தேதி: February 25, 2007
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சிக்கன் - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் - 12
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சிக்கனை எலும்பு இல்லாமல் கொட்டைப்பாக்கு அளவிற்கு சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கழுவி, தண்ணீர் வடித்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
காய்ந்த மிளகாயை சிறு சிறு துண்டுகளாக கிள்ளி விதையை தட்டி எடுத்து விட்டு, மிளகாயை மட்டும் தனியே வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன், கிள்ளி வைத்த மிளகாயை போடவும்.
மிளகாய் சிவந்தவுடன், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின், கழுவி வைத்த சிக்கனை சேர்க்கவும்.
1 நிமிடம் வதக்கிய பின், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்கவும்.
2 கை தண்ணீர் தெளித்து, மூடி வைக்கவும். தண்ணீர் வற்றி, சிக்கன் வெந்தவுடன், துருவிய தேங்காய் சேர்த்து, கிளறி இறக்கவும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி பாயும் ஊர் பள்ளிபாளையம். ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு உணவு வகை.
Comments
thank you.
செய்து பார்க்கிரேன்thank you for this recipe.
sajuna
thank you.
இன்று செய்தேன்.நன்றாக இருந்தது.நன்றி
sajuna
நன்றி திருமதி. சஜுனா.
நன்றி திருமதி. சஜுனா. இது தான் என்னுடைய முதல் சமையல் குறிப்பு. தங்களுடைய பாராட்டிற்கு மிக்க நன்றி. இன்ன பிற குறிப்புகளையும் செய்து பார்த்து தங்களின் கருத்துகளை சொல்லுங்கள்.
அன்புடன்,
செல்வி.
கோழி போய் குழம்பாயிடுச்சு:-)
செல்விமா,
பாவம் ஒரு கோழி :-) என் வீட்டுக்காரர்கிட்ட மாட்டிக்கிட்டு குழம்பாயிடுச்சு :-). ரொம்ப சூப்பரா இருந்ததுன்னு சொல்ல சொன்னாங்க, அவரும் அவர் ஃப்ரெண்டும் :-). ஆனா இவங்க சாப்பிட்ட அழக பாத்த எனக்கு சிரிப்பு அடக்கமுடியல :-) ரெண்டு பேரும் ஸ், ஸ்னு சொல்லிட்டே மொத்தமும் காலி பண்ணீட்டாங்க :-)[கோழி, வயித்துக்குள்ள போய் புஸ் புஸ் னு ஆடப்போவுது :-)]. இப்ப நைட்க்கு மெட்ராஸ் பெப்பர் சிக்கன் குறிப்பை பாத்து வெச்சிருக்காங்க :-) இப்ப ரெட் பெப்பர், நைட் ப்ளாக் பெப்பர் :-). எனக்கு வேல கம்மி :-)[டபுள் சந்தோஷம் :-)]
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>
<font color="blue">
அன்புடன்
ஹர்ஷினி :)</font>
கோழி கூவுது...
ஹாய் ஹர்ஷு,
எப்படியிருக்கே? தீபாவளி பலகாரம், வெட்டிங் டேனு பிஸியா?
ரொம்ப சந்தோஷம். பள்ளிபாளையம் சிக்கன் செய்து பார்த்ததற்கு. அதோட ஸ்பெசாலிடியே காரம்தான். கண்ணிலும், மூக்கிலும் தண்ணி வரவர சாப்பிடுவாங்க. பார்க்க சிரிப்பா வரும். ஆனாலும் விடாம சாப்பிடுவாங்க. ரொம்ப நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
நன்றி
இதை செய்து படம் எடுத்து அண்ணா'க்கு அனுப்பியாச்சு. :) நல்லா இருந்தது. நன்றி.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பள்ளிபாளையம்...
அன்பு வனிதா,
பாராட்டுக்கு நன்றி. படத்தை பார்க்க ஆவலாக உள்ளோம்.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
செல்வி
செல்வி மேடம்,
என் குழந்தைகளூக்கு இந்த சிக்கன் மிகவும் பிடிக்கும். நான் என் வீட்டில் அடிக்கடி செய்வேன்
சவுதி செல்வி
குழந்தைகளுக்குப் பிடிச்சா...
ஹாய் செல்வி,
பாராட்டுக்கு நன்றி. குழந்தைகளுக்குப் பிடிச்சா அடிக்கடி செய்ய வேண்டியது தான், எங்க வீட்டிலேயும் அப்படித்தான்.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.
சூப்பர் சிக்கன்..
செல்விக்கா,நலமா? பேசி ரொம்ப நாளாயிருச்சி. உங்க பள்ளிபளையம் சிக்கன் சூப்பரோ சூப்பர். எத்தனை எளிதான சுவையான குறிப்பு.எங்க வீட்ல எல்லாரோட ஓட்டும் இதுக்குதான்.போன ஞாயித்து கிழமை மதியம் எல்லா குறிப்பும் உங்களுடையது தான்.செட்டிநாடு சிக்கன் குருமா,நெய் சோறு,பள்ளிபளையம் சிக்கன் செய்திருந்தேன்.எல்லாமே ரொம்ப நல்லா சுவையா இருந்தது.அமிர்த்தவர்ஷினிக்கு நெய் சாதம் மிகவும் பிடித்திருந்தது.
விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.