எங்களுக்கு Newzealandஇல் permanent Resident கிடைத்துள்ளது. என் மகனுக்கு ஏழு வயது ஆகிரது. அங்கு பள்ளி பற்றி சொல்லவும். எங்களுக்கு அங்கு யாரும் தெரியாது. தமிழ் ஆட்கள் உள்ளார்களா. வீடு வாடகை எப்படி. படிப்பு எப்படி. இரண்டாம் வகுப்பு சேர என்ன சொல்லி தர வேண்டும்.
ஜெயா ஆனந்த்
இங்கே நியூசிலாந்து (Auckland) டீச்சர் ஒருத்தர் இருக்காங்க.. :)))). இப்போ அதிகாலை நேரம்.. நாளைக்கு பார்த்ததும் கட்டாயம் பதில் சொல்வாங்க..:)
இமாம்மா சும்மா... :))))
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி
ஜெயா ஆனந்த்
Kia ora. Haere mai Nau mai. வருக வருக. :) எப்போ வரீங்க?
//அங்கு பள்ளி பற்றி சொல்லவும்.// நீங்க எந்த ஏரியால வீடு பிடிக்கிறீர்களோ அதே Zone இல் உள்ள ஸ்கூலில் அட்மிஷன் எடுக்க வேண்டும். ப்ரைவட் ஸ்கூலில் சேர்ப்பதானால் ஸோனில் இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. ஸ்கூல் ஃபீஸை... ;) டொனேஷன் என்பார்கள். (சில பாடசாலைகளில் அட்டென்டன்ஸ் என்றும் சொல்வது உண்டு.) யூனிஃபார்ம்... பாடசாலைக் கடையிலோ, யூனிஃபார்ம் ஷாப்பிலோ (ஸ்கூல் பெயரைச் சொல்லி) வாங்கலாம். இந்த லைனில் இன்னும் கொஞ்சம் விபரம் சொல்லலாம். இப்போதைக்கு இது போதும். ஸ்கூலிலேயே தேவையான விபரங்கள் அச்சடித்த prospectus கிடைக்கும். அதில் எல்லா விபரங்களும் இருக்கும்.
//தமிழ் ஆட்கள் உள்ளார்களா.// நிறைய இருக்கிறாங்க. நீங்கள் இந்து என்று நினைக்கிறேன். கோவில்கள் இருக்கின்றன. பையனைப் பாடசாலையில் விட ஆரம்பித்ததும் பாடசாலை வழியாக பல இந்தியர்களைச் சந்திப்பீர்கள். குறிப்பிட்ட சில இடங்களில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். வார விடுமுறையில் தமிழ்ப் பாடசாலைகள், நடனம், சங்கீதம் கற்கும் வசதிகள் எல்லாம் உண்டு.
//வீடு வாடகை எப்படி.// நீங்கள் 3 பேர் என்பதால் ஆரம்பத்திற்கு ஒரு யூனிட் (ஃப்ளாட்) வாடகைக்குப் பிடிக்கலாம். எல்லா வீடுகளும் கிச்சன் ரேஞ்ச் (பெரும்பாலும் அவனும் இருக்கும்) உள்ளதாக இருக்கும். 2 வாரங்களுக்கான வாடகை bond என்று கட்ட வேண்டும். கடைசியில் டாமேஜ் இருந்தால் கழித்துவிட்டு மீதியைக் கொடுப்பார்கள். சராசரி... வாரத்துக்கு $270 _ $300 இடத்தைப் பொறுத்து ஆகும். நீங்கள் PR உடன் வருவதால் வீட்டுத் தளபாடங்கள் கொண்டுவர முடியும். அப்படியானால் அதற்கேற்ப வீடு பார்க்க வேண்டி இருக்கும்.
//படிப்பு எப்படி.// குழந்தைகளுக்குப் பாரமில்லாத ஆரோக்கியமான கற்றல் முறை. //இரண்டாம் வகுப்பு சேர என்ன சொல்லி தர வேண்டும்.// எதுவும் சொல்லிக் கொடுக்க வேண்டாம். இப்போ ஸ்கூல் போறாங்க இல்ல! அந்த அறிவே போதும். பாடசாலையில் பார்த்து தேவையான எக்ஸ்ட்ரா உதவிகள் கொடுப்பாங்க. பிரச்சினை இராது. நீங்கள் இப்போ சிரமப்படுத்த வேண்டாம். இங்குள்ள பெரும்பாலான இந்தியக் குழந்தைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். மற்றவர்களை விட முன்னால் இருக்கிறார்கள்.
ஃபேஸ்புக்ல இருந்தீங்கன்னா imma chris க்கு ஒரு இன்வைட் அனுப்புங்க. இப்படித் தட்டுறதை விட சாட்ல பேசுறது உங்களுக்கு வசதியாக இருக்கும். நிறைய விபரங்கள் சொல்லலாம். :-)
- இமா க்றிஸ்
அபி
இனி இப்படி யாரையாவது கண்டால் எனக்கு அங்க ஒரு மெசேஜ் அனுப்புங்க. முன்னால ஒரு தடவை இங்கு வசிக்கும் ஒரு தோழி என் பெயரையே குறிப்பிட்டுக் கேள்வியை வைச்சிருந்தாங்க. நான் பார்க்கும் போது பல மாதங்கள் கடந்துவிட்டது. இன்றுவரை அவர்களோடு தொடர்புகொள்ள முடியவில்லை. ;(
- இமா க்றிஸ்
Nanri. I send message in
Nanri. I send message in fb.pls see and help me.நீங்க மட்டும் தான் இப்போதைய என் தோழி. புதிய இடம் மாற கொஞ்சம் பயம்.
jaya