என் பையன் பிறந்து 15 நாட்கள் ஆகின்றது இன்று காலையில் இருந்து இடது கண் மட்டும் பொங்கி கொண்டே இருக்கிறது அதற்கு என்ன செய்தால் சரி ஆகும் please யாராவது உதவி செய்யுங்கல்
என் பையன் பிறந்து 15 நாட்கள் ஆகின்றது இன்று காலையில் இருந்து இடது கண் மட்டும் பொங்கி கொண்டே இருக்கிறது அதற்கு என்ன செய்தால் சரி ஆகும் please யாராவது உதவி செய்யுங்கல்
கண் பொங்குதல்
அன்பு திவ்யா,
உஷ்ணத்தினால் கண் பொங்குவது உண்டு. ஏதாவது இன்ஃபெக்ஷன் ஆகி இருந்தாலும் கண் பொங்கும்.
15 நாள் குழந்தைக்கு கை வைத்தியம் செய்யறதை விட, டாக்டர்கிட்ட காண்பிக்கறதுதான் நல்லது.
அன்புடன்
சீதாலஷ்மி
thank u sister
உஷ்ணம் காரனாமாக இருந்தால் அதற்கு என்ன செய்ய வேண்டும் சிச்டெர்
நாளைக்கும் இப்படி இருந்தால்
நாளைக்கும் இப்படி இருந்தால் hospital போக வேன்டும் சிச்டெர்
அன்புள்ள திவ்யாபிரபாகரன்
அன்புள்ள திவ்யாவிற்கு,
உங்கள் வீட்டில் நாமக்கட்டி (வைணவர்கள் நெற்றியில் அணிந்து கொள்வது) இருந்தால் நல்லது, அல்லது தெரிந்தவர்கள் வீட்டில்,அல்லது பெருமாள் கோயில் வாசலில் கடையில், அல்லது நாட்டுமருந்து கடையில் கிடைக்கும். (வெள்ளையாக இருக்கும் சாக்பீஸ் போல)
அதை கையை நன்கு சுத்தமாகக் கழுவி விட்டு உள்ளங்கையில் சொட்டு சொட்டாகத்
தண்ணீர் விட்டு அந்த வெள்ளை நாமக் கட்டியை இழைக்கவும்.
இழைத்த விழுதை குழந்தையின் கண்ணின் மேல்புறம் புருவத்திற்கு
மேலேயும், கீழ் இமைக்குக் கீழேயும் தடவி விடவும். கண் பொங்கல்
போய் விடும். தூசு தும்பு இல்லாமல் தடவி விடவும். பிறகு நீரில் நனைத்த பஞ்சினால் துடைத்து விடவும். உங்கள் உணவு காரமானதாக இருந்தாலும் அப்படி ஆகுவது உண்டு. அதைப் பார்க்கவும்.
விளக்கெண்ணெய் பயன்படுத்தும் வழக்கம் இருந்தால் ஊறெண்ணெய் கிடைத்தால் நல்லது. அல்லது கடையில் வாங்கும்
விளக்கெண்ணெயை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் காய்ச்சி வைத்துக்
கொள்ளவும். ஆறிய பின் அதில் இரண்டு இரண்டு சொட்டு குழந்தையின் உள்ளங்காலில் தடவி விடவும். சரியாகி விடும். பொதுவாக ஊறெண்ணையினை தினமும் காலையில் குழந்தையில்
உச்சிதலையில் குழிவு பகுதியில் (எலும்பு கூடாத பகுதி) இரண்டு
சொட்டாவது வைப்பார்கள், அது மிக மென்மையான அந்த இடத்தினை
கரப்பான் பூச்சி, எறும்பு போன்றவை கடிக்காமல் இருக்க (குழந்தைமேல் இருக்கும் பால் வாசத்திற்கும், மென்மையாக வீசும்
ரத்த வாசத்திற்கும்( தோல் இன்னும் சரியாக நம்முடையது போல் இல்லாமல் மிக மிக மென்மையாக இருக்கும் முகர்ந்து பார்த்தால் தெரியும்) விளக்கெண்ணெய் தடுப்பானாக வேலை செய்யும். அதன்
வாசத்திற்கு பூச்சிகள் கிட்டேயே வராது, தலைமயிர் நன்கு வளரும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
thank u amma
ரொம்ப நன்றி அம்மா உங்கள் பதிவு எனக்கு மிகவும் useful அக உள்ளது மிகவும் நன்றி அம்மா
ஊரெண்னெய் ஏன்றால் என்ன.
ஊரெண்னெய் ஏன்றால் என்ன. அம்மா?
நாமக்கட்டியை உரசி கண்னின்
நாமக்கட்டியை உரசி கண்னின் மேல்புறம் மேல் இமையில் போட வேன்டுமா அம்மா?
திவ்யா பிரபாகரனுக்கு
ஒரே கேள்விக்கு திரும்பத் திரும்ப புதிது புதிதாக இழைகள் ஆரம்பிக்க வேண்டாமே! ஏற்கனவே உங்கள் இழை ஒன்று வெறுமையாக இடத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கிறது. இப்போ இன்னொன்று!
பூங்கோதை எப்போதாவதுதான் வருவாங்க. திரும்ப த்ரெட் போடாமல் பொறுமையாக இருங்க.
//உடனெ பதில் சொல்லுங்கல் அம்ம அவசரத்தில் உள்ளென்.// இப்போதைக்கு பூங்கோதை வருவது சந்தேகம்தான். உங்களுக்கு லக் இருந்தால் வருவாங்க. அல்லாவிட்டால் இன்னும் குறைந்தது நான்கைந்து மணி நேரம் காத்திருக்க வேண்டும். பதில் கிடைக்காவிட்டால் புது த்ரெட் போட வேண்டாம். மீதி இழைகள் முகப்பிலிருந்து காணாமல் போய்விடும். மற்றவர்களுக்கு சிரமமாக இருக்கும்.
- இமா க்றிஸ்
Sorry imma mam.. Enakku
Sorry imma mam.. Enakku theriyathu.. Athan puthu thread open paniviten