குழந்தை பெற்று 16வது நாள்..

தோழிகளே குழந்தை பெற்று 16வது நாள் மாமியார் வீட்டிற்கு செல்லலாமா??? எனக்கு இது 2வது குழந்தை அதனால் 16ம் நாள் செல்லலாம் என்றுள்ளேன். ஆனால் இரட்டைபபை நாளில் செல்லலாமா? இல்லை ஒற்றைப்படை நாளில் தான் செல்லனுமான்னு சொல்லுங்களேன். அம்மாவுக்கும் குழப்பமா இருக்கு அதான் உங்களிடம் கேட்கிறேன்.

//16வது நாள்// போகலாம். //ஒற்றைப்படை நாளில் தான் செல்லனுமா// உங்கள் மாமிக்கு ஒரு ஃபோன் போட்டுக் கேட்டுப் பார்க்கலாமே!

‍- இமா க்றிஸ்

போகலாம் என்று தான் நினைக்கிறேன்.. 16 வது நாள் பூஜை பண்ணி பெயர் வைக்கிறாங்க அப்போ போகலாம் தானே (என் உறவில் ஒருத்தர் போயிருக்காங்க).. இரட்டை படை நாள் கணக்கில்லைனு நினைக்கிறேன்.. எதுக்கும் மாமியார்கிட்ட கேளுங்க.. இன்னொன்னு 1 மாதம் அம்மா வீட்டில் இருந்திட்டு போகலாம் அங்க போனா கட்டாயம் நாம சும்மா இருக்க மாட்டோம்.. அம்மா வீட்டில் என்றால் ரெஸ்ட் எடுக்கலாம்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

எனக்கு குழந்தை பிறந்து இன்றோடு 52 நாட்கள் ஆகிறது. 40வது நாள் அதாவது செப்21 பிரீயட்ஸ் ஆனேன் 5நாட்கள் இருந்தது. இன்று மீண்டும் பிரீயட்ஸ் வந்துவிட்டது. ஏன் இப்படின்னு புரியல. குழந்தைக்கும் தாய்ப்பால் போதுமான அளவு கிடைப்பதில்லை. ஆலோசனை தாருங்கள்.

//பிரீயட்ஸ் // அது மெதுவே ஒழுங்காகிவிடும். பிரச்சினை இல்லை. சில‌ மாதங்கள் வராமலும் இருக்கலாம். ஆனால் மீண்டும் குழந்தை தங்கிவிடாமல் எச்சரிக்கையாக‌ இருங்கள்.

//தாய்ப்பால்// நீங்களே தேடியிருக்கலாம். :‍)
www.arusuvai.com/tamil/node/14743
www.arusuvai.com/tamil/node/11916
www.arusuvai.com/tamil/node/32298
www.arusuvai.com/tamil/node/9686
www.arusuvai.com/tamil/node/21350
www.arusuvai.com/tamil/node/17165
www.arusuvai.com/tamil/node/5108
www.arusuvai.com/tamil/node/14487
www.arusuvai.com/tamil/node/13326
www.arusuvai.com/tamil/node/21210

‍- இமா க்றிஸ்

அம்மா குழந்தை மார்பு காம்பில் வாய் வைத்தாலே வலிக்குது. அவன் பால் குடிக்கும் போது உயிர் போர மாறி வலிக்குது. இதுவே பால் கட்டுர மாறி இருக்கும் போது அவன் குடித்தால் வலி இல்லை.. அவன் மாலை நேரம் மட்டும் 1மணி நேரத்திற்கு ஒரு தடவ பால் குடிக்கான். அந்த நேரம் தான் ரொம்ப வலிக்குது. அவன் பால் குடித்து முடித்த பிறகும் நெருப்பு பட்டது போல் எரிகிறது. ஒழுங்காக வைத்து தான் பால் கொடுக்கேன் அப்பறம் ஏனோ வலிக்கிறது. இதற்கு ஏதாவது வழி உண்டா???

எனக்கு 2வது குழந்தை சுகபிரசவம் தான். குழந்தையின் தலை பெரிதாக இருந்ததால் எனக்கு மோஷன் ஹோல் வரை கத்தரித்து தையல் போட்டார்கள். டாக்டரும் கவனமாக இருங்கள். கஷ்டம் பட்டு மோஷன் போகாதிங்க என்று அறிவுரை கூறினார். நான் லேசாக உடல் தேரியதும் தையல் விழுவதற்குள் வேலைகள் எல்லாமௌ பார்க்க துடங்கிட்டேன். இப்போது என் சந்தேகம் என்னவென்றால் மோஷன் ஹோலுக்கும் Vaginal பகுதிக்கும் இடையே 1inch அளவு தான் தோல் இருக்கிறது. தாம்பத்தியத்தில் ஈடு பட்டால் இதுவும் கிழிந்து விடுமோன்னு பயமா இருக்கு. அப்படி இருக்க வாய்ப்பு உள்ளதா? நான் 6மாத கழித்து தான் தாம்பத்திய வாழ்க்கை தொடருவேன்னு கணவரிடம் கூறிட்டேன். இருந்தாலும் பயமாக உள்ளது. தாம்பத்தியமே வேணாம் என்கிற அளவுக்கு பயாமா இருக்கு. பதில்தாருங்கள். நான் கேட்டதில் ஏதாவது தப்பிருந்தால் மன்னித்துவிடுங்கள்.

//அப்படி இருக்க வாய்ப்பு உள்ளதா?// நிச்சயம் இப்படி ஆகாது. பயமே வேண்டாம். //1inch அளவு// சிறிய உடலமைப்பு உள்ளவர்களுக்கு இதுவே சாதாரண அளவாக இருக்கலாம். அல்லாவிட்டாலும்... உள்ளே இருக்கும் தசைப்பகுதி பாதுகாப்புக் கொடுக்கும்.

//6மாத கழித்து தான் தாம்பத்திய வாழ்க்கை தொடருவேன்னு கணவரிடம் கூறிட்டேன்.// பிரச்சினை என்றால் டாக்டரே சொல்லியிருப்பாங்க இல்லையா? அப்படிச் சொல்லாத வரை... தாமதிப்பது, தவிர்ப்பது அவசியமில்லாதது.

6 மாதங்கள் _ இடைவெளி கொஞ்சம் அதிகம் என்று தோன்றுகிறது. காயம் நன்கு ஆறியபின் கூட ஆரம்பத்தில் சிரமம் தெரியலாம். ('தெரியும்' என்று நான் சொல்லவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும் நீங்கள், தெரியலாம் என்று மட்டும் சொல்கிறேன்.) எப்படி இருந்தாலும் பயப்படத் தேவையில்லை.

//தாம்பத்தியமே வேணாம் என்கிற அளவுக்கு பயாமா இருக்கு.// உங்களுக்குப் பிரச்சினை ஆகும் என்றிருந்தால், //கஷ்டப் பட்டு மோஷன் போகாதிங்க// என்று சொன்ன டாக்டர் பெரிய விஷயத்தைச் சொல்லாமல் விட்டிருப்பார் என்று நினைக்கிறீர்களா?

அவர் சொன்னது, ஆரம்ப காலத்திற்கான அட்வைஸ். சொன்னதன் காரணம் ‍_ சுலபமாக அழுக்காகும் இடம் அது. தோலில் சிறு வெடிப்புகள் ஏற்பட்டால் இன்ஃபெக்க்ஷன் ஆகலாம் என்பதனால் இருக்குமே தவிர கிழிந்தெல்லாம் போகும் என்பது இல்லை. பேப்பர் போல அல்ல எம் தோல். உள்ளே பல படைகள் இருக்கின்றன. தவிர ஒவ்வொரு இடத்திலும் உள்ள தசைகளும் தோலும் அந்தந்த உறுப்புகளின் செயற்பாடுகளுக்கு ஏற்ப உறுதியாகவோ விட்டுக் கொடுக்கும் தன்மையோடோ தான் அமைந்திருக்கும்.

காயமோ சத்திரசிகிச்சையோ, எந்த உடற்பாகமாக இருந்தாலும் மருத்துவர்கள் தவிர்க்கும்படி ஆலோசனை சொல்லாதிருந்தால் எத்தனை சீக்கிரம் பயன்படுத்த ஆரம்பிக்கிறோமோ அத்தனை நல்லது. எந்த உடற் பாகத்திற்கும் பயிற்சி தேவை. பயிற்சியுடன் காயங்கள் ஆறும் போதுதான் தசைகளும் தோலும், ஏன் தழும்புகளும் கூட உறுப்பின் செயற்பாட்டிற்கு ஏற்ப வளர்ந்து ஆறும்.

~~~~~~
உங்கள் பாலூட்டும் பிரச்சினை தொடர்பாக... முன்பே பதில் தட்டினேன். அனுப்பிய சமயம் நெட் சதி செய்தது. காப்பி பண்ணி வைத்திருக்கவில்லை.

இப்போ சரியாகிவிட்டது என்று நம்புகிறேன். அல்லாவிட்டால் nipple shield பயன்படுத்திப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

உங்கள் அறிவுரைக்கு ரொம்ப நன்றி அம்மா. Nipple pain இப்போ இல்லை அம்மா. முதலில் ஒழுங்கா தூங்கமாட்டான் அதனால் கொஞ்சம் கஷ்டம இருந்துச்சு இப்போ 3மணி நேரம் தூங்குறான் அதனால் தாய்பால் பிரச்சனை இல்லை அம்மா.

நான் கவிதை அனுப்பினால் அதை இதில் பதிவிட மாட்டக்காங்க. ஏன் என்று தெரியலை. இதை எப்படி சரி செய்யனும்.

Page work நடப்பதால் இப்போது ஏதும் upload (ரெசிப்பிஸ் உட்பட) செய்வதில்லை.. வலைப்பதிவு சொந்தமாக அவர்களே upload பண்ணிக் கொள்ளலாம்.. அதனால் வலைப்பதிவு மட்டும் வரும்.. :) வேலைகள் முடிந்ததும் அப்லோட் பண்ணுவோம் என அண்ணா சொல்லியிருக்காங்க.. :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்