
''குண்டு, குண்டு தக்காளி
சிவப்பு, சிவப்பு தக்காளி
தங்கமான தக்காளி
தரமான தக்காளி'' என்று கூவிக் கூவி , ஏலம் போட்டு தக்காளி விற்பார்கள். தாலி இல்லாத கல்யாணமா? தக்காளி இல்லாத சமையலா? என்று பட்டிமன்றமே நடத்தலாம்.
நமக்கு சமையலுக்கு அவசியம் தேவைப்படுவது தக்காளியும், வங்காயமும். இவைகளின் விலை வீழ்ச்சி அடைந்தால் பாவம் விவசாயிகள் என்று ஆதங்கம். விலை ஏறினால் பாவம் குடும்பத் தலைவிகள் என்று ஆதங்கம். ஆனால் தளத்தள தக்காளியை பார்க்கும் போது தக்காளி சாம்பாரா?, தக்காளி குருமாவா? தக்காளி ஊறுகாயா? தக்காளி சாதமா? தக்காளி ரிச் புட் கிரேவியா? நு சிந்திப்பது சுகமான சிந்தனை.
நாம் சுலபமாகவும், அவசரமாகவும் செய்வது தக்காளி சட்டினியே. இட்லி, தொசை, சப்பாத்தி, பூரிக்கு ஏன் எல்லா டிபன் ஐட்டத்திற்கும் ஏற்றது தக்காளி சட்டினியே. தக்காளி சட்டினி என்றால் அது பல வகைப்படும். தக்காளி கடையல், தக்காளிக் குருமா, தக்காளி ஊறுகாய், தக்காளித் தொக்கு, தக்காளி வதக்கல், தக்காளி கிரேவி, தக்காளி சூப் கிரேவி என்று பல விதம் இருக்கும்.
நாங்கள் தோழிகள் நால்வர். ஒரு நாள் பணி நிமித்தம் வேறு அலுவல
கத்திற்கு சென்றோம். மதிய உணவு இடைவேளை. எல்லோரும் அவரவர் டிபன் பாக்ஸ் திறந்துக்கொண்டே ''நீ என்ன உணவு கொண்டு வந்தாய்? உனது என்ன சாதம்?, '' என்று கேட்க, எல்லோரும் கோரஸாக ''தக்காளி சாதம்''' என்றோம். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டோம். ஆனால் நான்கும் நான்கு விதம்.
தக்காளி சாதம் ___ 1
வாணலியில் எண்ணைவிட்டு, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய், பெருங்காயம்தூள், கரிவேப்பிலை போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி தேவையான உப்பு மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர்விடாமல் வதக்கி சாதத்தில் சேர்த்து கலந்து, கொத்தமல்லிதழையை பொடியாக தூவி அலங்கரிக்க வேண்டும். மிகவும் சுவையாக இருந்தது.
தக்காளி பிரியாணி___2
குக்கரில் எண்ணை விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, பூண்டு பேஸ்ட், இஞ்சி பேஸ்ட், வங்காயம், தக்காளி போட்டு தாளித்து தேவையான தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்கும் போது அரிசி சேர்த்து, மூன்று விசில் வைத்து இறக்கவும். தயிர் பச்சடியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது.
தக்காளி சாதம்___3
வாணலியில் எண்ணை விட்டு கடுகு, பெருங்காயம், தாளித்து தண்ணீர்சேர்க்காமல் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து , அதில் கலப்பு இல்லாத் மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பச்சைவாசனை போக கொதிக்க விட்டு, நன்கு வறுத்து பொடித்த கடுகுப் பொடியையும், வெந்தியப் பொடியை சிறிது சேர்க்கவும். இதை சாதத்தில் கலந்து தக்காளி சாதமாகும். இந்த தக்காளி சாதத்துடன் வாழைக்காய் வறுவலுடன் சாப்பிட நல்ல சுவையாக இருந்தது.
தக்காளி சாதம்____4
வாணலியில் தாரளமாக எண்ணை விட்டு பட்டை கிராம்பு பொடியாக சேர்த்து, இஞ்சிபூண்டு விழுது சேர்த்து, பொடியாக நறுக்கிய வங்காயம் தக்காளியை விட்டு நன்கு வதக்கி வறுத்து பொடித்த முந்திரி தூளை சேர்த்து, சிறிது தயிர் விட்டுக் கொதிக்க விடவும். தேவையான உப்பு மஞ்சள் தூள்சேர்க்கவும். நன்கு கொதித்து எண்ணை பிரிந்து கிரேவி தளத்தளவென்று இருக்கும் போது இறக்கிவிடவும். இந்த கிரேவியை சாதத்துடன் கலந்தது ஒரு வகை தக்காளி சாதமாகும். இதை சிப்ஸ்வுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது.
நாங்கள் சுவைத்து, அனுபவித்து சாப்பிட்ட வகை வகையான தக்காளி சாதத்தை நீங்களும் செய்து சாப்பிட்டு மகிழுங்கள் அறுசுவை சகோதரிகளே.
Comments
தக்காளி தக்காளி
நாலு குறிப்புமே ஆசையைத் தூண்டுது ரஜனி. ஒவ்வொன்றாக ட்ரை பண்ண வேண்டியது தான்.
- இமா க்றிஸ்
இமா
ஹாய்,
'''நாலு குறிப்புமே ஆசையைத் தூண்டுது ரஜினி'''' பாராட்டுக்கு நன்றி இமா.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
Tomato
அந்த 3 ஆவது தக்காளியை சுடுதண்ணிக்குள்ள போட்டு தோல் நீக்கி அரைக்க வேணுமோ ?? அல்லது அப்பிடியே செய்ய வேணுமோ ? எனக்கும் தக்காளி சாதம் தயிரும் பொடைட்டொசிப்ஸ் ம் சேர்த்து சாப்பிட ரெம்ப பிடிக்கும் ? ஆனா நறுக்கித்தான் செய்திருக்கேன் நீங்க சொன்னமாதிரி அரைச்சு செய்து பாக்க போறேன் செய்துட்டு படம் காட்டுறேன் .
சுரேஜினி
ஹாய்,
தக்காளியை பொடியாக நறுக்கி மிக்ஸியில் மசிய அரைதால் போதும் சகோதரி. '''செய்துட்டு படம் காட்டுறேன்''''நன்றிமா.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
ரஜினி மேம்
தக்காளி - எனக்கு ரொம்ப பிடித்தமானது.. தக்காளி சட்னி இல்லாத ஒரு நாள் எங்க வீட்டில் கிடையாது.. 80 ரூபாய் விற்றாலும் கார சட்னி வைத்தே ஆகனும்.. தக்காளி சாதம் அதை விட ரொம்ப பிடிக்கும் ..
நீங்க சொன்ன மாதிரி எங்க அம்மாவும் சப்பாத்திக்கு தக்காளி சட்னி செய்வாங்க.. எங்களுக்கு அதுதான் குருமாவை விட இஷ்டம்..
நீங்க சொல்லியிருக்க 4 வகை தக்காளி சாதத்தையும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.. குறிப்பிற்கு நன்றி மேம்.. :)
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
அபி
ஹாய்,
'''குறிப்பிற்கு நன்றி மேம்'''நன்றிமா.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
அன்புள்ள ரஜினி
என்ன விலையானாலும் சரி. தக்காளி இல்லாமல் சமையலே இல்லை. தக்காளியின் சுவையே சுவை. தக்காளி ரசம் ரொம்பப் பிடிக்கும். தக்காளி சாத வகைகளை செய்து பார்க்கிறேன் ரஜினி.
தக்காளி சாதங்கள்
அன்பு ரஜினி,
நான்குமே வித்தியாசமான குறிப்புகள். நன்றி.
அன்புடன்
சீதாலஷ்மி
சீதாலட்சுமி
ஹாய்,
பாராட்டுக்கு நன்றி சீதாலட்சுமி.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
ரஜினி
சுரேஜினி ஃபேஸ்புக்ல அறுசுவை பேஜ்ல படம் போட்டிருக்கிறா.
- இமா க்றிஸ்
இமா
ஹாய்,
தகவலுக்கு நன்றி இமா. ஸ்பெஷல் தேங்ஸ் டூ சுரேஜினி.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
இமா
ஹாய்,
தகவலுக்கு நன்றி இமா. ஸ்பெஷல் தேங்ஸ் டூ சுரேஜினி.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு
அருமை அருமை
தக்காளி சாதம் 4 try பன்னினேன் super a இருக்கு தோழி
எல்லாம் நன்மைக்கே
சுதர்ஷா
ஹாய்,
'''தக்காளி சாதம் 4 டிரை பன்னினேன் சூப்பரா இருக்கு தோழி'''பாராட்டுக்கு நன்றி தோழி.
கடல் அளவு ஆசை
கையளவு மனசு