குழந்தை வளர்ப்பு

என் பையனுக்கு 2 1/2 வயது ஆகிறது ஆனா என் பேச்சையும்,அவன் அப்பா பேச்சையும் கேட்பதில்லை அவனோ அதிகமாக சேட்டை பண்ணுறான் அவன் கேட்டது எல்லாம் வாங்கி தரோம் கண்டித்து , அடித்தும் பாத்தாச்சு நாங்க சொல்லுவதை காது கொடுத்து கேட்பதில்லை. ஆனா அவன் பெரியப்பா பேச்சை கேக்கிறான் அவரோ என்றாவது தான் பாத்து பேசுகிறார் அவர் கொடுக்கிற மதிப்பு எங்களுக்கு கிடைப்பதில்லை என்ன செய்வது எப்படி வளர்ப்பது தெரயவில்லை .இது போன்ற குழந்தையை எப்படி வளர்க்கலாம் சொல்லுங்க ப்ளிஷ்

//என் பேச்சையும்,அவன் அப்பா பேச்சையும் கேட்பதில்லை// சில விடயங்களை ஆரம்பத்திலிருந்தே பழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும்.

//அவனோ அதிகமாக சேட்டை பண்ணுறான்// இது சேட்டை என்று அவருக்குத் தெரிந்திராது. அதிகம் ஆக்டிவ்வான குழந்தைக்கு வேலை போதாவிட்டால் வேறு ஏதாவது செய்வார்கள். அது பெரியவர்களுக்கு சிரமமாக இருக்கிறதே தவிர, சேட்டை செய்ய வேண்டும் என்று நினைத்துக் குழந்தை செய்வதில்லை.

//அவன் கேட்டது எல்லாம் வாங்கி தரோம்// இது தான் பிரச்சினைக்குக் காரணமோ தெரியவில்லை.

//கண்டித்து , அடித்தும் பாத்தாச்சு/// ;(( குழந்தைங்க அது. எதையும் வேண்டுமென்று செய்வதில்லை. கண்டிப்பு அன்போடு வர வேண்டும்; அதுவும் ஆரம்பத்திலிருந்தே இருந்திருக்க வேண்டும். கண்டிப்பும் அடியும் குழந்தை மனசை நோகடிக்கலாம். ஆரோக்கியமான விடயங்கள் அல்ல இவை. பொறுமையாகத் தான் கையாள வேண்டும்.

//நாங்க சொல்லுவதை காது கொடுத்து கேட்பதில்லை. ஆனா அவன் பெரியப்பா பேச்சை கேக்கிறான்// அப்போ... உங்களிடம் தான் தப்பும் தீர்வும் இருக்கிறது.

//அவர் கொடுக்கிற மதிப்பு எங்களுக்கு கிடைப்பதில்லை// குழந்தைக்கு நீங்கள் சொல்லும் "மதிப்பு" பற்றி எதுவுமே தெரியாதுங்க. உங்களிடம் கிடைக்காத எதுவோ ஒன்று பெரியப்பாவிடம் கிடைக்கிறது. அது என்னவென்று அவதானியுங்கள். (அவர் பயமுறுத்தும் ஆளாக இல்லை என்று நம்புகிறேன். :-) நீங்கள் குழந்தை பயப்படுவதாகச் சொல்லவில்லை.)

//என்ன செய்வது எப்படி வளர்ப்பது தெரயவில்லை// ம்...
//இது போன்ற குழந்தையை எப்படி வளர்க்கலாம் சொல்லுங்க ப்ளிஷ்// எது போன்ற!! உங்கள் குழந்தை, ஒரு குழந்தை எப்படி இருக்குமோ அப்படித் தான் இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. குழந்தையைக் குறை சொல்வதை முதலில் விடுங்கள்.

//இது போன்ற குழந்தையை எப்படி வளர்க்கலாம்// ம்ஹும்! எங்கயோ இடிக்குதே! எனக்குத் தோணுறதைச் சொல்றேன். நீங்கதான் மாற வேணும் என்று எனக்குத் தோணுது. பொறுமையாக, அமைதியாக யோசித்துப் பாருங்கள். பெரியப்பாவின் நடவடிக்கையில் எது குழந்தையை ஈர்த்திருக்கும்? உங்கள் நடவடிக்கைகளில் எவையெல்லாம் குழந்தைக்குப் பிடிக்காமலிருக்கிறது? 2 லிஸ்ட் போடுங்க. ஒப்பிட்டுப் பாருங்க. புரிய ஆரம்பிக்கும்.

‍- இமா க்றிஸ்

தங்களின் கருத்தை மனபூர்வமாக ஏற்று கொள்கிறேன் . ஆனால் அவன் ரெம்ப அடம் பிடிக்கிறான்,அதிகமாக கோபம் வருது இரண்டையும் கண்டோல் பண்ண முடியல.

அதுமட்டு அல்ல அவனுக்கு வெளியிலே இருக்கனும் பார்க்கிறான் வீட்டுக்குள்ள வரவே புடிக்க மாட்டுது அவன் 1 வயது இருந்து அப்படிய தான் இருந்தான் அவனுக்கு எங்க குட இருப்பது விட வெளியிலே rounds இருக்கனும் பார்க்கிறான்.

அவன் பெரியப்பா வீட்டுக்கு போய் இரண்டு முறை இரவில் தங்கீட்டான்.பெரியப்பா சத்தம் போட்டா பேசமா இருக்கிறான் ஆனால் எங்களிடம் அப்படிய இல்லை.

அவனே சாப்புடுவான் எப்போவது தான் நான் ஊட்டனும்,அவன் பெரியப்பா வீட்டிலிருந்து வந்த பின்பு என்னை தேடவே மாட்டான் மீண்டும் பஎரியப்பா வீட்டுக்கு போகவே ஆசை படுறான்

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

தங்களின் கருத்தை மனபூர்வமாக ஏற்று கொள்கிறேன் . ஆனால் அவன் ரெம்ப அடம் பிடிக்கிறான்,அதிகமாக கோபம் வருது இரண்டையும் கண்டோல் பண்ண முடியல.

அதுமட்டு அல்ல அவனுக்கு வெளியிலே இருக்கனும் பார்க்கிறான் வீட்டுக்குள்ள வரவே புடிக்க மாட்டுது அவன் 1 வயது இருந்து அப்படிய தான் இருந்தான் அவனுக்கு எங்க குட இருப்பது விட வெளியிலே rounds இருக்கனும் பார்க்கிறான்.

அவன் பெரியப்பா வீட்டுக்கு போய் இரண்டு முறை இரவில் தங்கீட்டான்.பெரியப்பா சத்தம் போட்டா பேசமா இருக்கிறான் ஆனால் எங்களிடம் அப்படிய இல்லை.

அவனே சாப்புடுவான் எப்போவது தான் நான் ஊட்டனும்,அவன் பெரியப்பா வீட்டிலிருந்து வந்த பின்பு என்னை தேடவே மாட்டான் மீண்டும் பெரியப்பா வீட்டுக்கு போகவே ஆசை படுறான்.

ஓரு நாளைக்கு 10முறையாவது விடாமல் அழுகிறான் எப்படியும் வாந்தி எடுத்துறான் .இப்ப கூட ஓரே அழூகை தான் . பெரியப்பா வீட்டுல இரண்டு பிள்ளைங்க இவன எப்போவது தான் கூட்டிட்டு போறங்க என்ன பண்றது .....

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

//அவனுக்கு வெளியிலே இருக்கனும் பார்க்கிறான் வீட்டுக்குள்ள வரவே புடிக்க மாட்டுது// வெளியே என்ன ஆக்டிவிட்டி பிடிக்கும்? வேறு குழந்தைகளோடு விளையாடக் கேட்கிறாரோ? //வெளியிலே rounds இருக்கனும் பார்க்கிறான்.// :-) பெரும்பாலான குழந்தைகள் அப்படித் தான். அடிக்கடி வேளியே கூட்டிப் போங்க. குழந்தைக்கு நல்லது தான்.

//அவன் பெரியப்பா வீட்டுக்கு போய் இரண்டு முறை இரவில் தங்கீட்டான்.// :-) பிரச்சினை இல்லாத குழந்தையாத் தெரியுறாரே! //பெரியப்பா சத்தம் போட்டா பேசமா இருக்கிறான்// ஆனாலும் அங்க இருக்கப் பிடிக்குது. அப்போ நிச்சயம் அங்க பிடிச்ச விஷயம் ஏதோ இருக்கு. அதைக் கண்டுபிடிங்க.

//அவனே சாப்புடுவான்// ஆஹா! நல்ல குட்டியரா இருக்காரே!

//அவன் பெரியப்பா வீட்டிலிருந்து வந்த பின்பு என்னை தேடவே மாட்டான் மீண்டும் பஎரியப்பா வீட்டுக்கு போகவே ஆசை படுறான்// அங்க என்ன மாஜிக் இருக்கு என்கிறதை முதலில் கண்டுபிடிங்க.

‍- இமா க்றிஸ்

தங்களின் கருத்து எனக்கு பயனனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி . ஆனால் நீங்க நினைக்கிற அளவுக்கு இல்லை அவனா சாப்பிடுறது தான் பிரச்சனை சாப்பிறன் பேரில bed,போர்வை,தரை,அவன் மேல சிந்தி கொட்டிட்டு தான் சாப்புடுவான் அப்புறம் அவன் சாப்பிடுறது
இரண்டு,முன்று வாய் தான் மத்தது எல்லாம் வீண் தான் அதுமட்டு அல்ல வேளையும் கொடுத்து ட்டு இருப்பான்.

பெரியப்பா மட்டும் அல்ல இப்போ யாறும் வந்தாலும் அவங்க கூட போகனும்,அவங்க வீட்டுல அங்கேய இருக்கனும் பார்க்கிறான்.

பெரியப்பா வீட்டுல இரண்டு பிள்ளைங்க இருக்காங்க அவங்க கூட விளையாடனும் நினைக்கிறான் அதுனால அங்கேய இருக்கனும் பார்க்கிறான்.

எனக்கு தெரிஞ்சு அவனுக்கு வெளியிலே இருக்கனும்,விளையாடனும் ஆனா தினமும் அதுக்காக இத பண்ண முடியாது

இது இரண்டு நடக்கலைனா அவன் எங்க இரண்டு பேரையும் அடி வெளுத்துறான்,அடம் பிடிக்கிறான்
கோபம் படுறான் ,வீண் பிடிவாதம் பிடிக்கிறான் என்ன செய்வது தெரயவில்லை மேடம்

பிரச்சனை இல்லாத குழந்தை எல்லாம் இல்லை மேடம்.நாங்க துாங்கற நேரம் இரவு 1.30 ஆயுடுது அதுகுள்ள அவன் அழுது ஆர்பாட்டம் பண்ணி தான் துாங்கிறான்

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

இந்த வயதில் பல குழந்தைகள் செய்வதை தான் அவரும் செய்கிறார்..
அவருக்கு கூட விளையாட ஆள் தேவைப்படுகிறது. நீங்கள் அவருடன் சேர்ந்து சாப்பாடு ஊட்டிக் கொண்டே விளையாடலாம்.. கதை சொல்லலாம். அடுத்தவர்களை அடிப்பது தவறு.. அம்மா அப்பாவை அடிக்கக் கூடாது என அவருக்கு புரியும்பபடியா சொல்லலாம்.
2 1/2 வயது என்றால் ப்ளே ஸ்கூலில் விடலாம்.. அங்கே மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகினால் இவை எல்லாம் மாற வாய்ப்புள்ளது.
என்ன செய்தாலும் குழந்தையை அடிக்காதீர்கள். அவருக்கு என்ன தெரியும் பாவம்.. வேண்டுமென்றே எந்த குழந்தையும் செய்வதில்லை..

அவந்திகா

_()_ & நல்வரவு. :-)
வந்ததும் வராததுமாக அழகு தமிழில் அருமையாகப் பதில் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் அறுசுவைக்கு வர வேண்டும். :-)

‍- இமா க்றிஸ்

Sorry for typing in English,I don't have facility to type in Tamil,

I have red this post and feeling bad,y u ppl r expecting kids to understand everything. Kids r kids,we need to understand them.don't expect too much manners or gud behaviour bcs it ll come through intrinsic motivation.

We shouldnot scold or beat the kids,their self confidence ll come down,now its very important to develop kids with self esteem.

If he wanted to be out means give him lot of exposure,he wants to explore the environment like take him everywhere atleast 2 to 3 hrs per day.

Everything you can achieve through good attachment with ur kid.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

நன்றி இமா.

தமிங்கலம் வாசிக்கவும் பிடிக்காது. தட்டவும் பிடிக்காது. ஒன்றரை வருடத்திற்கு மேலாக அறுசுவை பார்க்கிறேன். நேற்று தான் ஒரு கேள்விக்காக உறுப்பினர் ஆனேன்.

முடிந்த அளவு வருகிறேன் :-)

அவந்திகா

அவந்திகா,வென்னிலா,இமா மேடம் நன்றி.எனக்கு கருத்து தெரிவித்ததுக்கு மிக்க நன்றி.எனக்கு நெட் கார்டு முடிந்தது அதன் என்னால பதில் கொடுக்க முடியல மன்னிக்கவும். தங்களின் கருத்தை ஏற்று கொள்கிறேன் . நீங்க சொன்ன மாதிரி தான் நானும் வளர்க்கனும் நினைக்கிறேன் ஆனா அதன் முடியல மாட்டுது .நான் முயற்சி பண்ணுறேன்.

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

மேலும் சில பதிவுகள்