஆள் வந்து சொல்லி வைக்கலாம் என்று இந்த போஸ்ட். :-)
//Eneku insulin poduvathai thavirpathatku,// கர்ப்பம் என்கிறீங்க. இப்போ சுகர்... உங்கள் குழந்தையைப் பாதிக்கலாம். கர்ப்பமாக இல்லாத பொழுது உங்கள் விருப்பம் போல எதையாவது ட்ரை பண்ணலாம். இப்போ வேண்டாமே! குழந்தை பாவம்.
//Sarkaraiyai Kattupadutum unavugal yaavai enru kurungalen.// அப்படி எதுவும் இல்லை. எந்த உணவும் சர்க்கரை அளவை ரிவர்ஸ்ல கொண்டு போய் விடாது. அப்படித்தான் இருந்தாலும் இப்போ நிச்சயமில்லாத விடயத்தை டெஸ்ட் பண்ணிப் பார்க்கும் நிலையில் நீங்கள் இல்லை.
உணவுகளைத் தவிர வேறு மூலிகை இலைகள் என்று எதையும் ட்ரை பண்ணாதீங்க இப்போ.
நீங்கள் டாக்டர் கொடுத்த மருந்துகளை எடுப்பதோடு சர்க்கரை, மாப்பொருள், இனிப்பான உணவுகளைக் குறைப்பதுவும் அவசியம்.
ரிஸ்க் எடுக்க வேண்டாம். டாக்டர் சொன்னதன்படி கேட்டு நடங்க மீனா.
- இமா க்றிஸ்
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி Surejini & imma. .இன்சுலின் எடுப்பது குழந்தைக்கும் எனக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது என்பதால் நான் டாக்ட்ர் அறிவுரைபடியே செய்கிறேன். மேலும் சுகர் ஐ தவிர்க்கிறேன்.
மீனா
எங்களுக்காக என்று வேண்டாம். உங்கள் குழந்தையின் நலனுக்காகத் தான் இதைச் சொன்னோம். இது ஈஸியா எடுக்கிற விஷயம் இல்லை. கவனமா இருங்க.
- இமா க்றிஸ்