என் குழந்தை cserian பிறந்து 3மாதம்
ஆகிறது.மாத மாதம் இரத்தபோக்கு அதிகம்.கடும் வயிறு மற்றும் உடல் வலி.பால் குடுக்கிரேன்.உதவி please.
என் குழந்தை cserian பிறந்து 3மாதம்
ஆகிறது.மாத மாதம் இரத்தபோக்கு அதிகம்.கடும் வயிறு மற்றும் உடல் வலி.பால் குடுக்கிரேன்.உதவி please.
mkn tr
நீங்க டாக்டரிடம் அட்வைஸ் கேட்கிறது தான் சரியாக இருக்கும் சகோதரி. இரத்தப் போக்கு அதிகமாக இருப்பதால் தான் உடல்வலியும் அதிகமாக இருக்கிறதோ தெரியவில்லை. நீங்க நன்றாக இருந்தால்தான் குழந்தையைச் சரியாகக் கவனிக்க முடியும். போய்க் கேட்டுட்டு வாங்க.
- இமா க்றிஸ்
உடல் மிகவும் சோர்வாக
உடல் மிகவும் சோர்வாக உள்ளது.அடிவயிற்று இடது பக்கம் குத்துவது போல் வலி.3நாட்கள் தான் periods வரும்.தாங்க முடியல.friends உதவுங்க.எனக்கு hemoglobin 7point இருக்கு.
romba thanks madam.i will go
romba thanks madam.i will go and consult
mkn tr
முதல்ல போய்க் காட்டுங்க.
//hemoglobin// மீன், கரும்பச்சை நிறக் கீரைகள் சாப்பிடுங்க. அசைவம் சாப்பிடுவீங்களா இருந்தால் ரெட்மீட் சேர்க்கிறதும் நல்லது.
- இமா க்றிஸ்
thank u imma
thank u imma madam.குழந்தைக்கு பால் கொடுக்கும் போது periods வராதா madam.எனக்கு மட்டும் இப்படி.என் friends 6மாதம் கழித்து தான் ஆனாங்கன்னு சொல்றாங்க.பயமா இருக்குங்க
mkn tr
உங்க பிரச்சனை இங்கே ஆலோசனை கேட்பதற்கு உகந்த விஷயமாகத் தெரியவில்லை. மருத்துவரை அணுகவேண்டிய விஷயம், முடிந்த அளவு சீக்கிரமாகப் போய்ப் பாருங்க.
குழந்தை பிறந்த பின் 6 மாதம் "கழித்துத்தான்" பீரியட்ஸ் வரும் என்றெல்லாம் இல்லைங்க.சிலருக்கு ரெகுலராக மாதமாதம் ஆகும், ஒரு சிலருக்கு பாலூட்டும் வரை ஆகாமல், தாமதமாகி, குழந்தைக்கு பாலூட்டுவதை நிறுத்திய பிறகு கூட ஆகும். ஒவ்வொருவர் உடல்வாகு ஒவ்வொரு மாதிரி. உங்களுக்கு வயிற்றுவலி, உடல்வலி எல்லாம் இருப்பதால் இங்கே கேள்வி கேட்டு பதிலுக்கு காத்திருப்பதை விடுத்து விரைவில் மருத்துவரைப் பாருங்க.
அன்புடன்,
மகி
mkn tr
//குழந்தைக்கு பால் கொடுக்கும் போது periods வராதா// வரும்.
//எனக்கு மட்டும் இப்படி.// எனக்கும் வந்ததே! :-)
//என் friends 6மாதம் கழித்து தான் ஆனாங்கன்னு சொல்றாங்க.// இருக்கலாம்.
நீங்க வேற அவங்க வேற.
//பயமா இருக்குங்க// இதைப் பற்றிப் பயம் வேண்டாம். சிலருக்கு பாலூட்டுவதை நிறுத்தும் வரை கூட வராமல் இருக்கும். சிலருக்கு முன்பே ஆரம்பித்து விடும். இது சாதாரணம் தான்.
ஆனால் முதல் கேள்வி!! நீங்க போய்க் காட்டி அட்வைஸ் எடுத்தாகணும் கட்டாயம். போகாம திரும்ப இங்க வந்து கேள்வி கேட்டீங்க... நிச்சயம் நங் நங்ணு குட்டீருவேன். ;))
- இமா க்றிஸ்
திருமதி.எம்கேஎன் டிஆர் க்கு
சிசேரியன், அதிக ரத்தப் போக்கு, அடிவயிற்றில் குத்து வலி இவை சரியான அறிகுறிகளாகத் தெரியவில்லை, உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று வைத்தியம் பார்ப்பதே சரி (ஸ்கேன் செய்வதே
சரியான வழி என்பது என் கருத்து )
நீங்கள் வாழும் ஊரைச் சொல்லக் கூட முடியவில்லை. எதை வைத்து மருத்துவ ஆலோசனை தருவது.
பூங்கோதை கண்ணம்மாள்
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
thanku imma madam mahi madam
thanku imma madam mahi madam and poongothai madam for all ur kindful words.scan report la no problem. blood la red blood count less ah erukunga madam.tablet,tonic kuduthurukanga madam.poongothai madam na erode la eruka.now i entered all my info madam.
அன்புள்ள எம்கேஎன் டிஆர்
அன்பான பெண்ணே (உனது பெயர் சரியாகத் தெரியவில்லை.)
மாதவிலக்குக் கோளாறு பிரசவத்திற்குப் பின் என்றால் கோளாறேதான்.
ஸ்கேன் ரிப்போர்ட் பிரசவத்திற்குப் பின் எடுத்ததா? அல்லது முன்னால்
எடுத்ததா? ரத்தப்போக்குக்குப் பின்னால் குத்துவலி வந்த பின்னால்
ஸ்கேன் எடுத்தீர்களா? இல்லையானால் பழைய ரிப்போர்ட்டால்
பலனில்லை. குத்துவலி வந்த பின்னால் வேறு மருத்துவமனையில்
பழைய ரிப்போர்ட்டைக் காட்டாமல் புதியதாக எக்ஸ்ரே எடுத்துப்
பார்ப்பது மிகவும் நல்லது. அரசு மருத்துவ மனையில் சென்று பார்ப்பது
நல்லது. சிஸேரியனுக்குப் பின் குத்துவலி என்பது நல்ல அறிகுறியாக
எனக்குப் படவில்லை. கூடுமானவரை தமிழில் தட்டவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.