baby

Enaku marriage agi 9 mth aguthu.3 mth en husband kooda irunthar.but baby ila.back pain ah iruku nu Dr ta ponapa scan pana sonaga.left overy la ratthakatti iruku nu solirkaga..inum 6 mth la en husband varuvaga...veetla Elam ena 3 mth kooda irunthu inum good news ila nu k kuraga.avar varathukula sari aiduma.solluga.dr tablet 1 yrku sapda solirkaga.enaku age 27 aguthu..

Husband 1 mth leave Ku than varuvaga

Rly pannuga friends

//9 mth aguthu.// உங்கள் நிலையில்..... அதையெல்லாம் கணக்கில் எடுக்க முடியாது.

//veetla Elam ena 3 mth kooda irunthu inum good news ila nu k kuraga.// கர்ர்ர்..... //3 mth en husband kooda irunthar.// கலியாணத் தேதியோ, கணவர் வெளியூர் பயணப்பட்ட தேதியையோ ஓவ்யுலேஷன் தேதி பார்த்து ஏன் குறித்துக் கொடுக்கவில்லை, என்று குட் நியூஸ் கேட்கிறவங்கள்ட்ட திருப்பிக் கேளுங்க.

கூட இருந்த 3 மாதத்தில் நடுவில் இருந்த ஒரேயொரு மாதம் மட்டும் தான் ஓவ்யுலேஷன் தேதி சரியாக அமைந்திருக்கும். அப்போதும், கருக்கட்டுவதற்கு நீங்கள் இருவரும் சந்தர்ப்பம் அமைத்துக் கொடுக்காமலிருந்திருக்கலாம். எப்படிப் பார்த்தாலும்... ஒரேயொரு கருக்கட்டும் சந்தர்ப்பம் தான் தவறி இருக்கும். உங்க மேல் எந்தத் தப்பும் கிடையாது.

//inum 6 mth la en husband varuvaga.// அவங்க எத்தனை மாசம் கழிச்சு வராங்க என்கிறது பிரச்சினை இல்லை. எத்தனை மாசம் உங்களோட இருப்பாங்க என்கிறது தான் பிரச்சினை.

//enaku age 27 aguthu..// இதுவும் கூட பிரச்சினை இல்லை. பெரிய பிரச்சினை, உங்கள் கணவர் தொடர்ந்து ஆறேழு மாதங்களாவது உங்களோடு இருக்க வேண்டும் என்பது தான்.

//Husband 1 mth leave Ku than varuvaga// :-) உங்க ஓவ்யுலேஷன் தேதி பார்த்து வந்தாலும் அந்த ஒரு சான்ஸும் டென்ஷனால மிஸ் ஆக சான்ஸ் இருக்கு.

நீங்கள் மருந்து மாத்திரைகள் எடுக்கலாம், கோவிலைச் சுற்றி வரலாம். ஆனால் கணவர் கூட இருப்பது அமையவில்லையானால் குழந்தை எப்படி? வீட்டாரிடம் பேசி, இம்முறை வரும் உங்கள் கணவரை கொஞ்சம் அதிக காலம் உங்களோடு தங்க வையுங்கள். அல்லது நீங்கள் அவரோடு போய்ச் சீவிக்கப் பாருங்கள். மீதியெல்லாம் இரண்டாம் பட்சம் தான்.

‍- இமா க்றிஸ்

Romba thanks madam

மேலும் சில பதிவுகள்