தேதி: February 27, 2007
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முருங்கைக்காய் - 3,
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்,
தேங்காய் - 1 மூடி,
வறுத்த வேர்க்கடலை - 1/2 கைப்பிடி,
சின்ன வெங்காயம் - 10,
தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன்,
கறிவேப்பிலை - 10,
உப்பு - தேவையான அளவு.
தேங்காயை துருவி, வேர்க்கடலையுடன் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
முருங்கைக்காயை நறுக்கி, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து தண்ணீரில் வேக வைக்கவும்.
காய் வெந்தவுடன், அரைத்த தேங்காய் கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
5 நிமிடம் கொதித்த பின் இறக்கி வைக்கவும்.
தேங்காய் எண்ணெயை காய வைத்து நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இறக்கி வைத்துள்ள குழம்பில் கொட்டி கலக்கவும்.
சூடான சாதத்திற்கும், தோசைக்கும் பொருந்தும்.
Comments
அருமை! அருமை!
வித்தியாசமான குறிப்பாக இருக்கிறதே என்று ட்ரை பண்ணிப் பார்த்தேன். செய்வதற்கும் ஈசியாக இருந்தது. நன்றாகவும் வந்தது. உங்கள் குறிப்புகள் எல்லாமே வித்தியாசமாகவும், புதிதாகவும் இருக்கிறது. அளவுகளும் சரியாக இருக்கிறது. இன்னும் நிறைய கொடுங்கள். நன்றி.
Dear மலர்,
Thank U very much for your comments. I will try to give more receipes, if time permits. These receipes were already tried by me so many times, that's y I am able to give correct proportions. I have 2 victims (my husband n my son) to test the things. Thank u dear.
அன்புடன்,
செல்வி.
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
செல்வி மேடம்,
இன்று நீங்கள் கொடுத்து இருந்த முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு செய்வதற்கு தேங்காயும் நிலக்கடலையும் சேர்த்து அரைத்து வைத்து விட்டோம். முருங்கைக்காய் வாங்குவதற்கு கடைக்குப் போக முடியவில்லை. அதனால் வெங்காயத்துடன் பூண்டு வதக்கி சேர்த்து கொதிக்க விட்டேன். சுவை நன்றாக உள்ளது. சுவை ரொம்ப பிடித்து இருக்கிறது. அடுத்த வாரம் மீண்டும் ஒரு முறை இந்த குழம்பு செய்கிறேன்.(முருங்கைகாய் வாங்கி சேர்க்கிறேன்) இனி வாரம் ஒரு முறை இந்த குழம்பு கட்டாயம் வைப்பேன்.
நன்றி, செல்வி மேடம்
அன்புடன்
சீதாலஷ்மி
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு ...
அன்பு தோழி சீதாலக்ஷ்மி,
ஆஹா நீங்க மிஸ் பண்ணிட்டீங்க, முருங்கைக்காய் சேர்த்திருந்தால் ரொம்ப மணமாயிருந்திருக்கும். காலைல எல்லாம் மழை தானே? அதான் வாங்க முடியலையோ ! இனி வாரமொருமுறை இந்த குழம்பு செய்வதற்கு மிக்க நன்றி.பாராட்டுக்கு நன்றி.
அன்புடன்,
செல்வி.
அன்புடன்,
செல்வி.