எங்களின் மனவருத்தம்.

அறுசுவை ஒரு அருமையான‌ கருத்துப் பெட்டகம். பலரும் கூடும் ஒரு அருமையான கலாச்சாரக் கூடம். வினாவிடை நிகழ்ச்சிக்கூடமும் கூட்.
உடலுக்கும் மனதிற்கும் ஏற்படும் பல‌ சிக்கல்களுக்கு எங்கு யாரிடம்
கேட்டால் விடை கிடைக்கும் சிக்கல் தீரும் என்று பலரும் தேடி வரும்
ஒரு கருத்துக் கூடம். இது கூடுமானவரை பெண்களுக்குள்ளேயே நடைபெறுகின்ற‌ ஒரு முக்கால் அல்லி அரசாங்கம் (அல்லி ராஜ்ஜியம்)
என்று கூட‌ வைத்துக் கொள்ளலாம், (இதில் நுழைந்து பல் சிக்கல்களுக்கு
அருமையான‌ கருத்துக்களைக் கூறி தெளிவு தந்த‌ அண்ணன்களுக்கும்
தந்தைமார்களுக்கும் அட்மினுக்கும் எங்கள் மனமார்ந்த‌ நன்றிகள்.)
இதில் பதிவு செய்யும் உறுப்பினர்களில் ஏறக்குறைய‌ அனவருமே
தங்களைப் பற்றி பதிவு செய்ய‌ வேண்டிய‌ முக்கியத் தகவல்களைத் தந்து
உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினராக‌
உள்ள‌ சிலர் பேர் பேர் ஒன்றைத் தவிர‌ எதையுமே தராமல் முக்கியமான‌
மருத்துவம் சார்ந்த‌ கேள்விகளுக்கு விடையே கிடைக்கவில்லை என்று
வருத்தப் படுவதில் என்ன நியாயம் என்று புரிய‌வில்லை.
உங்களைப் பற்றிய‌ நியாயமான முக்கியத் தகவல்கள் மட்டுமே
சுயவிவரப் பதிவில் கேட்கப் பட்டுள்ளது. அதற்குக் கூட‌ விவரம் தர‌
மறுக்கும் உங்களுக்கு பதில் மட்டும் உடனே கிடைக்க‌ வேண்டும் என்று
எதிர்பார்ப்பதில் என்ன‌ நியாயம் என்று எனக்குப் புரியவில்லை.
இணைய‌ தளத்தில் விவாதிக்கத் தயங்குகின்ற‌ பலவற்றை லட்சக் கணக்கான‌ பேர் காணுகின்றவாறு விவாதிப்பதில் தயங்குவதில்லை.
ஆனால் நியாயமான‌ பதிவுகளைப் பதிவிடத் தயங்குவது ஏன்?
என் கருத்து தவறாக‌ இருந்தால் தவறாக‌ நினைப்பவர்கள் மன்னிக்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

நான் பதிவிடமல் விட்ட‌ எனது தகவல்கலை பதிவிட‌ போகிரேன்.

மேலும் சில பதிவுகள்