தேமல் குறைய

எனக்கு உடலில் தேமல் உள்ளது அது என்ன குழந்தைக்கு பரவுமா?(2 மாத)குழந்தை துங்க வைப்பது எப்படி?தேமல் குறைய மருந்து.pls help me,,

நாங்கள் தேமல் என்று ஒரு சொல்லுக்குள் நிறைய விஷயத்தை அடக்கிவிடுவோம். :-)

கண்ணால் பார்த்தால் தவிர அபிப்பிராயம் / மருத்துவம் சொல்வது சரியாக இராது. சிலதுக்கு மருந்து தேவையிராது. சிலதுக்கு தேவை. சிலது தொற்றலாம். பெரும்பாலும் தொற்றாது. நீங்கள் முதலில் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். அவர் சொன்னால் பிறகு தோல் மருத்துவரை அணுகலாம்.

‍- இமா க்றிஸ்

நீங்க தேடிப் பார்த்திருந்தால் இது பற்றி நிறைய த்ரெட் கண்ணில் பட்டிருக்கும்.
ஒன்றிரண்டு எடுத்துக் கொடுக்கிறேன். மீதியை நீங்களே தேடிப் படிக்கலாம்.
www.arusuvai.com/tamil/node/32675
www.arusuvai.com/tamil/node/19499
www.arusuvai.com/tamil/node/5697
www.arusuvai.com/tamil/node/9910

‍- இமா க்றிஸ்

Mam ரொம்ப thanks.காலையில் எழுந்ததும் உடல் முழுவதும் சோர்வாக உள்ளது குழந்தை பிறந்த 2மாத (சிசரியன்)ஆகிறது விட்டு வேளை தான் செய்கிறேன்.உதவிக்கு யாரும் இல்லை.. குழந்தை பாத்துக முடியவில்லை.என் கனவர் வேளைக்கு போகிறார். மனசு ரொம்ப கஷ்டமா குழப்பாமவும் இருக்கு. ஓரு கேள்வி குழந்தைக்கு தாய்ப்பால் படுத்து கொண்டு கொடுக்கலாம please .

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

தப்பா எடுக்க மாட்டீங்கன்னு நினைச்சு ஒரு ரிக்வெஸ்ட் லோகேஷ். உங்க மனைவிக்கு ஒரு மெம்பர்ஷிப் எடுத்துக் கொடுங்களேன்.

இதுக்கு முன்னால ஒரு கேள்விக்கு பதில் போட்டுட்டு தூங்கப் போறப்ப, 'லோகேஷ் ஆண் ஆச்சே!' என்று லைட் பத்திச்சு. என்ன எழுதினேன்னு நினைவு இல்ல. காலைல எழுந்து செக் பண்ண அந்த த்ரெட் எது என்று தெரியல.

பெண் கேட்கிற மாதிரி கேள்வி இருக்கு. ஆனா... நீங்க ஆண் என்கிறது நினைவுக்கு வந்ததும், பதில் ஃப்ரீயா ஒரு ஃப்ளோல வர மாட்டேங்குது. :-) சின்னதா ஒரு தடை. :-)

//என் கனவர் வேளைக்கு போகிறார்// நீங்களே ஆண் என்னும் போது... சிசேரியன் எப்படி? கணவர் எப்படி?

நீங்க பொண்ணா இருந்தா... ப்ரொஃபைலை எடிட் பண்ணுங்க. ஆண் என்றால்... மனைவிக்கு மெம்பர்ஷிப் எட்டுத்துக் கொடுங்க. இல்லாட்டா அட்லீஸ்ட்.. 'என் மனைவிக்கு இன்ன பிரச்சினை,' என்றாவது கேள்வியை வைங்க.

‍- இமா க்றிஸ்

//உதவிக்கு யாரும் இல்லை.. குழந்தை பாத்துக முடியவில்லை.// முடியணும். கர்ப்பமாக இருக்கும் போதே, தாய் தந்தை ஆகப் போகிறவர்கள் இதைப் பற்றியெல்லாம் யோசித்து என்ன செய்யலாம் என்று திட்டமிட்டு வைத்திருக்க வேண்டும்.

லோகேஷ்... நீங்க முடியும் போது மனைவிக்கு வீட்டு வேலைகளில் கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல! குழந்தையையும் பார்த்துக் கொள்ளலாம். அவங்களுக்கு ரெஸ்ட் கிடைக்கும்.

//என் கனவர் வேளைக்கு போகிறார்.// 24 மணி நேரமும் ஆபீஸ்ல இருக்க மாட்டீங்க. ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் மனைவிக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க.

//குழந்தைக்கு தாய்ப்பால் படுத்து கொண்டு கொடுக்கலாம// உங்கள் மனைவிக்கு வேண்டுமானால் இது வசதியாகத் தோன்றலாம். தாய் அசதியில தூங்கிருவாங்க. இரண்டே மாசமான குழந்தை அது. புரையேறிவிட்டால்! ரிஸ்க் தேவையா?

‍- இமா க்றிஸ்

Ok ..

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

:-) மாற்றி இருக்கிறீங்க. :-) நன்றி.

‍- இமா க்றிஸ்

Sorry mam . பெயர் பதிவிற்க்கு. எனக்கு முடி உதிர்தல் இருக்கு . நான் வாரத்துக்கு 2நாள் தாலைக்கு குளிக்கேறன். தலை குளித்த அடுத்த நாள் காலைஆயில் வைக்கிறேன் இது சரியா? முகத்தில் ஆயில் பசை இருக்கு. முகம் பளபளப்பக .இதற்கு ஒரு வழி சொல்லுங்கள் mam please.b y kanimozhi
.

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

//வாரத்துக்கு 2நாள் தாலைக்கு குளிக்கேறன்.// இது நல்லது.
//தலை குளித்த அடுத்த நாள் காலைஆயில் வைக்கிறேன் இது சரியா?// பிரச்சினை இல்லை.
//முகத்தில் ஆயில் பசை இருக்கு.// ஏதாவது தரமான க்ளீன்சிங் க்ரீம் பயன்படுத்தலாம். இயற்கை முறை தீர்வு வேண்டுமானால் - பயற்றம்மா நல்லது.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்