கண்ணாடி க்ளாஸ்

கண்ணாடி க்ளாஸ்களை ஒன்றுக்கு மேலே ஒன்றை தூக்கி வைத்தால் சில சமயம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு வெளியே எடுக்க வராது. அப்படி ஒட்டிக்கொண்டால் க்ளாஸை எடுத்து ப்ரிஜ்ஜில் வைத்து விடவும்.பின்பு எடுத்தால் சுலபமாக வரும்.

வணக்கம், கண்ணாடிகிளாஸ்களை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கும் போது இடையில் பேப்பர் துண்டங்களை போட்டு வைத்தால் எடுப்பது சுலபம்.நன்றி.

THuSHI

கண்ணாடிகிளாஸ் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒருசேர நீங்கள் குறிப்பிடுவது எதை என்பதில் குழப்பம் உள்ளது. முன்னவர் சொன்னது, கண்ணாடி டம்ளர்கள் என்று நினைக்கின்றேன். இரண்டாமவர் சொன்னது கண்ணாடி தட்டுகள் என்று நம்புகின்றேன். எனது கணிப்பு சரியா என்பதை சொல்லவும்.

பாபு அண்ணன் அவர்களுக்கு,
இருவருமே கண்ணாடி க்ளாஸ்கள் என்று குறிப்பிடுவது கண்ணாடி டம்ளர்களைதான்! கண்ணாடி தட்டுகளை பேப்பர் இல்லாமலே அடுக்கி வைத்தாலும் எடுப்பது சுலபம்தான். ஆனால், கண்ணாடி டம்ளர்கள்தான் அடுக்கிவைத்த பிறகு சில சமயம் சிக்கிக்கொள்ளும். அதனால்தான் சகோ.லக்ஷனா பேப்பர் போட்டுவைக்க சொல்கிறார்கள். இது சம்பந்தமாக அவர்களே விளக்கம் கூறும்போது அது உங்களுக்கு கன்ஃபார்ம் ஆகிவிடும்.(Sorry! கேட்டது அவர்களிடத்தில், முந்திக்கொண்டு பதில் சொல்லியதாக நினைக்கவேண்டாம்.)

ஆலோசனை கூறிய சகோ.கதீஜாவுக்கும் லக்ஷனாவுக்கும் நன்றிகள். இதற்கு இன்னொரு ஐடியாவும் உள்ளது. சிக்கிக்கொண்ட கண்ணாடி டம்ளர்களை சுத்தமான தரையில் வைத்து, எதிலும் மோதிவிடாமல் மெதுவாக உருட்டிவிட்டால், தனியாக கழன்றுவிடும்.

உள்ளிருக்கும் டம்ளரில் குளிர்ந்த நீரையும் டம்ளர்களுக்கு இடையில் சுடுநீரையும் ஊற்றினால்2 நிமிடத்தில் தனிதனியெ வந்து விடும். சுடுநீர் மிகவும் சூடாக இருக்கக் கூடாது.

அன்புடன்,
செல்வி.

ப்ரிஜ்ஜிற்க்கு எங்கே போவது? தண்ணீரில் இட்டு சிறிது நேரம் கழித்து எடுக்கவும்

உண்மை,உழைப்பு,நேர்மை,விசுவாசம்,

சகோதரி அஸ்மா அவர்களுக்கு நீங்கள் சொல்லியது போல் கண்ணாடி டம்ளர் தான் விளக்கம் கொடுத்ததற்க்கு நன்றி.

அட்மின் அவர்களுக்கு நான் சொன்னது கண்ணாடி டம்ளர் தான் நன்றி

குளிர்ந்த நீர் என்றால் ப்ரிஜ் தண்ணீர் அல்ல. சாதாரண தண்ணீர் தான். ப்ரிஜ் தண்ணீரை ஐஸ் வாட்டர் என்று அழைப்பர். நன்றி.

அன்புடன்,
செல்வி.

டியர் செல்வி, என்னைப் பொருத்தவரையில் ஃபிர்ஜ் தண்ணீருக்கும், ஐஸ் வாட்டருக்கும் சாதாரண தண்ணீருக்கும் நிரைய்ய வேறுபாடுகள் உள்ளது.
குளிர்ந்த நீர் என்றால் அது குளிர் சாதனப் பெட்டியில் வைத்திருந்த நீர்.
ஐஸ் வாட்டர் என்றால் பனிக்கட்டிகள் சேர்ந்துள்ள நீரைத் தான் ஐஸ் வாட்டர் என்று ஆங்கிலத்தில் கூறுகின்றோம்.
சாதாரண தண்ணீர் என்றால் சாதாரண வெப்பநிலையிலுள்ள ரூம் டெம்பெரேசர் நிலையிலுள்ள தண்ணீரைத்தான் பச்சை தண்ணிர் என்றோ அல்லது வெறும் தண்ணீர் என்றோ கூறுகின்றோம்.
ஆகவே இவை மூன்றுக்கும் வேறுபாடுகள் உண்டு. நன்றி.

வணக்கம் அட்மின், தாமதத்திற்கு மன்னிக்கவும்.நான் கூறியது கண்ணாடிகுவளை[தம்ளர்]. இரு குவளைகளை ஒன்றன்மேல் ஒன்று அடுக்கும் போது இறுகிக்கொள்ளும்.இடையில் பேப்பர் துண்டங்களை போடும்போது இறுகாமல் இருக்கும் அதனால் எடுப்பது சுலபம்.நன்றி.

THuSHI

மேலும் சில பதிவுகள்