தாய்ப்பால்

என் குழந்தை ஒழுங்காக பால் குடிக்க மாட்டக்கான். கொஞ்சமா குடிச்சிட்டு தூங்கிறான். எவ்வளோ முயற்சி செய்தும் குடிக்க மாட்டான். அவன் விரும்பினால் மட்டுமே குடிப்பான். இதனால் எனக்கு பால் கட்டுகிறது. பால் கட்டுவதை எப்படி சரி செய்வது.

குழந்தை பால் குடிக்காமல் இருந்து பால் கட்டினால் பாலை கரந்து பாட்டில் மூலமாக கொடுங்கள் இல்லை என்றால் சுவற்றில் கரந்து விடுங்கள் அப்படியே விடதீர்கள்

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

வெந்நீர் ஒத்தடம் கொடுங்கள். வெற்றிலையை அனலில் காட்டி ஒத்தி எடுத்து வர வேண்டும். சரியாக இருக்கும்.

வெந்நீர் ஒத்தடம் கொடுங்கள். வெற்றிலையை அனலில் காட்டி ஒத்தி எடுத்து வர வேண்டும். சரியாக இருக்கும்.

அன்புள்ள பூங்கோதை அம்மா அவர்களுக்கு...... என் பொன்னுக்கு 4 மாதம் ஆச்சு அவ வாய்ல முன்னாடி நெறைய நுரைய அடிக்கடி வச்சுக்கரா இது எதனாலனு சொல்ல முடியுமா pls

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

எனது மகள் பிறந்து 25 நாட்கள் ஆகிறது. அவள் உடலில் சில இடங்களில் சிவந்து காணப்படுகிறது,அதன் நடுவில் வெள்ளையாக வியர்குரு மாதிரி உள்ளது. இரண்டு மூன்று தினங்களில் அது மறைந்து விடுகிறது. ஆனால் மீண்டும் மீண்டும் அது போல வருகிறது. அவள் பிறந்து மருத்துவமனையில் இருந்தபோதே அப்படி இருந்தது. புது துணி போடுவதால் இப்படி ஆகிறது என்றும் நனைத்து விட்டு போட்டால் வராது என்றும் கூறினார்கள். ஆனால் மீண்டும் அதே போல வருகிறது. இது எதனால் எப்படி சரியாகும் இது போல யாருக்கும் இருந்ததா... தெளிவுபடுத்துங்க ப்ளீஸ்.

//பிறந்து மருத்துவமனையில் இருந்தபோதே அப்படி இருந்தது.// அப்போது பார்த்த மருத்துவர்கள், தாதியர்களிடம் நீங்கள் இதைப் பற்றிக் கேட்கவில்லையா? என்ன சொன்னார்கள்?

வியர்க்குருவாகக் கூட இருக்கலாம். உங்களுக்கு இங்கு வந்து கேள்வியை வைக்கும் அளவு யோசனையாக இருந்தால்... ஒரு முறை காட்டினால் நல்லது இல்லையா?

‍- இமா க்றிஸ்

//சுவற்றில் கரந்து விடுங்கள்// என்ன காரணத்துக்காக சுவரில் விட வேண்டும் என்று தெரிந்துகொள்ளலாமா சகோதரி? ஏதாவது காரணம் இருக்கும். அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

‍- இமா க்றிஸ்

குழந்தைகள் மூன்றாம் மாதம் முதல் முகம் பார்க்கவும் தலையைத்
தூக்கிப் பார்க்கவும் கவிழ்ந்து படுக்கவும் செய்வார்கள். அடுத்து கவிழின்
தன் மேலெதுவும் விழுந்து
விடாமல் இருக்கவும் அந்த‌ இடத்தினை விட்டு விலக‌,ஒன்றைப் பிடிப்பதற்காகவும் (இருக்கும்). அம் மாதிரி தவழும்
போது கையில் சிக்கும் பொருள்களை வாயில் குழ்ந்தை வைத்துச் சுவைக்கும். அப்படி சுவைப்பதெல்லாம் வயிற்றுக்குள் போகாவிட்டால்
குழந்தைக்கு ஆபத்து. எனவே அதைத் தடுக்கவே இறைவன் குழந்தைக்கு
ஜொள்ளு என்ற‌ அருமையான‌ ஒரு இயற்கைத் தடுப்பாக‌ எச்சிலைவழிய‌
விடுகிறார். குழந்தை வேண்டாததைத் துப்பக் கற்றுக்கொள்ளும் வரை இது
வழியும். அதைத் தான் உங்கள் மகள் செய்கிறாள்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

ரொம்ப நன்றி அம்மா ...
நான் அவள் அப்படி செய்வதால் மிகவும் பயந்து விட்டேன் .. ஒரு பாட்டி குழந்தையின் தலையில் பேன் இருந்தால் அந்த மாதிரி இருக்கும் நு சொன்னாங்க நா அவ தலைய பாத்த அப்படி எதும் இல்ல அத நா பயந்துட்டேன் அம்மா.

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

எங்க அம்மா பால் கட்டியிருந்தால் அப்படித்தான் செய்ய சொல்லுவாங்க தாய் பாலை எறும்பு அரிக்க கூடாது அதனால சுவறில் கறந்து விடு நு சொல்லுவங்க அதனால தான் நான் இங்க அதை சொன்னேன் அம்மா

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

மேலும் சில பதிவுகள்