சந்தேகம்

வணக்கம் தோழிகளே
Home pregnancy test ல் அதாவது வீட்டில் நாம் செய்யும் Urine test ல் நெகட்டிவ் கிடைத்த பின்னும் கருவுற்றிருப்பதற்கான சாத்தியக் கூறு இருக்கிறதா? யாரேனும் இதைப் பற்றி அறிந்தவர்கள் பதில் கூறவும்.

நிறைய வாய்ப்பு இருக்கு.. எனக்கு என் இரண்டு குழந்தைகளுக்குமே 45 நாள் வரை நெகடிவ் தான் கிடைத்தது.. அப்புறம் தான் லேசாக தெரிந்தது.. நீங்கள் 45 நாளுக்கு மேல் டாக்டரிடம் சென்றால் ப்ளட் டெஸ்ட் செய்து உறுதி படுத்துவார்கள்.. :-)

அவந்திகா

இருக்கிறது. இதுபற்றி இங்கு பலமுறை சகோதரிகள் பேசி இருக்கிறார்கள். எங்கு என்பதை எடுத்துக் கொடுக்க‌ முடியவில்லை. தேடிப் பாருங்கள்.

நீங்கள் ஒன்றிரண்டு நாட்கள் கழித்துச் சோதித்துப் பார்த்தாலே முடிவு பாசிட்டிவ்வாக‌ மாறித் தெரியலாம்.

இப்போதும் (எத்தனை நாட்கள் என்று நீங்கள் சொல்லவில்லை.) ரத்தப் பரிசோதனை செய்தால் பாசிட்டிவ் காட்டலாம்.

‍- இமா க்றிஸ்

உங்கள் பதில் எனது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.....

இன்று எனக்கு 37வது நாள் இம்மா அம்மா...

//அவர்களே// ;) இமா மட்டும் போதும். ;)

அவந்திகா சொன்னதைப் பாருங்க‌. 45 வது நாள் பெரும்பாலும் சரியான‌ முடிவு தெரியும். அதற்குள் தெரிய‌ வேண்டும் என்றால் ஹாஸ்பிட்டல் போங்க‌. யோசிக்காதீங்க‌.

‍- இமா க்றிஸ்

கண்டிப்பாக 45 நாட்கள் வரை காத்திருக்க தயாராக இருக்கிறேன். பிறகு தங்கள் அறிவுரைப்படி மருத்துவமனை செல்கிறேன். நன்றி.

அன்பு தோழிகளே எனக்கு திருமணம் ஆகி 1 வருடம் 8மாதங்கள் ஆகின்றது.நானும் குழந்தைக்காக முயற்சி செய்கிறேன்.எனக்கு ப்ரீயட் 28நாட்களுக்கு ஒருமுறை சரியாக வரும்.ஆனால் இந்த மாதம் இன்று 33வது நாள்.ப்ரீயட் வரவில்லை.இன்று காலையில் டெஸ்ட் செய்தேன்.நெகட்டிவ் வந்தது.நான் என்ன பண்ண எனக்கு எந்த விதமான அறிகுறிகளும் இல்லை.ஆனால் அப்பஅப்ப நீர்கடுப்பு உள்ளது.டாக்டரிடம் செல்லலாமா இல்லை வெயிட் பண்ணலாமா.பதில் தாருங்கள்

இதே இழையில் உங்கள் கேள்விக்கான பதில் உள்ளது..

அவந்திகா

மேலே படித்தேன் சகோதரி.ஆனால் நீர்கடுப்பு இருப்பதால் பயமாக உள்ளது.urinary inflection ஆக கூட வாய்ப்பு இருக்குமா

இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம்.. மனதை குழப்பிக்காமல் ரிலாக்சா இருங்கள்..

அவந்திகா

மேலும் சில பதிவுகள்