ஆண் குழந்தை பெயர்

எனக்கு முதல் குழந்தை பெண்.இப்போது 6 மாதம் இரண்டாவது குழந்தை உண்டாகி இருக்கேன்.ஆண் குழந்தை என்று டாக்டர் சொன்னாங்க. என் கணவரின் தம்பி 4 வயதில் இறந்துடாங்க. அவரின் பெயர் ஈஸ்வரன். ஆண் குழந்தை பெறந்தா அந்த பெயர் வைக்க வேண்டுமென நாங்கள் நினைத்திருந்தோம்.இப்போது என் அம்மா சொல்றாங்க ஓரு கோவில்க்கு போனாங்களாம் அங்க உன் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தால் மணிகண்டன் ணு பெயர் வைக்கனும் அப்படினு.இபபோ ஓரே குழப்பமா இருக்கு.என்ன பெயர் வைக்கனு. கொஞ்சம் உதவுங்கள் தோழிகளே.

முதலில் என் வாழ்த்துக்கள் :)

இப்போ 6 மாதமென்றால் டெலிவரி டேட் எப்போது?

பேசாம மணிகண்ட ஈஸ்வரன், மணிகண்ட ஈஸ்வர்னு வச்சிடுங்களேன்.. இரண்டும் சேர்த்து வைக்க கூடாதா?

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

;)) இன்று என் கண்ணில் படுவதெல்லாம் மணியாகவே இருக்கிறது. ;)

சூப்பர் ஐடியா கொடுத்திருக்கீங்க அபி.

‍- இமா க்றிஸ்

நன்றி அபி.நன்றி இமா அம்மா. ஆமா அபி நீங்கள் சொன்ன மாதிரி தான் எனி வைக்கனும். பெயர் தான் ரொம்ப பெருசா இருக்கும்.

ஜனவரி 30 அபி

ஓகே ரேவதி.. :)

நல்லா ஹெல்த்தியா சாப்பிடுங்க.. நல்லா ரெஸ்ட் எடுங்க.. டைம் கிடைச்சா புத்தகம் படிங்க..பாட்டு கேளுங்க..தினமும் அத்திப்பழம், Dried கருப்பு திராட்சை சாப்பிடுங்க.. ஹீமோகுளோபின் குறையாமல் இருக்கும்.. :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நான் மிகவும் ஓள்ளியாக இருக்கேன் எல்லாரும் கேளி செய்கின்றனர் உடல் எடையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் நான்

யார் சொல்வதையும் கேட்க வேண்டாம் நீங்கள் முடிவு செய்யுங்க அது உங்கள் குழந்தை revathi

பெயரைச் சரியாகச் சொல்லியிருக்கிறேனா? :‍)

எடையை அதிகரிப்பது சுலபம். எதையும் தவிர்க்காமல் சாப்பிடலாம். அளவு கணக்குப் பார்க்காமல் சாப்பிடலாம். நிறைய‌ தூங்கலாம்; டீவீ பார்க்கலாம். முடிந்த‌ பொழுது எல்லாம் கம்ப்யூட்டரில் உட்காரலாம். (சிலருக்கு இவை எதுவும் எடையைக் கூட்டாது.)

எடையை போட‌ ஆரம்பித்தால் பிறகு நிறுத்துவது கஷ்டம். குறைப்பது அதை விடக் கஷ்டம். நீங்கள் ஆரோக்கியமாக‌ இருந்தால், ஒல்லியாக‌ இருப்பது பற்றி யோசிக்க‌ வேண்டாம் என்பது என் அபிப்பிராயம்.
~~~~~
எடை அதிகரிக்க‌, பின்வரும் இழைகளில் குறிப்புகள் கிடைக்கும்.
www.arusuvai.com/tamil/node/16994
www.arusuvai.com/tamil/node/31746
www.arusuvai.com/tamil/node/27818
www.arusuvai.com/tamil/node/16994?page=3
www.arusuvai.com/tamil/node/29358
www.arusuvai.com/tamil/node/9303
~~~~
அடுத்த‌ தடவை சரியான‌ இழையைப் பிடித்துக் கேள்வியை வையுங்கள். :‍) இது 'ஆண் குழந்தைகளுக்கான‌ பெயர்' என்ற‌ தலைப்பில் உள்ள‌ இழை.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்