பிரசவ சந்தேகம்

எனக்கு இது 2-வது குழந்தை. முதல் குழந்தை சுகப்பிரசவம். எனக்கு தற்போது 37 -வது வாரம் துவங்கியுள்ளது. கடந்த வாரம் எனது வயிறு நன்கு கீழிறங்கியிருந்தது. அப்போது எல்லோரும் கடந்த வாரமே பிரசவம் இருக்கும் என்று சொன்னார்கள். நானும் எதிர்பார்த்தேன். ஆனால் தற்போது வயிறு மேல் வயிறாக இருக்கிறது. கடந்த வாரம் கீழ் வயிறாக இருந்தது இப்போது மேல் வயிறாக இருப்பதால் பயமாக உள்ளது. எனது சந்தேகம் என்னவெனில் ஒருமுறை கீழிறங்கிய குழந்தை மறுபடியும் மேலே ஏற வாய்ப்புகள் இருக்கா? இதனால் பிரச்சினை எதுவும் ஏற்படுமா? மீண்டும் குழந்தை கீழிறங்க வாய்ப்பு உண்டா? உங்களில் யாருக்காவது இப்படி அனுபவம் உள்ளதா? மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். தயவாய் எனக்கு உடனடி பதில் தாருங்கள்...

குழந்தை நீர் வட்டத்துக்குள் தானே இருக்கு.அங்குட்டு இங்குட்டு ஓடீட்டுதான் இருக்கும்.பயம் இல்லை.துடிப்பு சரியா இருந்தால் சரி.உங்களுக்கு ரெம்ப வித்தியாசம் தெரிந்தால் டாக்டரிடம் போய் பாருங்கள் அவர்கள் அகலம் நீளம் இறக்கம் எல்லாம் குறித்து வைத்திருப்பார்கள் ஒப்பிட்டு பாத்து பதில் சொல்வார்கள்.

முதல் குழந்தை பிரசவம் சிசேரியன் என்றால் 2-வது குழந்தையும் சிசேரியனில் தான் பிறக்குமா?????? தெரிந்தவர்கள் பதிலளிக்கவும்

முதல் குழந்தை பிரசவம் சிசேரியன் என்றால் 2-வது குழந்தையும் சிசேரியனில் தான் பிறக்குமா?????? தெரிந்தவர்கள் பதிலளிக்கவும்............. தோழிகளே...........

மேலும் சில பதிவுகள்