தேதி: February 23, 2007
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
காலிஃப்ளவர் - 1
காய்ந்தமிளகாய் - 3
வெங்காயம் - பாதி
பச்சைமிளகாய்- 4
தேங்காய் பூ - 4 மேசைக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
வேர்கடலை - 1 மேசைக்கரண்டி (பொடியாக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை -சிறிது
மஞ்சள்தூள் - சிறிது
முதலில் காளிஃப்ளவரை 10 நிமிடம் கொதிக்கும் தண்ணீரில் போட்டு சிறிதாக நறுக்கிகொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
பின் அடுப்பில் சட்டியைவைத்து காய்ந்தமிளகாய்,கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் இரண்டாக கீறிய பச்சைமிளகாயை போட்டுவதக்கி,மஞ்சள்தூள், தேங்காய் பூ,உப்பு,போட்டு வதக்கி,பின் காளிஃப்ளவரை போட்டு நன்கு வதக்கி வேகவிடவும்
நன்கு வெந்ததும் வேர்கடலை பொடி சேர்த்து வதக்கி கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கவும்.
Comments
நேற்று
நேற்று காலிபிளவர் பொடிமாஸ் செய்தேன். சுவை அருமை.
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..
ஹாய் இலா
காளிப்ளவர் பொடிமாஸ் செய்து கருத்து சொன்னதுக்கு நன்றி.
அன்புடன் கதீஜா.
ஹாய் கதீஜா,
ஹாய் கதீஜா,
இந்த வார தொடக்கதில் உங்களின் இந்த ரெஸிப்பி ட்ரை செய்தேன், ப்ரோக்காலி வைத்து. சுவை அருமையாக இருந்தது.
இன்றுதான் பின்னூட்டம் கொடுக்க முடிந்தது. நன்றி!
அன்புடன்,
ஸ்ரீ
அன்புடன்
சுஸ்ரீ
ஸ்ரீ
இதே முறையில் செய்து எனக்கு ஒரு புது ஐடியா கொடுத்திருக்கீங்க நன்றி.
அன்புடன் கதீஜா.