நெபுலைசர்

en babaku sali, erumal karanama doc kitta kattinom. nebulizer 7 days use panni sali cure aanathu. babyku 4 1/2 month . ethu pol nebulizer use panna koodathunu solar solranga. ethu correcta? unga babyku ethu pol use panniyathu unda?

//solar// சிலர்!!

இது பிரச்சினை இல்லாத விடயம். நீங்கள் பயப்படத் தேவையில்லை. அடிப்படையில்... ஆவி பிடிப்பது போல தான் இது. அதோடு தேவையான மருந்து எதையாவது கலந்திருப்பார்கள்.

//ethu pol nebulizer use panna koodathunu// & //ethu correcta?// கூடாது என்று சொன்னவர்களிடம், 'நெப்யுலைசர் பயன்படுத்துவதால் என்ன பிரச்சினை வரும்?' என்பதைக் கேட்டுப் பாருங்கள். காரணம் சொல்லத் தெரிந்திராது அவர்களுக்கு. :-)

பெயர் + அறிமுகம் இல்லாத விடயம் = பயம் --> தப்பு என்று எண்ணுவது & தவிர்க்க நினைப்பது. இதுதான்... பெரும்பாலானோர் நிலை. ஆஸ்மா இன்ஹேலர் வந்த ஆரம்பத்தில் அதற்கும் இதே விதமான எதிர்மாறான வரவேற்பு தான் இருந்தது.

நெப்யுலைசர் என்கிற இயந்திரத்தைப் பற்றிப் பயப்பட எதுவும் இல்லை. அதன் வேலை திரவமாக உள்ள மருந்தை காற்றின் அளவு சிறு தூவல்களாக்கிவிடுவது மட்டும்தான். மாஸ்க் - அந்தத் தூவல், வெளிக் காற்றில் கலந்து வீணாகாமல் மூக்கின் அருகே வைத்திருக்க உதவும் சாதனம்.

நெப்யுலைசர், பம்ப் போல மருந்தை மூக்கினுள்ளே தள்ளவெல்லாம் செய்யாது.
வழக்கம் போல நோயாளி உள்ளே மூச்சை இழுக்கும் போது, மருந்து மூச்சுக் காற்றோடு உள்ளே செல்லும்.

விழுங்கும் மருந்து மாத்திரைகள் - வயிற்றிலிருந்து உறிஞ்சப்பட்டு, இரத்ததில் கலந்து உரிய உறுப்பை (இங்கு சுவாசப்பையை) அடைந்தபின் தான் வேலை செய்ய ஆரம்பிக்கும். நெப்யுலைசர் பயன்படுத்தும் போது நேரே சுவாசப்பைக்கு மருந்து சென்றுவிடும். அதோடு, சுவாசிக்கும் காற்றிலுள்ள ஈரலிப்பு நுரையீரலினுள் காய்ந்திருக்கும் சளியை இளக்கி மூச்சு விடுதலைச் சுலபமாக்கி விடும்.

விழுங்கும் சிரப், மாத்திரைகளை விட நெபுலைசரில் டோஸ் குறைவாகவே சேர்த்திருப்பார்கள். அஸ்மா இன்ஹேலர்களில், மாத்திரையை விட டோஸ் மிகக் குறைவாக இருப்பது தெரியும்.

நீங்கள் யோசிக்க எதுவும் இல்லை. ஆனால்... இப்படி ஒரு வழி இருக்கிறது என்பதற்காக குழந்தையைக் கவனிக்காமல் விடக் கூடாது. பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். 'Prevention is better than cure.' இல்லையா? அதை மனதில் வைத்துத் தான் உங்களுக்கு ஆலோசனை சொன்ன உறவினரோ, நண்பரோ //nebulizer use panna koodathu// என்று சொல்லியிருப்பார். அடிக்கடி குழந்தை நோயுற்றால், அது குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்காதா?

//unga babyku ethu pol use panniyathu unda?// என் சின்னவருக்கு (அப்போ 10 வயது இருக்கும்.) கொடுக்க வேண்டி இருந்தது. எனக்கு சில தடவைகள் (அஸ்மாவுக்காக) எடுக்க வேண்டி வந்திருக்கிறது. சட்டென்று நெஞ்சு இறுக்கம் குறைந்து இலகுவாகும். நான் இதை நல்ல விடயமாகத் தான் பார்க்கிறேன். பெரியவர்கள் வேதனைகளைப் பொறுத்துக் கொள்வோம். குழந்தைகள் அப்படி இல்லை. அவர்களுக்கும் இது நல்ல சிகிச்சை முறைதான் என்பது என் அபிப்பிராயம்.

நெப்யுலைசர் வேலை செய்யும் சமயம் பயத்தில் குழந்தை அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினால், பார்த்துக்கொண்டு இருக்கிறவர்களுக்கு மனசுக்குக் கஷ்டமாக இருக்கும். :-)
~~~~
இழைக்கான தலைப்பைத் தமிழில் தட்டியிருக்கிறீர்கள். மீதியையும் தமிழில் தட்டியிருக்கலாமே!

‍- இமா க்றிஸ்

thanks imma for ur reply . first time nebulizer use pannum bothu pappa romba aluthutta . but next time palakitta. tamilil type panna time aaguthu. so englishla type pantren. forgive me.

//tamilil type panna time aaguthu. so englishla type pantren. forgive me.// :-) இல்லை கண்ணா. உண்மையில்.... இதை விட அது சுலபம். இப்ப நீங்க தட்டின அளவு தட்டினாலே போதும். தானா தமிழ்ல வந்துரும்.

இதுவும்... நெப்யுலைசர் பயன்பாடு போலதான். :-) லாபம் புரியாம தயங்குறீங்க. பயன்படுத்தத் தொடங்கினா உங்க தயக்கம் போய்ரும்.

இது எனக்கு வாலண்டரி ஜாப் தான். எனக்கு... கார்த்திகா போஸ்ட் படிக்க time aaguthu. என் கிழவி கீபோர்ட் தப்பு தப்பா தட்டுறதால எடிட் பண்ணவும் டைம் aaguthu. so பதில் சொல்லாம போய்ட்டா... forgive me. ;)))

சும்மா கலாய்க்கிறேன். :‍) ட்ரை பண்ணுங்க. நீங்க செய்ய வேண்டியது.... ரிப்ளை பாக்ஸ்ல கர்சரை வைச்சதும் கீழ இடது பக்கம் ‍_ டைப் மெதட்ல, தமிழ் ஃபொனடிக் செலெக்ட் பண்றது மட்டும் தான். ஒரு தடவை செலெக்ட் பண்ணிட்டா பிறகு எப்போ அறுசுவையில் தட்டினாலும் அது தானா செலெக்ட் ஆகிரும். நீங்க இப்ப தட்டின மாதிரியே தட்டினால் போதும். தன்னால மாறும். பதில் சொல்றவங்களுக்கு சுலபம். உங்களுக்கும் நீங்க ஏதாவது தப்பா தட்டினால் புரியும்.

என் டைமை உங்களுக்காக செலவளிச்சிருக்கேன். அடுத்த கேள்வி தமிழ்ல இருக்கணும். இல்லாட்டா... பதில் சொல்ல மாட்டேனாம். டீல்! :-)

‍- இமா க்றிஸ்

sari imma muyarchi pantren

மேலும் சில பதிவுகள்