karpaM pls help me frnds&imma amma

Hi na conceivea iruken 35th day.na enna sapidanum sapidakudadhunu solunga.already I miss my 1st baby.so carefulla irukanum nu ninachurken.1st delivery Ku remba kastapaten high bp irundhanala.so delivery payamum remba iruku.enaku unga advice remba mukiam .imma Amma neengalum solunga ma.apram mallandhu padukalama kudadha.

//enna sapidanum sapidakudadhu// என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். பொதுவாக அன்னாசி, பப்பாளி செங்காய் சாப்பிட்டால் கரு கலையும் என்பார்கள். (எனக்கு இவை எதுவும் செய்ததில்லை.) இப்படியான உணவுகளை வேண்டுமானால் கொஞ்ச காலம் தவிர்க்கலாம்.

//already I miss my 1st baby./// அது ஆரம்ப காலத்தில் ஆகவில்லை என்று சொல்கிறீர்கள். அதனால் இப்போது பெரிதாக யோசிக்க வேண்டாம். சென்ற தடவை எப்படி இருந்தீர்களோ அப்படியே இருக்கலாம்.

//1st delivery Ku remba kastapaten// டெலிவரி வரை குழந்தை வளர்ந்திருக்கிறது. //high bp irundhanala.// ம்... //so delivery payamum remba iruku./// இதையே நினைத்துப் பயந்தால் தானாகவே ப்ரெஷர் ஏறாதா? போன தடவை கடைசியில் ப்ரெஷர் என்றால் இம்முறை யோசித்து ஆரம்பத்திலேயே அதைத் தேடிக் கொள்ள வேண்டாமே!

யோசிக்க வேண்டாம். டாக்டர் சொல்ற மாதிரி நடந்துக்கங்க. கொழுப்பு உணவுகளைக் குறைச்சுக்கங்க. டீப் ஃப்ரை செய்த உணவுகள் எண்ணெய் சேர்க்கும் இனிப்புகளைத் தவிருங்கள். தினமும் கொஞ்சம் நடக்கலாம். நடக்கிறது எல்லாவற்றுக்கும் நல்லது.

//mallandhu padukalama kudadha.// இது பிரச்சினையே இல்லை. இப்போ இதைப் பற்றி எந்த யோசனையும் வேண்டாம்.

முதல் குழந்தை இல்லாமல் போனதற்கான காரணம் என்னவென்பதை உங்கள் முதலாவது விசிட்டில் டாக்டர் கேட்பாங்க. டாக்டரை மாற்றினால் திரும்ப அவங்கள்ட்டயும் நினைவா இதைப் பற்றிப் பேசி வைங்க. அவங்க அட்வைஸ் கிடைக்கும். மற்றப்படி... எதற்கும் பெரிய மருந்து சிரித்த முகமும் சந்தோஷமான மனமும். சந்தோஷமாக இருக்கப் பாருங்க.

ஏதாவது சந்தேகம் இருந்தால் ஏற்கனவே இருக்கிற பொருத்தமான த்ரெட் ஒன்றுல கேளுங்க.

‍- இமா க்றிஸ்

IPO relax ah iruku ma.thanks ma

மேலும் சில பதிவுகள்