எனக்கும் உதவுங்கள்

எனக்கு இரண்டு நாட்களாக வாமிட்டிங் உணர்வாக உள்ளது. பசிச்சாலும் சாப்பிட முடியல. லைட்டா தலை சுத்தும் இருக்கு. முதுகு வலியும் உள்ளது. என்ன பன்னுவது. எனக்கு 7வது மாதம் தொடங்க உள்ளது. எனக்கு நாவில் சுவை இல்லாதது போல் உணர்கிறேன். இதனால் அதிகமாக திருநீறு சாப்பிடுகிறேன். இது எதனால் சொல்லுங்க தோழிகளே...

இன்னுமொரு சந்தேகம் நான் படிக்கட்டுகள் ஏறலாமா? எனக்கு படிக்கட்டுகள் ஏறினால் அதிகம் மூச்சு வாங்குது அதான் கேட்கிறேன். என்னோட ரூம் மாடியில் உள்ளது.

இதெல்லாம் உங்களுக்கு மட்டும் உரியதல்லவே பயப்பிடுவதற்கு . எல்லா பிரக்னன்ஷி வுமன்ஸ் க்கும் உள்ளதுதான் திவயா.திருநீருன்னா எரிக்கப்பட்ட மாட்டு சாணம் தானே . மாட்டு கழிவை சாப்பிடுவதை நான் கேள்வி பட்டதில்லையே .படி ஏறுவது 2 படிக்கு ஒருதடவை நின்று மூச்சு இழுத்து விட்டு மறுபடி தொடர வேண்டும் . முடிந்தால் தவிர்க்கலாம் . கர்ப்பமாக இருக்கும்போது 10 மாசமும் ஏதாவது செஞ்சுட்டே இருக்கும் . நார்மலா வழக்கம் போல் இருக்காது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்

உங்கள் வீட்டில் கீழே அறையிருந்தால் இடத்தினை கீழேயே மாற்றிக்
கொள்ளுங்கள், பசிக்கிறது ஆனால் சாப்பிட‌ முடியவில்லை, மயக்கம்
வருகிறது என்கிறபோது கட்டாயம் கீழேயே இருப்பது தான் நல்லது.
கருவுற்ற‌ போது சத்துக் குறைபாட்டினால் இப்படி சாம்பல் தின்பதைப்
பார்த்திருக்கிறேன், எந்த‌ வகையான‌ சத்து குறைவாக‌ உள்ளது அறிந்து
அதற்கேற்ற‌ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். சுவை உணர்வு
மீண்டும் வர‌ நாரத்தங்காய‌ ஜூஸ், நாரத்தங்காய் ஊறுகாயை(உப்பிட்டது சாக்லேட் போல‌) சுவைத்து உண்ணுங்கள்.
ஓரிரு நாள்களில் சரியாகிவிடும், ஊறுகாயாக‌ இதை உணவோடு
உண்ண‌ வாந்தி ஏறக்குறைய‌ முற்றிலுமாக‌ நீங்கிவிடும், நன்கு பசிக்கும்,
உணவு நன்கு செரிமானம் ஆகும்.கவலை வேண்டாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

முதலில் உடனடியாக திருநீறு சாப்பிடுவதை நிறுத்துங்க. அது கெமிக்கல் கலக்காமல் இப்போ வருவதில்லை.சுண்ணாம்பு சத்து குறைபாட்டால் சாம்பல் திருநீறு சாப்பிட தோன்றும். முட்டை பால் நிறைய எடுக்கனும்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

ஜெயந்தி

பதில் அளித்த தோழிகளுக்கு நன்றி பா. எனக்கு நேற்று இரவு கை, கால் குடைச்சல் அதிகமாக இருந்தது. தலை வலி ரொம்ப இருந்துச்சு 2.30மணி வரை தூங்கல. அவளோ தலை இன்று காலைல இருந்து லூஸ் மோஷன் ஆகுது. இப்ப வரைக்கும் 7தடவ ஆகிடுச்சு. நான் Bovonto மட்டும் தான் குடிச்சு பார்த்தேன் கேட்கல. _

//தலை வலி ரொம்ப இருந்துச்சு// சாப்பிடமா இருந்தா தலை வலிக்கும். தலை வலிச்சா சாப்பிட முடியாது. :-)

//2.30மணி வரை தூங்கல.// சாப்பாடு இல்லாட்டா தூக்கம் கெடும்.

//லூஸ் மோஷன்// அது வெறு வயிறா இருந்ததால வந்ததா இருக்கலாம். இரவுத் தூக்கம் கெட்டதால வந்ததாக இருக்கலாம். சாம்பல் சாப்பிட்டதால வந்ததாகவும் இருக்கலாம். முதல்ல சாப்பிடுங்க.

//Bovonto// கூகுள் பண்ணிப் பார்த்தேன். கோக் பெப்ஸி போல இதுவும் ஒரு கார்பனேட்டட் ட்ரிங்க்.

கஷ்டப்படாவது கொஞ்சம் சாப்பிடுங்க. பிடிச்சதைச் சாப்பிடுங்க. முதல்ல கொஞ்சமா உறுகாய் தொட்டுட்டாவது சாப்பிடுங்க. மெதுவா சரியாகும். அதுக்குப் பின்னாலயும் சரியாகாட்டா டாக்டரைப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

சாப்பாடு எல்லாம் சரியாக சாப்பிட தான் செய்றேன். ரொம்ப எடுத்துக்காம முடியுற அளவு சாப்பிட்டுக்கிறேன். இரவு பசிக்கும் போது வாழைப்பழம் ஒன்று எடுத்துக்கொள்வேன். நேற்று மட்டும் 21தடவை பேதி ஆகிடுச்சு பா ஆனால் Bp நார்மல். கை, கால்,இடுப்பு மட்டுமே விடவிடன்னு இருக்கு. நேற்று மாலை டாக்டரிடம் போனோம். அவர் மாத்திரை கொடுத்தார். தயிர் தவிர வேறு ஏதும் சாப்பிட கூடாது என்று சொன்னார். இட்டிலிக்கு சட்னி கூட எடுக்க கூடாது என்றார். இரவு மாத்திரை போட்டேன். இரவு நல்லா தூங்கிட்டேன். ஆனால் எழுந்ததும் 2நேரம் போயிட்டேன் எனக்கு என்ன பயம் என்றால் குழந்தைக்கு தண்ணீர் சத்து குறைந்துடுமோன்னு பயமா. இருக்கு.

குழந்தை துடிப்பு எல்லாம் நல்லா இருக்கு பா. அதான் கொஞ்சம் தைரியமா இருக்கேன். பழ ஜூஸ் குடிக்க கூடாதுன்னு சொல்லிருக்காங்க.

மேலும் சில பதிவுகள்