தேதி: February 27, 2007
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வேர்க்கடலை - 200 கிராம்,
காய்ந்த மிளகாய் - 2,
பச்சை மிளகாய் - 2,
சின்ன வெங்காயம் - 7,
சீரகம் - 1 டீஸ்பூன்,
தனியா - 1 டீஸ்பூன்,
பூண்டு - 3 பல்,
புளி - நெல்லிக்காய் அளவு,
கறிவேப்பிலை - 10,
கொத்தமல்லி - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 2 ஸ்பூன்.
வேர்க்கடலையை வறுத்து, தோல் நீக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் சீரகம், தனியா போட்டு, சிவக்க விட்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, புளி, இரண்டாக ந்றுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி, வேர்க்கடலை சேர்த்து, ஒரு புரட்டு புரட்டி இறக்கவும்.
ஆறிய பின் உப்பு சேர்த்து, கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
Comments
செல்விம்மா
உங்கள் வண்ணமிகு எலும்மிச்சை சாதத்துடன் தொட்டுக் கொள்ள வேர்க்கடலை துவையல் செய்தேன்.நல்லா இருந்தது.எப்போதும் வறுத்து அரைத்த துவையல்தான் செய்வேன்.இனி இந்த துவையலும் செய்வேன்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
எங்க ஊர் ஸ்பெஷல்...
அன்பு கவி சிவா,
பாராட்டுக்கு நன்றி. எங்க ஊர் ஸ்பெஷல்பா இது.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.