வணக்கம். எனக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இது வரைக்கும் எனக்கு மாதவிடாய் தள்ளிப் போனது இல்லை. ஒவ்வொரு மாதமும் period வரும். எனக்கு இறுதியாக period வந்தது 20 மே. இது வரைக்கும் எனக்கு period வரவில்லை. 15 நாள்கள் ஆகிவிட்டன. நானும் மூன்று முறை pregnancy test செய்துவிட்டேன். ஆனால், result -ve. ஏன் என்று தெரியவில்லை... மிகவும் கவலையாக இருக்கிறது. நான் கர்ப்பமாக இருக்கிறேனா இல்லையா என்ரு தெரியவில்லை... முதல் குழந்தைக்காக ஆர்வமாக இருக்கிறேன்... ஒரு சிலருக்கு மூன்று வாரங்கள் கழித்துதான் result +ve காட்டும் என்கிறார்கள். இது உண்மையா?
கோட்டி
. ஒரு சிலருக்கு மூன்று வாரங்கள் கழித்துதான் result +ve காட்டும் என்கிறார்கள். இது உண்மையா? 50 நாள் முடிந்தால் தான் தெளிவா தெரியும் அதனால் பயப்படாதீங்க ரிசல்ட் என்ன வந்தாலும் ஏத்துக்கொள்ள மனதை தயார் செய்து கொள்ளுங்கள், நம் என்னமே செயலாக மாறும் அதனால் நம்பிக்கை கைவிடாதீங்க
எல்லாம் நன்மைக்கே
ரொம்ப நன்றி... நல்லது
ரொம்ப நன்றி... நல்லது நடக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்... thank you sister..
இறுதியில் எனக்கு ஏமாற்றமே
இறுதியில் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது தோழி. 46 நாள்கள் கழித்து எனக்கு period வந்து விட்டது. மிகவும் கவலையாக உள்ளது. நிறைய அழுதேன். என் கணவர் எனக்கு ஆதரவாக உள்ளார். இந்த நான்கு வருடத்தில் நான் பெண்களால் தான் அதிகம் வேதனையடைந்துள்ளேன். அங்கு பார்த்தாலும், 'இன்னும் ஒன்னும் இல்லையா?' / 'வயிற்றில் ஒன்னும் இல்லையா?' / 'வயிறு இன்னுமா காலியா இருக்கு?' இதே போல் நிறைய கேள்விகள். எனக்கு பின் திருமணமாகி தாய்மையடைந்த பெண்களோடு ஒப்பீட்டுப் பேசுவது. இந்த ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கூற முடியாமல் நான் தவித்திருக்கிறேன். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் இறுதி வரை என்னால் பதிலளிக்கவே முடியாமல் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது. கடவுளுக்கும் என் மேல் கருணையில்லை போலும்....
கோட்டி
கவலைபடாதீங்க தோழி உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும். உங்க கணவர் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார் அப்புறம் ஏன் கவலைபடுறீங்க எத்தனையோ பெண்களுக்கு அந்த ஆதரவு கூட இல்லை. உங்களுக்கு குழந்தை பிறக்காதோ யோசிக்காதீங்க உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும் நம்புங்க.
நன்றி தோழி... மனதில் உள்ளதைப்
நன்றி தோழி... மனதில் உள்ளதைப் பகிர்ந்து கொண்டப்பிறகு தான், நான் தெளிவாக இருக்கிறேன்.
hai koatti
கோட்டி நீங்கள் கவலை பட வேண்டாம்....எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் முடிந்து விட்டது....எனக்கு இர்ரெகுலர் ப்ரிஎட் தான் ...மாத்திரை போட்டால் தான் வரும் ...ஆனால் இப்பொழுது நான் 4 மாத கற்பம்...கடவுள் நினைக்கும் பொழுது கன்டிப்பாக கிடைக்கும்..சந்தோஷமாக காத்திருங்கள்...கிடைக்கும் விரைவில்......
neenga malaivembu powder
neenga malaivembu powder period 3 days kudinga
கோட்டி
இறுதியில் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது தோழி/// ஏன் அப்படி நினைக்கிறீங்க இத்தனை நாள் சரியா வந்த period இப்போ 6 நாள் தள்ளி போயிருக்கு அப்போ கடவுள் உங்களுக்கு கருணை காட்ட தொடங்கிவிட்டார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது. எனக்கும் தான் காலண்டரில் 1 தேதி வருதோ இல்லையோ period வந்துடும் ஆனால் ஜனவரி 2016 உங்களை போலவே 5 நாள் தள்ளிபோனது, அடுத்தமாதம் period வரவில்லை நான் கன்சிவா இருந்தேன் அதனால் கவலை படாதீங்க தோழி எல்லாம் நன்மைக்கே, விரைவில் நல்லசெய்தி கிடைக்கும்
இந்த நான்கு வருடத்தில் நான் பெண்களால் தான் அதிகம் வேதனையடைந்துள்ளேன்./// யார் சொல்வதையும் காதில் வாங்காதீங்க,அவங்க வீட்டுல ஆயிரம் இருக்கும் அதை சொல்ல மாட்டாங்க, யாரவது கேட்டால் நாங்கள் தான் தள்ளி போட்டு இருக்கோம் சொல்லுங்க, அவரிகளிடம் உண்மை பேசி நாம் தான் அசிங்கபடனும், திருமணம் முடிந்த உடன் குழ்ந்தை பெற்ற 75% பெண்கள் மனவேதனையில் தான் இருக்கிறார்கள், அவர்கள் திருமணம் முடிந்த சில நாட்களிலே கணவனையும்,குடும்பத்தையும் விட்டு பிரியவேண்டி இருப்பதால் அவர்களால் அந்த குடும்பத்தை புரிந்துகொள்ள் முடியாமல் போகிறது, அதனால் குழந்தை பெற்று வீட்டிற்க்கு வந்தவுடன் சண்டை தான் வரும், நாம அப்படியில்லை இப்போ நம் கணவரை பற்றியும் குடும்பத்தை பற்றியும் நன்கு தெரிந்துவைத்து இருக்கிறோம்,அல்லவா
தோழி மலைவேம்பு சாபிடுங்க, பாசிபயரு சாப்பிடுங்க, கிஸ்மிஸ் பழம் சாப்பிடுங்க ,பேரிட்ச்சை தினமு 4 சாப்பிடுங்ஹ, அத்திபழம் கருமுட்டை வளர்சிகு நல்லது, கொய்யா சாப்பிடுங்க , ரெகுலரு பீரியட்ஷ் நு சொல்றீங்க சத்து குறைவாக கூட இருக்கலாம்,ரிலாக்ஸா இருங்க இத நினைத்து கவலை படாதீங்க
எல்லாம் நன்மைக்கே
டுரியன் பழம்
என் தோழி ஒருத்திக்கு 2 வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தது ,தெரிந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள் துரியன் பழம் சாப்ட குழந்தை பாக்கியம் கிடைக்குமென்று அதன் பிறகு அவள் சாபிட்டால் இப்பொது அவள் கையில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது டுரியன் பழம் சாப்பிடால் குழந்தை பாக்கியம் கிடைக்கு அந்த பழம் கடைகளில் வந்த சிறிது நேரத்திலேயே தீர்ந்து விடுமாம் .
கிடைப்பதும் கடினம் ,விலையும் கொஞ்சம் அதிகமாம்
அன்பு கனிராம்
அதை எப்படி அப்போது சாப்பிடனும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க நாம மட்டும் சாப்பிட்டா போதுமா, கணவன் மனைவி இருவரும் சாப்பிடனுமா, எப்போது சாப்பிடனும், எந்த அளவு சாப்பிடனும், சொல்லூங்க தோழி, மாதவிடாய்க்கு முன்னா ,பின்னரா ,
எல்லாம் நன்மைக்கே