சமையலில் ஆரம்பநிலை அனுபவம் மிகுந்த இல்லதரசிகளே உதவ வாருங்கள்.

1.சாதம் செய்ய பயன்படும் பொன்னி அரிசியை குறைந்தது முதல் அதிகபட்சமாக எவ்வளவு நேரம் தண்ணீரில் ஊற வைத்து குக்கரில் சமைக்கலாம்... 2.இட்லி தோசை மாவுக்கும் அரிசி, உளுந்தை எவ்வளவு நேரம் ஊற வைத்து அரைக்க வேண்டும்... 3.இட்லி,தோசை மாவுக்கான விகிதஅளவும் எவ்வளவு எடுக்க வேண்டும். சமையல் செய்யும் இல்லத்தரசிகளே பதில் தந்து உதவுங்கள்.

1. கால்மணி நேரம் முதல் அரை மணி நேரம் வரை ஊற வைக்கலாம்.. (நான் ஊற வைக்காமல்தான் வைப்பேன்)

2. உளுந்து முக்கால் மணிநேரமும், அரிசி ஒன்றரை அல்லது இரண்டு மணிநேரம் ஊறினால் போதுமானது..

3. இட்லிக்கு 4 பங்கு அரிசி 1 பங்கு உளுந்து... தோசைக்கு 5 பங்கு அரிசி 1 பங்கு உளுந்து, 1 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்தால் போதும்..

அவந்திகா

புதிதாக சமைப்பவர்களுக்கு தங்கள் குறிப்பு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி அவந்திகா.

1.ரவை, சம்பா ரவை உப்புமா செய்ய தண்ணீர் அளவு எவ்வளவு ஊற்ற வேண்டும்? .. 2.ரவை கேசரிக்கு எவ்வளவு தண்ணீர்,இனிப்பு சேர்க்க வேண்டும்?.
3.வறுத்த சேமியா ஒரு பாக்கெட்டுக்கான தண்ணீர் அளவு எவ்வளவு?

மற்றவைக்கு பதில் தெரியவில்லை எனக்கு..

ரவை கேசரிக்கு ரவை 1 பங்கு, சீனி 2 பங்கு, தண்ணீர் 3 பங்கு ஊற்றி செய்தால் நல்ல டேஸ்டியாக இருக்கும்.. :-)

அவந்திகா

ரவை சம்பா ரவை நான் கடையில் வாங்கிதான் உபயோகப்படுத்துகிறேன் அந்தப் பாக்கெட்டில் இருக்கும் குறிப்பில் எவ்வளவுத் தண்ணீர் ஊற்றச் சொல்கிறார்களோ அந்த‌ அளவு ஊற்றினால் சரியாக‌ இருக்கும்,

எல்லாம் நன்மைக்கே

வெளிநாடுகளில் வாங்கும் காய்கறிகள்,சிக்கன்,மீன் போன்ற உணவு பொருட்களில் அதிகமாக மருந்து (chemical)இருக்கிற மாதிரி தோன்றுகிறது இது உண்மையா? உண்மையெனில் அது உடலுக்கு கெடுதல் அல்லவா!இதற்கு என்ன செய்வது

//உணவு பொருட்களில் அதிகமாக மருந்து (chemical)இருக்கிற மாதிரி தோன்றுகிறது இது உண்மையா?

//இந்தியாவிலேயே இருக்கு இது. அதிகமாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாக இருக்கிறதும் உண்டு.

//உண்மையெனில்// அறுவடை முதல், பயணம் & விற்பனை வரை நல்ல நிலையில் இருக்க இப்படிச் செய்வதாகச் சொல்கிறார்கள்.

//அது உடலுக்கு கெடுதல் அல்லவா!// ஆம்.

//இதற்கு என்ன செய்வது//
1. நீங்களே காய்கறிகளை வளர்க்கலாம்.
2. ஆர்கானிக் கடைகளைத் தேடிப் பிடித்து வாங்கலாம்.
3. வளர்ப்போரிடமிருந்து நேரடியாகக் கொள்வனவு செய்யலாம்.

‍- இமா க்றிஸ்

லெமன் ஊறுகாய் செய்வதற்காக லெமன் உப்பு மஞ்சள் பொடி போட்டு ஊறவைத்திருந்தேன் லெமன் ஊறிவிட்டது ஆனா‌ல் அதிகமாக கசக்கிறது பா என்ன செய்வது யாராவது உதவுங்கள் பா

//அதிகமாக கசக்கிறது//
1. கீழே உள்ள குறிப்புக்களைப் படித்த பின் - இன்னும் கொஞ்சம் லெமன் ஊற வைத்துச் சேர்க்கலாம்.
2. சில வகை லெமன்களில் விதைகள் இருக்கும். அவற்றை நீக்கிவிட்டு ஊறவைத்தால் கசப்புக் குறையலாம்.
3. விதைகள் முழுவதாக இருந்தால் அதிகம் கசக்காது. காய்களைத் துண்டாக்கி ஊற வைக்காமல், தோலை மட்டும் சற்று ஆளமாகக் கீறி உள்ளே வைக்க வேண்டியதை வைத்து ஊற விடலாம்.
4. நான் மஞ்சள் போடுவது இல்லை. அடுத்த தடவை மஞ்சள் அளவைக் குறைத்துப் பார்க்கலாம் நீங்கள்.
5. உங்கள் ரெசிபி என்னவென்று தெரியவில்லை. எண்ணெய் சேர்ப்பீர்களா? அப்படியானால் அந்த ஸ்டெப் ஆன பின்பு கொஞ்சம் கசப்பு குறையும்.

‍- இமா க்றிஸ்

ஒரு குட்டி ரிசர்ச் பண்ணிட்டு வந்தேன். :-) 'அங்க' கலக்கறீங்க; இங்க டவுட்டு கேக்கறீங்க. எதை நம்பன்னு புரியல. :-)

இங்க இமா போடுற பதில் எல்லாம் அறுசுவைக்கு சொந்தம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்