குழந்தை பற்றிய முழு விவரம் அறிய.....

Sir, madam.....
நான் வெளி மாநிலத்தில் என் குடும்பத்துடன் வேலை செய்து வருகிறேன். எங்கள் அன்பின் வெளிபாடாக எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது(சிசேரியன்). முதல் குழந்தை என்பதனால் எப்படி பராமரிப்பது என்று எங்களுக்கு சரிவர தெரியவில்லை. பெற்றோர்களும் , பெரியேர்களும் உடன் இல்லை.
குழந்தை பிறந்த போது அவள் எடை 3.200 இருந்து . இப்பொழுது குழந்தை பிறந்து 1 மாதம் 20 நாட்கள் ஆகின்றது. இப்பொழுது குழந்தையின் எடை 4.500. குழந்தைக்கு சளி மற்றும் வாயுவுடன் கூடிய சிறிது மலம் கழித்தல் மற்றும் இரவு தூங்க 1,2 மணி ஆகின்றது. வயிறு கல் போன்று கெட்டியாக காணப்படுகின்றது. மலம் கழிக்கும் இடத்தில் சிவந்து காணப்படுகின்றது. மலம் திரி திரியாக கழிக்கின்றாள். தாய் என்ன சாப்பிட வேண்டும். என்ன சாப்பிட கூடாது. தாய்க்கு அடிக்கடி முதுகு வலி ஏற்ப்படுகின்றது.
இந்த பிரச்சனைகளை நீக்க நீங்கள்தான் தயவு செய்து உதவி செய்ய வேன்டும் . Pls...............................
இப்படிக்கு உங்கள் பதிலை எதிர்பார்த்து கொண்டிறுக்கும் உங்கள் அன்புத்தோழி.........

அன்புள்ள‌ லோகேஷுக்கு வாழ்த்துக்கள் (தந்தையானதற்கு). முதலில் குழந்தையின் வயிற்றுப் பொருமலுக்கு(மொத்த‌ வயிற்றுக் கோளாறுகளுக்கும்) ஓமம் (அஜ்வைன்) இதை ஒரு 25 கிராம் அளவு
எடுத்து மண் சட்டி இருந்தால் நல்லது, இல்லையானால் இரும்புக் கடாயில் போட்டு நன்கு வறுக்கவும். நன்கு பொரிந்து பொரிந்து கரியாகி
தீப் பிடிப்பது போல் பிடித்து கரி கரியாக‌ கரியும். கீழே இறக்கி இடிக்கும் குழவி இருந்தால் அல்லது அம்மி இருந்தாலும் அதில் வைத்து
நுணுக்கி பொடியாக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு
சிட்டிகை அளவு எடுத்து தேனில் கண்ணாடிக் கிண்ணம் அல்லது நல்ல‌ வெற்றிலையில் வைத்து குழைத்து குழந்தையின் நாக்கில் தடவி விடவும். கரிந்த‌ ஓமம் கசக்கும். அதனால் தான் தேனோடு சேர்த்துத் தருவது. பாலாடை இருந்தால் ஆறிய‌ சுடு தண்ணீருடன் தேனையும்,
கருக்கின‌ ஓமப் பொடியையும் நன்கு கரைத்து ஊற்றி விடவும்.
உங்களுக்கு வசதி இருந்தால் ஒரு சின்ன‌ வெள்ளிப் பாலாடை வாங்கி
அதில் மருந்துகளை குழந்தைக்குப் புகட்டுங்கள். இல்லையானால்,
சங்கு, நல்ல‌ பீங்கான் பாலாடை நல்லது. மற்ற‌ உலோகங்கள்
மருந்துகளை முறித்து விடும், வெற்றிலை இல்லை என்று வாழை இலையைப் பயன்படுத்த‌ வேண்டாம், அல்லது சின்ன‌ குழிவான‌ சந்தனக் கல், மருந்து உரைக்கும் உரைகல், அல்லது மார்பிள் கல்
படகு போலவும் இப்போது கிடைக்கிறது இவற்றில் எது கிடைக்கிறதோ
அதைப் பயன் படுத்திக் கொள்ளவும், சில‌ பல‌ நேரங்களில் குழந்தைகள் மருந்து குடிக்க‌ பால் குடிக்க‌ மறுத்து அடம் பிடிக்கும்.
அப்போது குடிக்க‌ வைக்க‌ உதவுவது பாலாடை தான். அதன் ஓரங்களைக் கையால் நன்கு தடவி மழுமழுப்பாக‌ இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும் (இல்லையானால் குழந்தையின் உதடுகளையும் நாக்கையும் காயப் படுத்தி விடும். கூடுமானவரை ஸ்பூனைப் ப்யன் படுத்தாதீர்கள், உணவு ஊட்டும் காலங்களில் கூடுமானவரை தாய் தன் கையால் ஊட்டுவதே சிறந்தது, தாய்க்கும் சேய்க்கும் நல்ல‌ பாசம்
உருவாகும். அதே ஓமத்தை நன்கு வறுத்து (கருகாமல் வறுக்கவும்)
தாய் குடிக்கும் வெந்நீரில் போட்டு நன்கு கொதித்த‌ பின் குடி நீராகப்
பயன் பயன்படுத்தவும். அது பொதுவாக‌ காற்று, தண்ணீர், கெட்டுப் போன‌ உணவுகள், உடல் உஷ்ணம் இவற்றால் ஏற்படும் வயிற்றுக்
கோளாறுகளை 90 % நீக்கி விடும், குழந்தையின் ஆசன வாயில்
தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் இரண்டு சொட்டுக்களை அவ்வப்போது தடவி விடவும், சிவப்பு மாறும்.
முக்கி மலம் கழிப்பதால் ஆசன‌ வாயில் ஏற்படும் ரத்தக் காயம் ஆறும்.
விளகெண்ணெய் உங்கள் வீட்டில் ப்யன்படுத்தும் வழக்கம் இருந்தால்
கை கால் இடுக்குகள் அக்குள், கால் கை மடிப்புகள், உச்சித் தலைக்
குழிவு எலும்பு மூடாத‌ பகுதி தினமும் காலையில் இந்த‌ இடங்களில்
ஒவ்வொரு சொட்டு தடவி விடவும். சூடு குறையும் பாலின் வாசத்திற்கு
பூச்சிகள் குழந்தையின் அருகே கூட‌ வராது.
மேலும் மற்ற‌ ஐய்ங்களுக்கு குழந்தைகள் தலைப்பிலேயே சென்று
பொறுமையாகப் பாருங்கள், குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

என் பையன் கும் வயிற்றில் காற்று உள்ளது போன்று உள்ளது, ஆனால் வயிறு கல் போன்றுலாம் இல்லை, வயிறு வலிக்கும் போல் அடிக்ககடி முருக்கி, முருக்கி அலுகிறான், இதற்கும் ஓமம் கோடுக்கலாம இதற்கு என்ன செய்ய வேன்டும் அம்மா, 2 மாதம் தன் ஆகிறது என் பையன்கும்

மேலும் சில பதிவுகள்