3 1/4 வயது குழந்தை படிப்பு

என் பொண்ணுக்கு 3 1/4 வயது. அவள் LKG படிக்கிறாள். அவள் ஒழுங்காக எழுத மாட்றாள். 6 எழுத கையை பிடித்து கற்று கொடுத்தும் அவளாக எழுதும் போது முட்டை மட்டும் போடுறாள். இல்லைன்னா ____ இப்படி கோடு மட்டும் போடுறாள்.
இதே மாறி தான் ஒவ்வொரு இதும் பன்றாள். அவள் தெரியாமல் பன்றாளா இல்லை வேணும்னு பன்றாளான்னு தெரில. குழந்தைகள் எழுதி பழக எவ்வளோ நாள் ஆகும். எந்த வயதில் எழுதி பழகும். நான் பாப்பாவை அடுத்த வருடம் LKG போடலாம்னு சொன்னேன் கணவர் கேட்கலை. இப்போ அவள் தான் கஷ்டம் படுறாள். நான் எழுத சொல்லி கொடுக்கும் போது கோபத்தில் அடித்து விடுறேன். பின்பு நானும் வருத்தம் கொள்கிறேன். இதற்கு தீர்வு சொல்லுங்கள்.

3 1/4 வயது LKG க்கு சரியான வயது தான்.. இங்கே (இந்தியாவில் /தமிழகத்தில்) இந்த வயதில் தான் 70% பேர் LKG போடுகிறார்கள்..

படிக்கும் எழுதும் நேரம் தவிர தனியாக ஒரு நோட் வாங்கி கிறுக்க விடுங்க.. சிலேட் கொடுத்து எழுத சொல்லுங்க.. முதலில் எல்லாக் குழந்தையும் இப்படி தான் செய்யும். நாமளும் அப்படி தான் பண்ணியிருப்போம்.. :)

போனில் ABC App download பண்ணி கொடுங்க.. அதில் எழுதினால் ஈசியாக நோட்டில் எழுதுவாள்.. என் மகள் அப்படி தான் எழுதினாள்.. ட்ரை பண்ணி பாருங்க..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ரொம்ப நன்றி தோழி. அவளிடம் நோட் கொடுத்தால் கலரிங் தான் பன்றாள் அதும் வாட்டர் கலர் தான் வேணும்னு சொல்லுறா. மொபைல்ல அப்ஸ் லோட் பன்னி கொடுத்தா மொபைல்க்கு அடிக்ட் ஆயிடுவாளோன்னு தோனுது. வீட்டில் என் பொண்ணு மட்டும் மொபைல்ல கை வைக்க மாட்டாள். அதும் என்னோட கண்டிப்பால்.

மேலும் சில பதிவுகள்