காப்பா் T -சந்தேகம்

தோழிகளே
காப்பா்-T பற்றி யாரேனும் கூறுங்கள் அதை பயன் படுத்தினால் வலிக்குமா?
ஏதேனும் உடல் உபாதைகள்ஏற்படுமா?
ப்லீஸ் பதில் கூறுங்கள்

//காப்பா் டியூப்// :‍) இதை எடிட் பண்ண‌ மறந்துட்டீங்க‌ மைதிலி.

//அதை பயன் படுத்தினால் வலிக்குமா?// பொதுவாக‌ இராது.
//ஏதேனும் உடல் உபாதைகள்ஏற்படுமா?// பொதுவாக‌ இராது.

சிலருக்கு இருக்கலாம். அப்படிச் சிரமங்கள் இருந்தால் எந்த‌ நேரம் வேண்டுமானாலும் அதை நீக்கிவிட்டு வேறு கர்ப்பத்தடை முறைகள் பயன்படுத்தலாம்.

‍- இமா க்றிஸ்

இமா அம்மா
நன்றி மா காப்பர் T use பன்னா weight gain ஆகும்னு கேள்வி பட்ட அதனால வேண்டாம்னு விட்டுட்ட

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

:‍) அது எப்படி வெய்ட் போடும்? !!!

இப்போ நீங்க‌ 4 பிஸ்கட் சாப்பிடுறீங்கன்னு வைங்க‌. உடம்பு அந்த‌ 4 பிஸ்கட்டுக்கான‌ அளவு கலோரிகளைத் தானே எடுக்கும்? எடை குறையும் என்றால் நம்பலாம். அதை விட்டு இந்த‌ காப்பர் T மாஜிக் மாதிரி இன்னும் 2 பிஸ்கட் கலோரியைச் சேர்க்குமா? இல்லைல்ல‌?

நீங்க‌ சாப்பிடுறதைக் கவனிச்சு, ஆக்டிவாகவும் இருந்தால் காப்பர் T யால‌ உங்க‌ எடையைக் கூட்ட‌ முடியாது.

‍- இமா க்றிஸ்

காப்பர்-டி பயன்படுத்தலாம்.. வலி ஏதும் இருக்காது..ஆனால் சிலருக்கு காப்பர்-டி ஒத்துக் கொள்ளாது..
நான் முதல் குழந்தை பிறந்த சமயம் 9 மாதம் போட்டிருந்தேன்..4 மாதம் எந்த பிரச்சனையும் இல்லை.. அடுத்த மாதத்தில் இருந்து மாதத்தில் 20 நாள் ரத்தபோக்கு இருந்தது.. எடையும் ரொம்ப குறைந்தது..என் மருத்துவர் செக் செய்து விட்டு Remove பண்ணிவிட்டார்கள்..
ஆனால் எல்லோருக்கும் இப்படி இருக்காது.. 3, 4 வருடம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நிறைய பேர் இருக்காங்க..நீங்கள் போட்டு பாருங்கள்..ஏனென்றால் உடல் ஏற்றுக் கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லாத ஈசியான கருத்தடைமுறை..:-)
(அன்றே பதில் சொல்ல நினைத்தேன்..இன்று தான் நேரம் கிடைத்தது)

அவந்திகா

நன்றி அவந்திகா
நீங்கள் கூறியது போலதான் இரத்தபோக்கு அதிகமாக இருக்கும் வலி அதிகமாக இருக்கும் என்று என் அக்கா சொன்னாங்க அதான் நான் கொஞ்சம் குழம்பி விட்டேன் ...
நானும் உபயோகித்து பாா்க்கின்றேன்...

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

avanthika sister kekaranu thappa nenachukathinga pls ippo family planning pannitingala sollunga pls. laparoscopy irukku apadi solranga yethu bestnu theriyala athunalatha kekara.

எனக்கு சிசேரியன் என்பதால் சேர்த்தே செய்துவிட்டார்கள்..நாங்கள் முன்பே என்ன குழந்தையாக இருந்தாலும் செய்ய சொல்லி இருந்தோம்..அதனால் செய்தார்கள்..
நார்மல் டெலிவரியாக இருந்தால் திரும்ப ஆபரேஷன் செய்ய வேண்டும்..ஆனால் இதில் குழந்தையை செக் செய்து ஆரோக்கியமாக, எடை சரியான அளவில் இருந்தால் ஒரே தடவையில் செய்து விடுவார்கள்..
லேப்ராஸ்கோப்பி பற்றி எனக்கு தெரியாது..நீங்கள் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பதே சிறந்தது..

அவந்திகா

thank u sister

மேலும் சில பதிவுகள்