எனக்கு பதில் தரவும் தோழிகளே

தோழி எனக்கு இன்று மாதவிடாய் வந்து இன்றோடு 21 நாள் ஆகுது வெள்ளைபடுதல் இருக்கு ஒரு மாதிரி பிசு பிசுபா இருக்கு என்ன பன்னலாம்

எனக்கும் அதே பிரச்சனை தான்.அதே 21வது நாள் தான்...நான் குழந்தைக்கா முயற்சி பன்னுகிறேன் ...சரண்யா

தொலைந்ததை என்றும் தேடி அலையாதே
கிடைத்ததை என்றும் தொலைத்து விடாதே........

enaku innaiku 20th day...karumuttai ethana nal tube la erukum

-

பீரியட்ஸ் ஆன 21வது நாளைப் பற்றி ஒரு சந்தேகம்!! :-) பீரியட்ஸ் ஆகாமல் 21நாள் என்றால் கேட்கலாம். இது!!!

இழையில் என்ன பேசப்படப் போகிறது என்பது புரியாதபடி 'எனக்கு பதில் தரவும் தோழிகளே' என்று தலைப்பு போட்டு தனி த்ரெட் வேற ஆரம்பிச்சிருக்கீங்க. சொன்னால், 'நான் பழைய ஆள்தான்,' என்பீங்க. :-) புது மெம்பர் மாதிரியே இருக்கீங்க. :-) இங்க ஏற்கனவே இது போல கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் இருக்கு. நானே நிறைய இடத்துல சொல்லி இருக்கேன். ஒரு தடவை தேடிப் பார்த்துட்டு கேள்வியை வைச்சிருக்கலாம் நீங்க. :-)

//என்ன பன்னலாம்// இக்னோர் பண்ணலாம். :-) கண்டுக்காதீங்க. இது கலியாணம் ஆகாத பொண்ணுங்களுக்கும் இருக்கிறதுதானே! இது ஒரு பிரச்சினைன்னு த்ரெட் போட்டு கேட்கணுமா?

சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் பெரிசுபடுத்தாதீங்க. சந்தோஷமா இருங்க. ரிலாக்ஸ்டா இருங்க. சீக்கிரம் இரண்டாவது குழந்தை தங்கும்.

‍- இமா க்றிஸ்

அன்பாக சொல்கிறிர்கள் புரிகிறது இருந்தாலும் நான் தனித்து கேள்வியை கேட்டு எனக்கான பதில் கிடைக்கும் போழுது அதில் வரும் இன்பம் வேறு,இது என்ன இப்படி ஒரு கேள்வியா என்று நினைக்கலாம் ஆனால் என் மனதில் உள்ள சந்தேகத்தை கேட்டு அறிந்து கொள்கிறேன் தவறாக பேசினால் மன்னிக்கவும்

கவளையை விடுங்கள் பார்வதிதேவி,என்ன தான் நடக்கிறது என்று பார்க்கலாம்

//தனித்து கேள்வியை கேட்டு எனக்கான பதில் கிடைக்கும் போழுது அதில் வரும் இன்பம் வேறு,//மன்னிக்கவும் விதிகள் மீறி மற்றவர்களை நஷ்ட படுத்தி இன்பம் காண்பது நல்லதாக தெரியவில்லை சகோதரி .http://www.arusuvai.com/tamil/node/27207 இதை படித்தால் புரியும் .

தோழி நான் என் மனதில் தோன்றி சந்தேகத்தை யாரிடம் கேட்பது அறியாது இத்தளத்தில் உள்ள தோழிகளிடம் கேட்டேன்,அவ்வாறு அவர்கள் பதில் தந்தால் மனத்திற்கு ஒரு ஆறுதல் நமக்காக பலர் உள்ளார் என்று ்,இங்கு நான் அரட்டை அடிக்க வரவில்லை முதலில் புரிந்து கொளுங்கள்,யாரையும் நான் கஷ்டப்படுத்தி இன்பம்கானவும் இங்கு வரவில்லை

//தவறாக பேசினால் மன்னிக்கவும்// :-) என்னிடம் மன்னிப்புக் கேட்கிறதுக்கு நீங்க எனக்கு எதிரா எதுவும் பண்ணலயே சரண்யா!

//இது என்ன இப்படி ஒரு கேள்வியா என்று நினைக்கலாம்// :-) நீங்க இன்னும் கொஞ்சம் விளக்கமா போட்டிருந்தால் //இது என்ன இப்படி ஒரு கேள்வியா// என்று தோணியே இராது. நீங்க கொடுத்த விபரத்தை வைத்து எனக்குத் தோணிதைச் சொன்னேன். உங்களுக்கு என் பதில் திருப்தி இல்லை என்று தெரியுது. மன்னிச்சுக்கங்க. இப்போ உடல்நிலை பரவாயில்லையா!

அடுத்த தடவை மறக்காம கேள்வியை டீடெய்லா எழுதுங்க. எனக்குன்னு வேணாம், படிக்கிற யாரா இருந்தாலும் கேள்வி தெளிவா இருந்தாதானே சரியான பதில் சொல்லுவாங்க.

//நான் தனித்து கேள்வியை கேட்டு எனக்கான பதில் கிடைக்கும் போழுது// புரியுது கண்ணா. ஆனால் இணையம் என்று வந்துட்டா நம்ம சொந்த ப்ளாக் அல்லது சொந்த வெப்சைட் கூட எல்லோரும் வந்து போகும் இடமாக மாறிருது. இது தனிப்பட எங்கள் சைட் இல்லையல்லவா? நாங்க மெம்பர்ஸ். இங்க எல்லா த்ரெட்டும் எல்லோருக்கும் பொது என்கிறதாகத் தான் இருக்கும்.

ஒரு சின்ன ஹெல்ப்... http://www.arusuvai.com/tamil/node/27207 - நேரம் கிடைக்கும் போது மறக்காம படிச்சுப் பாருங்க. இனி த்ரெட் ஆரம்பிக்கும் போது உதவி வேணும் என்கிறதா இருந்தாலும் த்ரெட் எதைப் பற்றியது என்கிறதை தலைப்பாகப் போட்டுவிட்டுருறீங்களா?

சந்தோஷமா இருங்க. சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் பெருசா எடுத்து யோசிக்கப்படாது. அதே சமயம் முக்கியமான விஷயங்களை கவனிக்காமல் தவிர்க்கவும் கூடாது.

‍- இமா க்றிஸ்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி,இப்போழுது உடல் நிலை கொஞ்சம் மேல் ,நீங்கள் சொன்னது சரிதான்,இனிமேல் தவறு இல்லாத வாறு பார்த்துக் கொள்கிறேன் இமா அக்கா

Hi frnds ennakku mrge agi 6 month achu kadaisiya na march 28 periods ana innum ennakku period agala doctor ta 2 week munnadi check panna but result negative. ipa vara na bleeding varala doctor naduvula bleeding vantha mattum va athu vara nama ethum panna vendam nu sonnaga. ana ennaku pregnancy sign ethum mea therila ennaku perioda pblm irukku ana epadium 21 to 40 days kulla ayiruven. But intha murai bayam ma irukku na pregnancy ya illa apadi ethum illaiya. pregnancy sign epa irunthu theriya arambikkum

மேலும் சில பதிவுகள்