சர்க்கரை

2 வயது குழந்தைக்கு பாலில் சர்க்கரைக்கு பதில் வேற என்ன கலந்து கொடுக்கலாம் ப்ளிஷ் சொல்லுங்க......அதாவது வெல்லம் கலந்து தரலாமா ..ஏனா சர்க்கரைலா எலும்பு கலக்குறதாலா சர்க்கரை தவிர்க்க நினைக்கிறேன் ப்ளிஷ் எனக்கு ஒரு ஐடியா கொடுக்கங்க.

//வெல்லம் கலந்து தரலாமா// தரலாம்.

//2 வயது குழந்தைக்கு பாலில் சர்க்கரைக்கு பதில் வேற என்ன கலந்து கொடுக்கலாம்// எதுவும் கலக்காமல் தனியே பாலைக் கொடுப்பது நல்லதே!

‍- இமா க்றிஸ்

Naatu sarkarai, honey(thean), allathu Panagarkandu serthu kodukalam.

நன்றி இமா மேடம்,மலர்விழி மேடம்.ஆனா இமா மேடம் வெறும் பால் நல்ல இ௫க்குமா ...ஏன் பையனுக்கு சர்க்கரை,ஐுனியர் ஹார்க்ளிக்ஸ்,. பால் சேர்த்து தான் 1வயசு இருந்து கொடுக்குறேன்

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

//வெறும் பால் நல்ல இ௫க்குமா// நல்லாவே இருக்கும்.

நாம் தான் தேவையில்லாமல் பழக்கி விடுகிறோம். இனிப்பு பிடித்துப் போக இதுவும் ஒரு காரணம்.

'சாதத்துக்கு உப்பு போடாமல் சமைத்தால் நன்றாக இராது,' என்பார்கள் சிலர். இதை விடுங்க. :-) 'சிக்கன் யம்!' என்கிறவர்களும் இருக்கிறோம்; 'சிக்கனா! உவ்வே!' என்கிறவர்களும் இருக்கிறோம். அது போல் தான் பாலுக்கு சர்க்கரையும்.

//1வயசு இருந்து கொடுக்குறேன்// குழந்தை தானாகவே சர்க்கரை இல்லாமல் அருந்த மறுத்தால் அது வேறு. நாமாகவே எமக்கு இனிப்பு நாக்கு என்று குழந்தைக்கும் பழக்கி விடுவது அவசியமற்றது.

‍- இமா க்றிஸ்

மிக்க நன்றி இமா மேடம்.சர்க்கரை இல்லாமல் கொடுத்து பழக்குறேன்.பாலும் ஹார்க்ளிக்ஸ் கொடுக்குறேன் மறுத்தால் தேனும் (அ) பனகற்கண்டு , வெல்லம் ஏதேனும் பழக்குறேன் மேடம்.தங்களை போன்ற அனுபவம் உள்ளவரின் கருத்து எனக்கு மிகவும் அவசியம்....

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

என் பொன்னுக்கு 4 மாதம் முடிந்து 5 நாட்கள் ஆகிறது டாக்டர் அவளுக்கு செர்லாக் மற்றும் ராகி கூழ் கொடுக்க சொல்லி இருக்கிறார் 5ம் மாத தொடக்கத்தில் இவற்றை கொடுக்கலமா???

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

டாக்டர் தானே பா கொடுக்க‌ சொன்னாங்க.அப்ரம் ஏன் யோசிக்கிரீங்க‌.

ஆம்.. கொடுக்கலாம்.. இங்கே உள்ள டாக்டர்ஸ் 5 மாதத்தில் தான் கொடுக்க சொல்வாங்க , காய்கறி, பருப்பு வேக வைத்த தண்ணீர் கொடுக்கலாம்.. பிஸ்கட் கொடுக்கலாம்..
தளிகாவின் குழந்தை உணவு வாசித்து பாருங்கள்.. லிங்க் பேஸ்ட் ஆகலை.. அங்கே கூப்பிடுறேன் உங்களை..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ரொம்ப நன்றி தோழிகளே
டாக்டர் சொன்னங்க ஆனா என் அக்கா அப்றம் ஒரு சிலர் 6 மாசம் கழிச்சு தான் தரணும் நு சொன்னாங்களா அதா கொஞ்சம் கன்ஃப்யூஸன் ஆகிருச்சு..

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

மேலும் சில பதிவுகள்