பெண்ணாகப் பிறத்தல் அரிது

அன்புத் தோழிகளே,

கொஞ்ச நாட்களாகவே பத்திரிக்கை படித்தாலே மனம் வேதனைப் படுகிறது.

எத்தனை எத்தனை முகங்கள் என்றொரு பாட்டு கேட்ட நினைவு.

இன்றைய செய்திகளையும் நாட்டு நடப்பையும் பாக்கறப்ப, பெண்மை என்ற வார்த்தைக்கு நாம் கேட்ட பொருள் என்ன, இப்ப நடப்பது என்ன என்று அதிர்ச்சியாக இருக்கு.

பொருந்தாத உறவுகள், கூலிப்படைகள், பெண் தற்கொலை, பெண் கொலை இப்படி தொடரும் நிகழ்வுகள்..

ஏன் இப்படி?

படிப்பும் வெளி உலக அனுபவமும் தரும் முடிவு இதுதானா?

படிக்காத, அடுக்களையை விட்டு வெளியே வராத, குடும்பத்தினரையும் நெருங்கிய உறவினரையும் தவிர வேறு யாரையும் பார்த்தறியாத, அன்றைய பெண்களுக்கு இத்தனை பிரச்னைகள் இருக்கவில்லையே.

இன்று ஏன் இப்படி?

சிந்திப்போம்.

நம் மனதில் இருக்கும் குழப்பங்களை தீர்த்து, நல் வாழ்க்கை வாழ, வழிகள் கண்டறிவோம் வாருங்கள்.

உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

ஒவ்வொரு பெண்ணும் நலம் பெற வழி சொல்லுங்கள்.

பொருந்தாத உறவுகள், கூலிப்படைகள், பெண் தற்கொலை, பெண் கொலை இப்படி தொடரும் நிகழ்வுகள்..// நீங்களே இதற்கான பதிலை சொல்லி இருக்கீங்களே பொருந்தாத‌ உறவுகள்?அதனால் அதிகமான் பிரச்சனை வருது, நீங்க‌ செய்தி பார்த்தாலே தெரியும் அதகாமான கொலை, பெண் சார்ந்த‌ நபர்கள் தான் செய்கிறார்கள். அதனால் பெண்கள் தன்னோடு இருப்பவரகளையும் உடன் வேலை செய்பவர்களையும்,பிரித்து பார்க்க‌ கற்றுக்கொள்ள வேண்டும். நல்லவர் யார் கெட்டவர் யார் என்று, அப்படி யூகிக்க‌ தெரிந்தாலே பெண் பிரச்சனைக்கே போகவேண்டிய‌ வேலை இருக்காது.அவாறு யூகிக்க‌ முடியாத‌ நிலையில் பெண்கள் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்வது அவசியம். இது வரை உள்ள பெண்கள் அதிகமாக‌ கற்றுக்கொள்ளவில்லை, ஆனால் இனி நம் பெண்குழந்தைகளை கராத்தே மற்றும் ஆபத்து சமயங்களில் தன்னை எப்படி காத்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுக்க‌ வேண்டும்.அவ்வாறு கற்றுக்கொடுத்தால் அடுத்த‌ தலைமுறை பெண்கள் இந்த‌ பிரச்சனையில் இருந்து தன்னை காத்துக்கொள்வார்கள்

எல்லாம் நன்மைக்கே

அன்பு சுதர்ஷா,

உண்மைதான்.

காதலும் திருமண வாழ்வும் மனித குலத்துக்கு எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு முக்கியமானது, நல்ல பொருத்தமான துணையை தேர்ந்தெடுத்து வாழ்வது.

இனக் கவர்ச்சி என்பது டீனேஜில் தொடங்கிடுது. ஸ்கூல் நாட்களைப் பொறுத்தவரை, பெற்றோர் கூடவும், பள்ளியிலும் செலவு செய்யும் நேரம் அதிகம். அதோடு ஒரு பயமும் பிள்ளைகளை அடக்கி வைக்கிறது.

ஆனால், கல்லூரி வந்தவுடன், அல்லது வேலை கிடைத்தவுடன், சந்திக்கும் எதிர் பாலினரிடம் நட்பையும் தாண்டி ஈர்ப்பு தோன்றுகிறது.ஏதாவது செய்து, அவர்களை ஈர்க்கத் தோன்றுகிறது.

கருணை, அழகு, அன்பு, ஹீரோயி(னி)சம் இப்படி எல்லாம் சாகசங்கள் செய்யத் தோன்றுகிறது.

ஆண் பெண் இரண்டு பேருமே ஒன்றை யோசிக்கணும்.

நாம் இப்ப சந்த்திக்கின்ற இந்த வட்டத்தில் இவர் பெஸ்ட் என்று நினைத்து, பழக ஆரம்பிக்கிறோம்.

நாம் இனிமேல் நம் வாழ்க்கையில் தி பெஸ்ட் என்று சொல்லக் கூடிய நபரை சந்திக்கப் போவதேயில்லையா?

அப்படி சந்திக்கிற எல்லோரும் வாழ்க்கைத் துணை ஆகி விட முடியுமா?

இதை யோசித்தாலே மயக்கம் தெளிஞ்சுடும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பெண்கள் பிரச்சனையை சந்தித்து கொண்டுதான் இருக்கின்றனர் அன்றைய பெண்கள் அடுக்களை விட்டு வராததால் அவர்கள் பிரச்சனையும் வெளியே வரவில்லை அன்றைய கால கட்டத்தில் மீடியா, டெக்னாலஜி , போன்றவை இல்லை ஆனால் இன்று டெக்னாலஜி வளர்ச்சி காரணமாக சமூக வலைத்தளங்களும் மீடியாவும் பெருகிவிட்டன ! இதனால் எல்லா விஷயங்களும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளமுடிகிறது

பொருந்தாத உறவு பெரும்பாலும் சகிப்பு தன்மை இல்லாமலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லாததாலும் ஏற்படுகிறது.
அளவுகடந்த ஆசை வாழ்க்கையை சிதைக்கிறது

பெண் தற்கொலை பெண்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் பயத்தினால் தற்கொலை செய்து கொள்கின்றனர் இன்றைய கல்வி வாழ்க்கையை எதிர்கொள்ள தேவையான தைரியம் பக்குவத்தை வழங்காமல் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் ஏட்டு சுரைக்காயாக உள்ளது .

பெண்கள் இன்றைய நவீன காலத்தில் சமூக வலை தளங்களிலும் பிறரிடம் பேசும்போது தங்களை பற்றிய தேவை இல்லாத முகவரி ,தொலைப்பேசி,மின்அஞ்சல் போன்ற தனிபட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்ளக்கூடாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் நண்பர்களை போல பழக வேண்டும்

மேலும் சில பதிவுகள்