Yoga patri terithavargal uthavugal frnds..

Yoga seivathu enaku rmba pidikum.. But yoga class poga mudiyala some situation nala.. Relaxation kaga yoga seiyanumnu asaipadukiren.. Therithavargal chinna chinna steps pakiravum.. Ithu enai pola niraiya thozhikaluku uthavum.

யோகா அடுத்தவர்களிடம் கேட்டோ, பார்த்தோ நாமாக செய்யக் கூடாது.. முறையான பயிற்றுநர்களிடம் பழகி தான் செய்ய வேண்டும்.. இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சனைகள் வரலாம்..

இப்பொழுதே நீங்கள் உங்களுக்கு பல பிரச்சனைகள் இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.. உங்கள் டாக்டரிடம் கேட்டால் சில ஈசியான உடற்பயிற்சி சார்ட் கொடுப்பார்கள் அதை செய்து கொள்ளலாம்..

உங்கள் டாக்டரிடம் கேட்டு அவர் அனுமதித்தால் நீங்கள் கர்ப்பிணிகளுக்கென செயல்படும் தனி மையங்களில் பயிற்சி எடுக்கலாம்.. :-)

அவந்திகா

நீங்கள் கருவுற்றிருந்தால் உங்களுக்கான யோகா பயிற்சிகளை மட்டுமே
செய்ய‌ வேண்டும். தவறான‌ பயிற்சிகளைச் செய்தால் பின் விளைவுகள்
மோசமாக‌ இருக்கும். ஜிம்னாஸ்டிக் போல‌ அப்படித்தான் நான் நினைக்கிறேன். யோகம் என்பது மனதை ஒன்றிலேயே நிலைநிறுத்தி
உடல் அசைவுகளையும் மன‌ அசைவுகளையும் எதற்காகவும் சலனப் படுத்தாமல் இறைவனைத் தியானிப்பது தான் கூடவே நாம் அமரும் முறை
சுவாசமுறைகளில் சாதாரண‌ முறைகளில் இருந்து வேறுபட்டு கடைப் பிடிக்கும் முறைதான் என்பது என்னுடைய‌ கருத்து. இன்னும் சொல்லப்
போனால் மிகவும் மேம்படுத்தப் பட்ட‌ உடல்பயிற்சி முறையுடன் கூடிய‌
அவரவர் இஷ்ட‌ தெய்வ‌ வழிபாடு என்பதே என் கருத்து. இது தவறாக‌ இருந்தால் அதைப் பொருட்படுத்த‌ வேண்டாம்,(நானும் பக்கா இந்து தான்)
உடல் புத்துணர்ச்சி பெற‌ எங்கள் பள்ளியில் ஜைன‌ சன்யாசினிகள்
சொல்லிக் கொடுத்தது.
ஒரு விரிப்பில் நன்கு தாராளமாக‌ கை கால் நீட்டி விரிக்கும் படி
இடம் இருக்கவேண்டும் அதில் மல்லாந்து படுத்து கை கால் மனம்
என்று ஒவ்வொரு அங்கமும் தளர்ச்சியாக‌ இருக்கும் படி படுக்கவேண்டும்
பின்பு நம் மனதை முதலில் கால் கட்டை விரல்களின் மேல் நிறுத்த‌
வேண்டும். (மனது மட்டும் தான் காலை நினைக்க‌ வேண்டும். உடம்பு
அனாவசியமாக‌ வளையக் கூடாது அதாவது காலைக் கண்ணால் பார்க்க‌
வேண்டும் என்று தலையை முன்னால் தூக்கக் கூடாது. முதலில் கஷ்டமாக‌
இருக்கும் இரண்டு மூன்று முறை செய்யச் செய்ய‌ பழகிவிடும்.( அதாவது
அடித்துப் போட்டால் போலப் படுக்கவேண்டும்)
பிறகு மனதில் என் கால்கள் தளர்வடையட்டும் என்று மனதில்
மிக‌ மிக‌ நிதானமாகச் சொல்லிக் கொள்ளுங்கள். சுமாராக‌ அரை நிமிடம்
கழித்து பாதங்கள், கணுக்கால்கள், முழங்கால்கள், தொடைகள், இடுப்பு,
வயிறு, மார்பு, கைவிரல்கள்,உள்ளங்கைகள், மணிக்கட்டுகள், முன்கைகள், தோள்கள், கழுத்து, முகவாய், பிறகு முகம் முழுவதும்
என்று ஒவ்வொரு அவயவங்களாகச் சொல்லிச் சொல்லி மனதை அங்கங்கே
நிலை நிறுத்தி தளர்வடையட்டும் தளர்வடையட்டும் என்று அந்தந்த‌
உடல் உறுப்புகளுக்கு ஆணையிடுவது போல‌ உங்கள் மனதில் நினையுங்கள். பிறகு பாருங்கள் மிக‌ மிக‌ எளிமையாக‌ நினைத்த‌ நேரத்தில் உங்கள் உடம்பு எப்படி எந்த‌ இறுக்கமும் இல்லாமல் மிக‌ மிக‌
லேசாக‌ இருக்கிறது எப்படிப் புத்துணர்ச்சியோடு இருக்கிறது என்பதை
உணர்வீர்கள், இதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
மிக‌ மிக‌ எளிமையான‌ இந்தப் பயிற்சியைச் செய்து பாருங்கள்.
பின்பு இது குறித்துப் பதிவிட்டால் பலருக்கும் பயன் அளிக்கலாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்