nan 6 month pain athigama iruku

enaku 7month consive a iruken enaku adi vairu vali athigama iruku motion Pora idathula vali athigama irukku.hospital poren sonen vendam solrsolraga apadithan irukum solraga ana enaku vali athigama iruku ethavathu veetu vaithiyam sollavum,valatha kaduna mathiri eruku

யாராவது பதில் சொல்லும் வரை பொறுத்திருங்கள். திரும்பத் திரும்ப த்ரெட் போடத் தேவையில்லை.

எனக்குக் கேள்வி புரியாததால் தான் நான் பதில் சொல்லவில்லை. //hospital poren sonen vendam solrsolraga apadithan irukum solraga// எங்க ஃபுல்ஸ்டாப் வரும், யார் எதைச் சொன்னார்கள் என்று கெஸ் பண்ணும் போது தப்பா கெஸ் பண்ணிட்டா... பதில் சரியா வராது.

//valatha kaduna// என்றால் என்ன? வலத கடுன!!

‍- இமா க்றிஸ்

நான் 7 மாதம் கர்ப்பமாகா இருக்கேன். எனக்கு அடி வயிறும் வலி அதிகமாக இருக்கு. ஆசனவாய் வலி அதிகமாக இருக்கு.இது எதனால வருது. என் வீட்டில் மருத்துவமனைக்கு போக வேண்டாம்.சரி ஆகி டும் சொல்றாங்கள் ,என்ன செய்யவது

கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் எல்லோருக்குமே வரும். நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும்.. பால், பழங்கள், கீரை வகைகள் தினமும் சேர்க்க வேண்டும். அப்போதுதான் மலச்சிக்கல் வராது.. இதெல்லாம் என் டாக்டர் எனக்கு சொன்னது..

அத்திப்பழம் வாங்கி வைத்து தினம் 2, 3 சாப்பிடுங்க.. கர்ப்பிணிகளுக்கு ரத்த உற்பத்திக்கு உதவும்.. மலச்சிக்கல் வராது.. எனக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதாக சொன்னதால் டாக்டர் சொல்லி நான் 2 மாதமாக அத்திப்பழம் சாப்பிடுகிறேன்..

படுக்கும் போது அடிவயிற்றில் விளக்கெண்ணெய் கொஞ்சம் தடவினால் வலி இருக்காது..

ரொம்பவும் பொறுக்க முடியாமல் இருந்தால் டாக்டரிடம் போவதே நல்லது.. நம் வலி மற்றவர்களுக்கு தெரியாது இல்லையா?

அவந்திகா

ஆசிரியப் பணியில் உள்ளவர்களுக்கு ஓயாமல் பேசுவதாலும் சில‌ காரணங்களால் ஏற்படும் மன‌ அழுத்தமும் உடல் சூட்டை அதிகப் படுத்தும்.
உடல்சூடு அதிகமானால் மலம் இறுகும்.அதன் காரணமாகவே ஆசனவாயில்
வலி அதிகமாகும். உட்காரும் நாற்காலி பின்னல் நாற்காலியாக‌ இருப்பது
மிகவும் நல்லது. கீரைகள் சுமாரான‌ நார்த் தன்மையுடன் இருக்கவேண்டும்.
கோதுமை போன்ற‌ மாவுப் பொருள்களை உண்பதானால் கட்டாயம் கீரை
வகைகள் இருப்பது மிக மிக‌ நல்லது. பச்சை மிளகாயை தற்போது தவிர்ப்பது நல்லது, நெய் கட்டாயம் சாப்பிட‌ வேண்டும். அரைக்கீரை,
பொன்னாங்கண்ணி, மணித்தக்காளி, வாழைப்பூ, சுக்காக்கீரை, சுண்டைக்காய், அத்திக்காய், முருங்கைக்கீரை,சிறுகீரை, காய்களில் கிழங்கு வகைகளைவிட‌ பலவகையான‌ காய்களை நிறையச் சாப்பிடுங்கள்.
பெருஞ்சீரகத்தை (சோம்பு) வறுத்து அதனுடன் காய்ந்த‌ திராட்சை 20 சேர்த்து
கொதிக்க‌ வைத்து தினந்தோறும் காலையிலோ அல்லது இரவிலோ அரை
டம்ளர் குடிக்க‌ மலசலம் நன்றாகக் கழியும், அதனால் ஏற்படும் வயிறு, இடுப்பு வலியும் வயிற்றைச் சுண்டி இழுக்கும் வலியும் போகும்.
காரக்குழம்பு வைக்கும் போது தாளிக்கும் எண்ணெய்யுடன் ஒரு டீஸ்பூன்
விளக்கெண்ணெய் சேர்த்துத் தாளிக்கவும். எந்த‌ வாசமும் தெரியாது.
காரத்தைக் குறைத்துக் கொள்ளவும். ஆசனவாயில் வலி இருக்காது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

hi imma ma
nalla erukingela

மேலும் சில பதிவுகள்