iui

iui செய்த பிறகு உடலுறவு கொள்ளலாமா. உடலுறவு இருக்கலாம் என்றால் எத்தனை நாட்கள் உறவு கொள்ளலாம்.இதனால் எதாவது பாதிப்பு ஏற்படுமா pls help me

Iui பண்றதுகு ஓரு நாள் முன்பும் iui பண்ணி ஒரு நாள் பின்பும் பண்ணலாம்ம்ம்.

sarmi hospital poitu vanthingla

இல்ல இனி 20தேதி வர சொன்னார் ...baby heart beat பார்க்க ..நீங்க hospital போனதோ ?

iui செய்த பிறகு ஒரு நாள் மட்டும் இருக்கனுமா அதற்கு மைல் இருக்கக் கூடாதா

ஆமா ...ஏன் அதுக்கு அப்புறம் உறவு வைக்க ஆசை படுரீன்க .ஹௌ பொறுமையாக இருங்க

நன்றி தோழி.

முதலில் சர்மி என்னை மன்னிக்க வேணும். இந்த இழையைப் பலர் படிக்கப் போகிறார்கள். சுஜாதாவுக்கும் சரியான விபரம் இன்னது தான் என்று தெரிய வேண்டும். எனக்குத் தெரிந்ததை இங்கு பதிவிடாமல் போக மனம் இடம் கொடுக்கவில்லை.

எப்பொழுதும் ஒருவருக்கு மருத்துவர் பரிந்துரைத்த விடயம் இன்னொருவருக்குப் பொருத்தமாக இராது.

//iui செய்த பிறகு உடலுறவு கொள்ளலாமா.//ஆம். இது நல்லது என்கிறார்கள்.
சிலருக்கு மட்டும் மருத்துவர்கள் 48 மணி நேரம் பொறுத்திருக்கச் சொல்லக் கூடுமாம். (எனக்கு இங்கு சஜாதாவுக்குக் கிடைத்த பதில் நம்பிக்கையாகப் படாததால் இப்போது ஆங்கிலத்தில் கூகுள் செய்து அறிந்துகொண்டேன்.)

//உடலுறவு இருக்கலாம் என்றால் எத்தனை நாட்கள் உறவு கொள்ளலாம்.// எத்தனை நாட்கள் வேண்டுமானாலும். இதில் பிரச்சினை இல்லை.
மருத்துவர் தவிர்க்கச் சொன்னால் தவிர IUI க்கு முன்பு எப்படி இருந்தீர்களோ அப்படி எப்பொழுதும் சாதாரணமாக இருக்கலாம்.

//இதனால் எதாவது பாதிப்பு ஏற்படுமா// இல்லை. நல்லது என்கிறார்கள்.
இதை மருத்துவர்கள் ஊக்குவிப்பதாகத்தான் தெரிகிறது.
IUI செய்தது ஒரு பக்கம், இயற்கை முறை இன்னொரு பக்கம்; ஒன்று மிஸ்ஸானால் இன்னொன்று என்று கருத்தரித்தலுக்கு ஒரே சமயம் இரண்டு வித்தியாசமான சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுக்கிறீர்கள். கூடாது என்று என் கண்ணில் படவில்லை.

கர்ப்பம் என்று நிச்சயம் தெரிந்த பின்னால் முதல் மூன்று மாதங்கள் கவனமாக இருங்கள். பிறகு அதே போல கடைசி 3 மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும். இதன் கருத்து உடலுறவு அடியோடு ஆகாது என்பதல்ல. கவனமாக இருக்க வேண்டும்.

//Iui பண்றதுகு ஓரு நாள் முன்பும் iui பண்ணி ஒரு நாள் பின்பும் பண்ணலாம்.// இது தனிப்பட்ட ஒருவருக்கு டொக்டர் சொன்ன அபிப்பிராயம். எல்லோருக்கும் இப்படித்தான் சொல்வார்கள் என்பது இல்லை.

//ஏன் அதுக்கு அப்புறம் உறவு வைக்க ஆசை படுரீன்க .// :-) இந்த எண்ணம் சரியாகத் தெரியவில்லை எனக்கு.
குழந்தை மட்டும்தான் வாழ்க்கை என்பது இல்லை. குழந்தை கிடைப்பதற்காக மட்டுமேதான் கலியாணமும் உடலுறவுமா? கணவன் - குழந்தையைக் கொடுக்கும் இயந்திரம் அல்ல. அன்பு, பாசம், உணர்வுகள் எல்லாம் அவர்களுக்கு உண்டு. கர்ப்பமானதும் தள்ளி வைக்க முடியாது. அத்தியாவசியம் என்றால் தவிர, அது சரியல்ல. கலியாணம் பண்ணுவோம்; அவங்க உழைச்சு எங்களைப் பார்த்துப்பாங்க; சிகிச்சையும் அவங்க பணத்தில்தான் பெரும்பாலும் நடக்கும். ஆனால் ஒரு மனைவியால் மட்டும் கிடைக்கும் ஒரு விடயத்தை மறுப்பது!!!

‍- இமா க்றிஸ்

மன்னிக்கவும் இமாம், சுஜாதா .நான் இப்டி உறவு வைத்தா குழந்தை தரிக்க பிரச்னை என்று நினைத்தn.iui பின் உடம்பு வலி இருக்கும் அதுதான் relaxa இருந்தா நல்லது என்று நினைத்தது சொன்னன் .மீண்டும் sorry

nan arusuvaikku puthusu
enakkum mrge aagi 5 years aaguthu
laproscopy panni 3 month aaguthu
ippa iui panni 1 week aaguthu

stomach pain jasthiya irukku
appadi than irukkuma?
vaginail oru tablet vaikka thanthurukkanga daily um
athu eathukaga vaikka solranga pls sollunga?

:-) Sorry வேண்டாம் சர்மி. நீங்களும் விஷயங்களைத் தெரிஞ்சு வைச்சிருக்கிறது நல்லதுதானே!

//iui பின் உடம்பு வலி இருக்கும் // 'இருக்கும்' என்பது இல்லை சர்மி.

இதுவும் ஆளுக்காள் வேறுபடுகிற விஷயம்தான். சிலருக்கு இருக்கும். சிலருக்கு இராது. கட்டாயம் இருக்கும் என்கிறது இல்லை. வேதனை இருந்தாலும், சிலரால் பொறுத்துக் கொள்ள முடியும்; சிலரால் அது முடியாது. சிலருக்கு கொஞ்சம் ப்ளீடிங் இருக்கும். சிலருக்கு இராது.

மாதவிடாய் - சிலருக்கு பயங்கரமாக வயிற்று வலி இருக்கும். சிலர் எதுவுமே இல்லாதது போல எல்லா வேலையும் செய்வார்கள்.

DNC செய்துவிட்டு மறுநாள் வேலைக்குப் போறவங்க இருக்கிறாங்க; குழந்தையைப் பிரசவித்த மறுநாள் எழுந்து நடக்கிறவங்களும் இருக்கிறாங்க.

ஓய்வு அவசியமானால் தவிர அக்டிவ்வாக இருப்பதுதான் நல்லது. அது உடல் நிலை விரைவில் பழைய நிலைக்குத் திரும்ப உதவும்.மனது கண்டபடி யோசிக்காமலிருக்கவும் உதவும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்